இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்யவேண்டும். இலங்கை மக்கள் இந்திய பிரதமரின் வருகைக்காக ஆர்வமாக உள்ளனர்.
சீன ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோர் இலங்கைக்கு வர முடியுமானால் ஏன் இந்திய பிரதமரால் வர முடியாது. இவ்வாறு மக்கள் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நாங்கள் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எதிர்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது.பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும். மாகாண சபைகள் தமது பிரதேசங்களை நிர்வாகம் செய்வதற்கான அதிகாரங்களை ஏற்கனவே கொண்டுள்ளன என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார்.
இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர் களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்யவேண்டும். இலங்கை மக்கள் இந்திய பிரதமரின் வருகைக்காக ஆர்வமாக உள்ளனர்.
சீன ஜனாதிபதி ஜப்பான் பிரதமர் ஆகியோரினால் இலங்கைக்கு வர முடியுமானால் ஏன் இந்திய பிரதமரால் வர முடியாது. இவ்வாறு மக்கள் கேட்கின்றனர் .
எனவே இந்திய பிரதமர் இலங்கைக்கு வருவது மக்களின் தேவையாகவுள்ளது. நான் அவரை இறுதியாக சந்தித்தபோது இலங்கை வருமாறு அழைத்தேன்.
நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டிலும் நான் அவரை சந்திப்பேன். சார்க் நாடுகளை பலப்படுத்துவதில் மோடி உறுதியாக இருக்கின்றார். தமிழ்நாட்டில் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கள் அனைத்தும் அரசியலாகும். அவற்றை நான் பாரதுரமானதாக எடுக்கவில்லை.
சர்வதேச நிபுணர் குழு
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச நிபுணர் குழுவுக்கு புதிதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிபுணர்கள் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவார்கள். தமது வெளிநாட்டு அனுபவங்களைக்கொண்டு ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவார்கள். காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமையவே இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றது என்பதற்காக உள்ளுரில் விசாரணை செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. 1988 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனோர் தொடர்பாக நானும் செயற்பட்டிருந்தேன்.
அந்தவகையில் தற்போதும் காணாமல் போனோர் தொடர்பில் கூறப்படுகின்றது. எனவே அதனால் இவ்வாறான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. யாரும் இதில் முறைப்பாடுகளை செய்யலாம். இந்தக் குழுவுக்கு தற்போது 20000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அறிக்கை வந்ததும் பார்ப்போம்
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழு கால நீடிப்பை கோரினால் காலம் நீடிக்கப்படும். விசாரணை முடிந்ததும் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் .
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் என்ன செய்வதென்று பார்ப்போம். இவ்வாறான செயற்பாட்டுக்கும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த செயற்பாட்டை முன்வைத்தாலும் விமர்சிப்பார்கள். ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நான் உண்மைகளை கண்டுபிடிப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். காணாமல் போனோர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும்.
தடை வராது
எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அச்சுறுத்தவில்லை. பிரிட்டனும் அமெரிக்காவும் தமக்கு இவ்வாறு தடைகளை விதிக்கும் நோக்கம் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
மருதானை சம்பவம் அரசுக்கு தொடர்பில்லை
மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1988 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் நாங்கள் அந்த இடத்தில் இவ்வாறு கூட்டங்களை நடத்தும்போது இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இடம்பெற்ற சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இல்லை.
விசாரணையாளர்கள் வர அனுமதியில்லை
இலங்கையி்ல் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நாங்கள் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எதிர்க்கின்றோம். இந்த விடயத்தில் மிகவும் பக்கச்சார்பான வகையில் செயற்பட்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.
இந்தக் குழுவை யாரும் ஏற்கவில்லை. அதனை நியமித்தவர்களே ஏற்றுள்ளனர். எனவே நாங்கள் அதனை ஏற்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இந்த விடயத்திலான செயற்பாடுகள் பக்கச்சார்பானவை என்று தெரிந்துவிட்டது. எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களுடன் நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்படுவோம்
மக்களுக்கு சேவையாற்றாத வட மாகாண சபை
வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு சேவையாற்றுவதைவிடுத்து அரசியல் செய்துவருகின்றது. பொலிஸ் அதிகாரங்களை தவிர அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
காணி அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றே கூறலாம். காணி விடயத்தில் மாகாண சபையை கேட்காமல் மத்திய அரசா்ஙகத்தினால் எதனையும் செய்ய முடியாது. ஆனால் வடக்கு மாகாண சபையானது பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றதே தவிர மக்களுக்கு சேவையாற்றவில்லை.
பொலிஸ் அதிகாரங்கள் இல்லை
இவர்கள் அரசியல் செய்துகொணடிருக்கின்றனர் என்பது மக்களுக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பதிலியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை.
அவர்கள் சர்வதேச தலையீட்டின் ஊடாக அதிக அதிகாரங்களை பெற முயற்சிக்கின்றனர். எந்தவொரு சூழ்நிலையிலும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது.
பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும். புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் இன்னும் ஆபத்து உள்ளது. இந்த விடயத்தில் நான்கு அல்லது ஐந்து முயற்சிகளை நாம் கண்டோம். தேசிய பாதுகாப்பு எந்தவகையிலும் விட்டுக்கொடுப்புக்கு உட்படுத்தப்பட முடியாது.
Cl