வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது.
ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´ எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான ´தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்´ மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும்.
ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் ´செல்ஃபி´ எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இது அந்தப் பதிவைப் பார்த்த பலரையும் ஆச்சரியத்தில் உறையச் செய்தது.
இவர்கள் ´செல்ஃபி´ எடுக்கும் வீடியோ தான் தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது.
ஆகஸ்ட் 21- ஆம் திகதி யூடியூபில் புகைப்படவியலாளர் டானியல் லாவால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, தற்போதைய நிலையில் 221,623 பேரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை படித்துக்கொண்டிருக்கும் போது இந்த எண்ணிகை அதிகரித்திருக்கக் கூடும்.
இதுவரையில் எடுக்கப்பட்ட ´செல்ஃபி´- க்களில் இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது என்று இணையவாசிகளால் கூறப்படுகிறது.
அழகாக தகர்க்கப்பட்ட கட்டிடம் (வீடியோ)
வழமைபோல் அல்லாது அந்த பழைமையான கட்டிடத்தை தகர்ப்பதற்கு முன்னதாக வாண வேடிக்கைகளுடன் அதனை தகர்த்திருக்கிறார்கள்.
அழகழகான வண்ணத்தில் புகைகள் கட்டிடத்தில் இருந்து கிளம்ப அது, தகர்ந்து தரைமட்டமாகியுள்ளது.
பலநூற்றுக்கணக்கான மக்கள் அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட காட்சியை நேரடியாகப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
அது குறித்த ஒரு காணொளி.