அண்­மையில் ஸ்கொட்­லாந்தில் நடந்த பொது­வாக்­கெ­டுப்­புடன் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையைத் தொடர்­பு­ப­டுத்தி பல் ­வேறு கருத்­து­களும் வெளி­யாகி வரு­கின்­றன.

ஸ்கொட்­லாந்தில் நடத்­தப்­பட்­டது போன்­ற­தொரு பொது­வாக்­கெ­டுப்பு, வடக்கு கிழக்­கிலும் நடத்­தப்­பட வேண்டும் என்றும், அதன் மூலம் தமி­ழர்­க­ளுக்குத் தமது தலை­வி­தியைத் தாமே தீர்­மா­னிக்கும் உரிமை அளிக்­கப்­பட வேண்டும் என்றும் ஒரு சாரார் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

இன்­னொரு தரப்­பினர், உச்­ச­பட்­ச­மான அதி­கா­ரப்­ப­கிர்வு பிரி­வி­னையைத் தடுக்கும் என்­பதால், அத்­த­கைய அதி­காரப் பகிர்வை இலங்கை அர­சாங்கம் வழங்க வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றனர்.

வெளிப்­ப­டை­யாகச் சொல்­வ­தானால், தனி­நாட்டுக் கோரிக்கை தொடர்­பாக பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்­பது முதற்­சா­ராரின் கோரிக்கை.

நாடு பிரி­வதைத் தடுப்­ப­தற்கு அதி­கா­ரப்­ப­கிர்வு அவ­சியம் என்­பது இரண்­டா­வது சாராரின் கோரிக்கை. இந்த இரண்டு சாராரும், தமது நிலைப்­பா­டு­க­ளுக்கு வலுச் சேர்க்கும் விதத்தில்  ஸ்கொட்­லாந்தின் பொது வாக்­கெ­டுப்பு பற்­றிய விவ­கா­ரத் தைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

ஸ்கொட்­லாந்தில், வலுப்­பெற்று வந்த தனி­நாட்டுக் கோரிக்­கையை அங்­குள்ள பெரும்­பா­லான மக்கள் இந்த பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் நிராகரித்துள்ளனர்.

அது­போ­லவே, இலங்­கையில் உள்ள தமி­ழர்­களும், தனி­நாட்டுக் கோரிக்­கையை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்றும், பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால், அவர்கள் பிரி­வி­னைக்கு எதி­ரா­கவே வாக்­க­ளிப்பர் என்றும் பி.பி.சிக்கு கருத்து வெளி­யிட்­டி­ருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா.

இலங்கை அர­சாங்கம் இது­பற்றிப் பெரி­தான எந்தக் கருத்­தையும் முன்­வைக்­க­வில்லை. அவ்­வாறு கருத்து முன்­வைக்­கப்­ப­டு­வது தனக்கு ஆபத்­தா­கி­விடும் என்று உணர்ந்து கொண்டு இந்த விவ­கா­ரத்தில் அடக்கி வாசிக்­கி­றது.

இதுவே வேறொரு சந்­தர்ப்­ப­மாக இருந்­தி­ருந்தால், ஸ்கொட்­லாந்து மக்கள் பிரி­வி­னைக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளனர் என்­பதை மிகப்­பெ­ரிய பிர­சா­ர­மாக மாற்­றி­யி­ருக்கும் அர­சாங்கம்.

ஆனால், அவ்­வா­றா­ன­தொரு கருத்தை முன்­வைக்கப் போனால், ஸ்கொட்­லாந்து மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டது போன்று, தமது தலை­வி­தியை தாமே நிர்ணயிக்கும் வாய்ப்பை இலங்கை அரசும் வழங்­க­லாமே என்ற கருத்தும் வாதமும் முன்­வைக்­கப்­படும்.

எனவே தான், அத்­த­கைய சிக்­க­லுக்குள் மாட்டிக் கொள்­ளாமல் அர­சாங்கம் தவிர்த்துக் கொண்­டது. ஆனாலும், ஸ்கொட்­லாந்து பொது­வாக்­கெ­டுப்­புக்கு முன்ன ­தாக, பிரித்­தா­னியப் பிரதமர் டேவிட் ெகமரூன், ஸ்கொட்­லாந்து மக்கள் பிரி­வி­னைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்தால், அது வலி­மிக்க முடி­வாக இருக்கும் என்று கூறி­யி­ருந்தார்.

