அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் காட்சி அடங்கிய காணொளியொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் ஜேம்ஸ் பொலி எனவும் அவர் சிரியாவில் வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவினால் தமது இயக்கத்திற்கு எதிராக ஈராக்கில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் முகமாகவே குறித்த ஊடகவியலாளரை கொலைசெய்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளளனர்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இக்காணொளி இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு செய்திச்சேவைகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version