image1

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

லைகா நிறுவனம், இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானது என கூறப்படுகின்றது.

எனவே இந்த நிறுவனத்தை தமிழகத்தில் சினிமாவில் கால்பதிக்க விடக்கூடாது என்று கூறி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

கத்தி படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறி வருகின்றனர். சமீபத்தில்  65 அமைப்புகள்  மற்றும் கட்சிகள் இணைந்து கத்தி படத்துக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பிலிருந்து லைகா விலகிக் கொள்ளும், அதற்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தைத் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.

சொன்னபடியே நேற்று மாலை கத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயரே இவற்றில் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா நானே என்பேச்சை கேட்க மாட்டேன்’ – இது விஜய் நடித்த போக்கிரி படத்தில் அவரே பேசுவதாக வரும் பஞ்ச் வசனம்.

கிட்டத்தட்ட அதற்கு நிகரான ஒரு வசனத்தை ஆங்கிலத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விஜய்.

அது: ‘ஒரு முறை முடிவு பண்ணிட்டா… வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும் (Once if u decide to do something, don’t wait for anything.. Go ahead!).’

நமது விமர்சனம்

யாராரோ  கோடிக்கணக்கான பணத்தை போட்டு,   ஊழியர்கள், தொழிநுற்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், வினியோகஸ்தர்கள்  என  பல்லாயிரக்கணக்கானோர்   தங்களின்  உழைப்பை  மூலதனமாக்கி  வெய்யிலிலும், மழையிலிலும், குளிரிலும்   மிகவும்  கஸ்ரப்பட்டு  உருவாக்கிய  ஒரு படத்தை…,   ‘வேலை வெட்டியில்லாமல்…சும்மாயிருந்து  சோத்துப் பார்சலுக்காகவும், மது போத்திலுக்காகவும்’, புலம்பெயர் தமிழர்களிடமிருந்து   பணம் பெற்றறுக் கொள்வதற்காககவும்    இயங்கிகொண்டிருக்கும்    (தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, நாம்  தமிழர் கட்சி .. )  65  அமை்புகள்   கத்தி  படத்தை எதிர்க்கிறார்களாம்!!

ஏன்  இவர்கள் கத்தி  படத்தை  எதிர்ப்பதைவிட   65  அமை்புகளும்  ஒன்று   சேர்ந்து  கத்தி படத்தை விலைக்கு வாங்கி வெளியிடலாமே?   சோத்துப் பார்சலுக்காககே  வழியில்லை  படத்தை வாங்க முடியுமா?

 

Share.
Leave A Reply

Exit mobile version