உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் ஐஸ் பக்கெட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் நடிகை ‘குத்து ரம்யா’ ஐஸ் பக்கெட் சேலஞ்சை மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னட மொழியில் உள்ள பிரபல கதாநாயகர் ஒருவர் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் நடிகை குத்து ரம்யாவை பரிந்துரை செய்தார். ஆனால் அவருடைய பரிந்துரையை ஏற்க ரம்யா மறுத்துவிட்டார்.
ஏ.எல்.எஸ் அமைப்பிற்கு நிதி கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஐஸ் பக்கெட் சேலஞ்சை ஏற்று, அதில் குளித்து அதை வீடியோவாக எடுத்து இண்டர்நெட்டில் பதிவு செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், கூறியுள்ளார்.
மேலும் அவர் பிரபலங்களிடம் தண்ணீரை சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பக்கெட் தண்ணீர் வீணாவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாலிவுட்டில் சோனாக்ஷி சின்ஹா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் சவாலை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அநத வரிசையில் நடிகை குத்து ரம்யாவும் இணைந்துள்ளார்.
ஷங்கருடன் மோத தயார். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டேன். ஏ.ஆர்.முருகதாஸ் ஆவேச பேட்டி
26-08-2014
கடந்த இரண்டு வருட உழைப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படம் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் கத்தி தீபாவளிக்கு வெளிவருமா? அல்லது ஐ படத்திற்கு வழிவிடுமா/ என்று கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்-முருகதாஸ் ஜோடியின் ‘துப்பாக்கி’ திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதே செண்டிமெண்டாக கத்தி படத்தையும் தீபாவளி தினத்தின் திரையிட ஏ.ஆர்.முருகதாஸ் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஷங்கரின் ‘ஐ’ வெளியாகும் என்ற அறிவிப்பால் கத்தி குழுவினர் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பார்கள் என கூறப்படுகிறது. ஐ படத்திற்கு பெரும்பாலான தியேட்டர்கள் புக் ஆகும் என்ற நிலை இருக்கின்றது.
மேலும் கத்தி படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், அந்த படத்தை தடையின்றி வெளியிட முடியுமா? என்ற தயக்கமும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் இருப்பதால் அனைவரும் தீபாவளிக்கு ‘ஐ’ படத்தை தங்கள் தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இயக்குனர் முருகதாஸ், ‘கத்தி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும். தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த பொங்கல் தினத்தன்று விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸான மாதிரி வரும் தீபாவளிக்கு கத்தியும் ஐயும் ரிலீசாகும் என்றும் இதில் தியேட்டர்கள் ஒதுக்குவதில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்றும் முருகதாஸ் கூறியுள்ளார்.
அரை மணி நேரம் விடாமல் அழுத நயந்தாரா!
26-08-2014
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’அமரகாவியம்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, நயன்தாரா 30 நிமிடம் தேம்பி, தேம்பி அழுதுள்ளார்.
ஆர்யா தயாரிப்பில், ‘நான்’ திரைப்பட புகழ், ஜீவா சங்கர் இயக்கி, உருவாகியிருக்கும் திரைப்படம் ’அமரகாவியம்’. சமீபத்தில், இந்த படத்தின் சிறப்பு காட்சியை நெருங்கிய நண்பர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார் ஆர்யா.
அந்த நண்பர்களில் நயன்தாராவும் ஒருவராம். படத்தை பார்த்த நயன்தாரா, சுமார் அரை மணி நேரம் விடாமல் தேம்பி, தேம்பி அழுதுள்ளார். காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது ’அமரகாவியம்’.
இதை பார்த்ததும், தனக்கு பல பழைய நினைவுகள் வந்துவிட்டதாக நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார் நயன். இந்த தகவலை ஜீவா சங்கரும் உறுதி செய்துள்ளார். மனரீதியாக உறுதியானவர் நயன்தாரா.
அவரே எனது கதையை பார்த்துவிட்டு கலங்கிவிட்டார். எனவேதான் வெகுநேரமாக அவர் அழுதபடி இருந்தார். அவ்வளவு ஏன், வீட்டுக்கு திரும்பிய பிறகும் நயன்தாரா அழுதுள்ளார்.
படத்தை பார்த்த ஐந்து நாட்களுக்கு பிறகு நயன்தாரா என்னை தொடர்பு கொண்டார். அப்போது, என்னால் இந்த படத்தை பற்றி யோசிப்பதை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்று நயன்தாரா என்னிடம் கூறினார்.
இது ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த பாராட்டு. ரசிகர்களை சிரிக்க வைப்பதும், அழ வைப்பதுதான் திரைப்பட உருவாக்கத்தில் சவாலான விஷயம் என்றார் அவர். ’அமரகாவியம்’ திரைப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.பாடல்வரிகளை மதன்கார்க்கி, பார்வதி வெற்றிசெல்வன், பொத்துவில் அஸ்மின் ஆகியோர் எழுதியுள்ளனர்.
அமரகாவியம் பாடல்கள் ஏலவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 05ம் திகதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.