காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம் பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணம் செய்ய இருக்கும் வாலிபருடன் ஐதராபாத் காசிம் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தனியாக இருந்தார்.

இதையறிந்த அந்த பகுதி தாதா இளைஞர் முகமது, சையத் அன்வர், அலி ஆகியோர் சுவர் ஏறி குதித்து அந்த பண்ணை வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை தடுத்த காவலாளியை தாக்கி மயக்கம் அடையச் செய்தனர்.

பின்னர் அவர்கள் தன் நண்பர்களை கைபேசியில் அழைத்தனர். மொத்தம் 9 பேர் அங்கு திரண்டனர். அவர்கள் இளம் பெண்ணின் வருங்கால கணவரை தாக்கி கட்டிப்போட்டு முழங்காலிடச் செய்தனர்.

அவரது கண் முன்பே அவரை மானபங்கபடுத்தினர். அதற்கு இனங்க மறுத்த கீதாவை விஷ பாம்பு காட்டி மிரட்டினர். பாம்பை அவரது உடலில் ஊர்ந்து செல்ல வைத்து அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக களையச் செய்தனர்.

பின்னர் 9 பேரும் அந்த பெண்னை கொடூரமாக பலாத்காரம் செய்து அந்தக் காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

அந்த வெறி பிடித்த கும்பலிடம் தப்ப அந்த பெண் தற்கொலைக்கு முயன்ற போது அதை பார்த்து இரசித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

இது குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீசைலத்தில் பதுங்கி இருந்த முகமது, சையத் அன்வர், அலி, தயானி, சாலம் ஹமனி, காதர், காஜா அகமது, பைசல் சயானி, சையத் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version