அது­கு­றித்து அமைச்சர் டலஸ் அழ­கப் ­பெ­ரும குறிப்­பி­டு­கையில், டேவிட் கெம ரூன் இலங்­கையில் பிரி­வி­னைக்கு ஆத­ரவு அளித்தவர் என்றும், அப்­போது நமக்கு ஏற்­பட்ட வலியை இப்­போது அவர் உணர்ந்து கொள்வார் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

பிரித்­தா­னி­யாவும் சரி, இலங்­கையும் சரி, பிரி­வி­னைக்கு எதி­ரான கருத்­து­களைக் கொண்­டி­ருந்­தாலும் கூட, ஸ்கொட்­லாந் தும், இலங்­கையில் தமிழர் பகு­திகளும் வர­லாற்று ரீதி­யாக ஒன்­றாக இணைந்­தி­ருந்­த­வை­யல்ல.

இரண்­டுமே தனி­யாட்சி இடம்­பெற்ற பகு­திகள் என்­பதும், பிரித்­தா­னி­யா­வினால் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டவை என்­பதும், முக்­கி­ய­மா­னது. ஸ்கொட்­லாந்து மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு இலங்­கையில் உள்ள தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்தால், அவர்கள் பிரி­வி­னையை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ராஜ­விசுவாசத்துடன் கூறி­யி­ருக்­கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா.

ஆனால், ஸ்கொட்­லாந்து மக்­க­ளுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு, ஒரு­போதும் இலங்­கையில் உள்ள தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­படப் போவ­தில்லை என்­பது தான் உண்மை.

2009ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், இலங்கைத் தமி­ழர்கள் மத்­தியில் பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து தமிழ்­நாட்டில் வலுப்­பெற்­றுள்­ளது.

அது­தொ­டர்­பாக தமிழ்­நாடு சட்­ட­ச­பை யில் தீர்­மானம் கூட நிறை­வேற்­றப்­பட்­டது. இன்­னமும் கூட, தனி­நாடு தான் தீர்வு என்ற நிலையில் உள்ள புலம்­பெயர் தமி­ழர்­களும் கூட, இந்தப் பொது­வாக்­கெ­டுப்பு பற்­றிய கருத்து நிலையில் தான் இருக்­கின்­றனர்.

எனினும், ஸ்கொட்­லாந்து போன்று தமி­ழர்கள் மத்­தியில் பொது­வாக்­கெ­டுப்பு நடத்தும் திட்­டத்தை அர­சாங்கம் ஒரு­போதும், ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா, தமிழ் மக்கள் பிரி­வி­னையை ஆத­ரிக்க மாட்­டார்கள் என்று உறு­தி­யாக நம்­பு­கின்ற அள­வுக்கு, அர­சாங்­கத்தில் உள்ள எவரும், அவ்­வாறு நம்பப் போவ­தில்லை.

தமி­ழர்கள் பிரி­வி­னையை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று அர­சாங்கம் நூறு வீதம் உறு­தி­யாக நம்­பினால் கூட, பொது­வாக்­கெ­டுப்­புக்கு இணங்­காது.

ஏனென்றால், அவ்­வாறு ஒரு பொது­வாக்­கெ­டுப்பை நடத்­து­வது, தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரி­ மையை சர்­வ­தேச அளவில் ஏற்றுக்கொண்­ட­தாகி விடும். அதா­வது தமி­ழர்கள் தமது தலை­வி­தியைத் தீர்­மா­னிக்கும் உரிமை கொண்­ட­வர்கள் என்­பது உல­க­றி யச் செய்­யப்­பட்டு விடும்.

