நியூயார்க்:ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று கூறிக் கொண்டு பிரபலங்கள் தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்கிறார்கள்.
இதை கடந்த சில நாட்களாக நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் தங்கள் தலையில் குளிர்ந்த நீரை ஊற்ற உன்னதமான காரணம் உண்டு
ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் பிரபலங்கள் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை தங்கள் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள்.
அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். இந்த நோய் பாதித்தவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் எந்த செயல்களும் இருக்காது.
ஆயுள்
ஏ.எல்.எஸ். நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோயாளிகளில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளை தாண்டி வாழ்வார்கள்.
பிரபல எழுத்தாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஏ.எல்.எஸ். நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடித்துள்ளார். இது மிகவும் அரிது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
இந்த ஏ.எல்.எஸ். நோய் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் தான் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவால் தற்போது மகிவும் பிரபலமாகி வருவதுடன் நிதியும் குவிகிறது.
ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொள்பவர்கள் தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்ட பிறகு 3 பேருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்காவிட்டால் 100 அமெரிக்க டாலரை ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.
அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் வீரரும், ஏ.எல்.எஸ். நோயாளியுமான பீட் ஃபிராட்ஸ் ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவருக்கு இந்த ஐடியாவை அவரது நண்பர் ஒருவர் கொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
ஃபிராட்ஸ் கேட்டுக் கொண்டதற்கு பிறகு கடந்த ஜூலை 29ம் தேதியில் இருந்து ஐஸ் பக்கெட் சவால் பற்றி ட்விட்டரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஸ் பக்கெட் சவாலை அடுத்து ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு இதுவரை ரூ. 247 கோடி நிதி கிடைத்துள்ளது. சவாலை ஏற்று தங்கள் தலையில் நீரை ஊற்றிக் கொள்பவர்கள் 10 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக தர வேண்டும். அல்லது அவர்கள் விரும்பினால் எவ்வளவு தொகையையும் நன்கொடையாக அளிக்கலாம்.
உலக மக்கள் தொகையில் லட்சத்தில் இருவருக்கு ஏ.எல்.எஸ். நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.
இணையதளத்தில் தற்போது இந்த ஐஸ் பக்கெட் சவால் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த சவாலை ஏற்று வருகின்றனர்.
உலகெங்கிலும் சூடுபிடிக்கும் ‘ஐஸ் பக்கெட்’ சவால்
ஏஎல்எஸ் எனப்படும் நரம்பு தொடர்பான நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக உலகப் பிரபலங்கள் தலையில் குளிர் நீரை ஊற்றிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சவால் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.
ஒருவர் தலையில் குளிர்நீரை ஊற்றிக்கொண்டு, இன்னொருவருக்கு சவால் விடுப்பார். சவால் விடுக்கப்பட்ட நபர் பதிலுக்கு தானும் குளிர் நீரை ஊற்றிக்கொண்டால் 10 டாலர்களை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாகக் கொடுக்கமுடியும்.
சவாலை ஏற்றுக்கொள்ளத் தவறினால் 100 டாலர்களை தொண்டு நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்பது தான் இந்த ஐஸ் பக்கெட் சவாலின் நிபந்தனை.
இதுவரை பல மிலியன் நிதி இந்த வழியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கிளிண்டன், ஃபேஸ்புக் இணையதளத்தின் உரிமையாளர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சவாலில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.