வடக்கு மாகா­ண­ச­பைக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள் கொடுக்­கப்­பட்டால் அதை வைத்தே, அவர்கள் தனி­யான படையை உரு­வாக்கி, தனி­நாட்டை அமைத்து விடு­வார்கள் என்று போலி­யான நியாயம் கற்­பிக் கும் அர­சாங்கம், எவ்­வாறு தமி­ழர்­க­ளிடம் பொது வாக்­கெ­டுப்பை நடத்த முன்­வரும்? என்று சிந்­திக்க வேண்டும்.

மாகா­ண­சபை ஒன்­றுக்­கான அதி­கா­ரங்­க­ளையே பகிர்ந்து கொடுக்க மன­மில்­லாது – இல்­லாத கார­ணங்­களைக் கூறி அதி­கா­ரப்­ப­கிர்வை நிரா­க­ரித்து வரு­கின்ற அர­சாங்கம், தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரி­மையை வழங்­கு­வ­தற்கு மட்டும் முன்­வரும் என்று எதிர்­பார்ப்­பது மடமை.

பிரித்­தா­னியா, பிரி­வி­னையை விரும்­பாத போதும், ஸ்கொட்­லாந்து விட­யத்தில் கன­வா­னாக நடந்து கொண்­டது என்­பது உண்மை. அதற்கு நீண்ட போராட்­டங்­களை ஸ்கொட்­லாந்து முன்­னெ­டுத்­தது என்­பது வேறு விடயம்.

 

அது­போ­லவே, இலங்­கை­யிலும் தமி­ழர்கள் பிரிந்து போவதை, அர­சாங்கம் விரும்­பி­னாலும் சரி, விரும்­பாது போனாலும் சரி, பொது­வாக்­கெ­டுப்பு ஒன்றை நடத்தும் அள­வுக்கு சிங்­கள பௌத்த ஆட்­சி­யா­ளர்கள் இறங்­கி­வரப் போவ­தில்லை.

சர்­வ­தேச தலை­யீடு ஒன்­றில்­லாமல், இலங்கை அர­சாங்­க­மாக இத்­த­கை­ய­தொரு பொது­வாக்­கெ­டுப்பை நடத்தும் முடிவை எடுக்­கின்ற சூழ்­நிலை ஏற்­ப­டு­மாக இருந் தால், அது நிச்­சயம் இலங்­கையில் புதிய அர­சியல் மறு­ம­லர்ச்சி ஏற்­பட்­டுள்­ளது என்று தான் அர்த்தம்.

கொழும்பின் தற்­போ­தைய அர­சியல் போக்கு, ஒரு­போதும் பொது­வாக்­கெ­டுப்­புக்குச் சாத­க­மா­ன­தாக இருக்­காது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கூட, பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்­த­கை­ய­தொரு பொது­வாக்­கெ­டுப்பை முன்­னரே நடத்­தி­யி­ருந்தால், ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளையும் பெறு­மதி மிக்க சொத்­துக்­க­ளையும் காப்­பாற்­றி­யி­ருக்க முடியும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்தக் கருத்தில் உண்மை இருந்­தாலும், தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்றுக் கொள்ள அர­சாங்கம் மறுத்­ததால் தான் இந்த நிலை ஏற்­பட்­டது என்­பதே முக்­கி­ய­மா­னது.

இப்­போதும் கூட, தமி­ழர்­க­ளுக்கு தமது தலை­வி­தியைத் தீர்­மா­னிக்கும் உரிமை தான் முக்­கி­ய­மா­னதே தவிர, அவர்­க­ளுக்­கான தீர்வு என்ன என்­பது அல்ல.

சுய­நிர்­ணய உரிமை வழங்­கப்­பட்டு விட்டால், அவர்கள் பிரிந்து போவதா- இணைந்து வாழ்­வதா என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ளும் உரிமை தானா­கவே வந்து விடும். ஆனால், தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்றுக் கொள்ளும் மனோ­நிலை கொழும்பு ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் ஒரு­போதும் வரப்­போவதில்லை. இந்தக் கட்­டத்தில், இன்­னொரு விட­யமும் நடந்­தி­ருக்­கி­றது.

1972246422Untitled-1தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னதும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் பொதுச்­செ­ய­லா­ள­ரான, மாவை சேனா­தி­ராசா, உயர்­நீ­தி­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள சத்­தி­யக்­க­ட­தாசி ஒன்றில், தனி­நாட்டுக் கோரிக்­கையை தாம் வலி­யு­றுத்­த­வில்லை என்று தெரி­வித்­துள்ளார்.

தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னதும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள், தனி­நாட்டுக் கோரி­கையை வலி­யு­றுத்­து­வ­தாக தொட­ரப்­பட்ட ஒரு வழக்­கி­லேயே, அவர் இந்த சத்­தி­யக்­க­ட­தா­சியை சமர்ப்­பித்­துள்ளார்.

தமி­ழ­ரசுக் கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் சமஷ்டி ஆட்­சி­மு­றை­யையே வலி­யு­றுத்­து­வ­தா­கவும் அவர் தெரி­வித்துள்ளார்.

ஏற்­க­னவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இதே கருத்தை அண்­மையில் சென்­னை­யிலும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அப்­போது புலம்­பெயர் தமி­ழர்­களில் சிலர், தமி­ழீ­ழத்தைக் கைவிட்டு விட்­ட­தாக சம்­பந்தன் கூறி­யதைக் கண்­டித்­தி­ருந்­தனர்.

அது­போ­லவே, மாவை சேனா­தி­ரா­சாவின் இப்­போ­தைய சத்­தி­யக்­க­ட­தா­சிக்கும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்­பலாம்.

ஆனால், உள்­ளூரில் நின்று அர­சியல் செய்யும் எவ­ராலும், தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைக்க முடி­யாது என்ற யாதார்த்­தத்தைக் கூட பலரும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

தனி­நாட்டுக் கோரிக்கை எந்­த­ள­வுக்கு உல­க­ளவில் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை உணர்ந்து கொள்­ளாமல் செயற்­பட்டால், நிலை­யா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான அர­சியல் தீர்வு சாத்­தி­யப்­ப­டாது.

ஏனென்றால், பொது­வாக்­கெ­டுப்பு ஒன்றின் ஊடாக தமி­ழர்கள் தமது விருப்­பத்தை வெளி­யிடும் உரி­மையைக் கூட இந்­தியா போன்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இல்லை.

இலங்கை பிரிக்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு நாட்டைக் கூட விரல் விட்டுச் சுட்­டிக்­காட்ட முடி­யாது.

இரா.சம்­பந்தன் குறிப்­பிட்­டதைப் போல, அதி­க­பட்ச அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால், மக்கள் பிரி­வி­னையை நிரா­க­ரிப்­பார்கள் என்ற கருத்­துக்கு வலு­வூட்­டப்­படும் போது, அதிகாரப்பகிர்வுக்கான ஆதரவு அதிகரிக்கலாம்.

ஸ்கொட்லாந்து மக்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் தான், அவர்கள் பிரிந்து செல்ல விரும்பவில்லை.

அதுபோலவே தமிழர்களும் பிரிந்து செல்வதை தடுக்க வேண்டும் என்றால், அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து சிங்கள மக்களிடத்தில் வலுவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

அங்கிருந்து இத்தகைய கருத்தும் நம்பிக்கையும் கட்டியழுப்பப்பட்டால் தான், இலங்கை அரசாங்கத்தை அதிகாரப்பகிர்வை நோக்கி நகர வைக்க முடியும். அதேவேளை, குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட விட்டுத் தராத ஒரு அரசாங்கம் இருக்கும் வரை, எத்தனை சத்தியக்கடதாசிகளை சமர்ப்பித்தாலும், தமிழர்களிடத்தில் இருந்து பிரிவினைச் சிந்தனை முற்றாக நீங்கி விடும் என்று கூறமுடியாது.

ஏனென்றால், பிரிவினைக்கான உந்துதல், அதிகாரப்பகிர்வு மறுப்பில் இருந்து தான் தொடங்குகிறது, அடக்கப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கிறது. இந்த உண்மை தெற்கில் உணரப்படாதவரை, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது வரப்போவதேயில்லை.

எஸ்.கண்ணன்

Share.
Leave A Reply

Exit mobile version