தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்கில் தனிப்­பெரும் அர­சியல் தமிழ் சக்­தி­யாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கின் தனிப்­பெரும் முஸ்லிம் அர­சியல் சக்­தி­யாகும். இரண்டும் கலந்து பேச அண்­மையில் முடிவு செய்­தி­ருக்­கின்­றன.

உண்­மையில் இச்­சந்­திப்பு தற்­போ­தைய நிலையில் அவ­சி­ய­மா­ன­தாகும். கிழக்கில் முஸ்லிம் அலகை எழுத்தில் வடித்­தவர் தந்தை செல்­வ­நா­யகம். அது போல் அண்ணன் அமிர்­த­லிங்­கத்தால் முடி­யாமற் போனால் நான் செய்வேன் என அஷ்ரப் கூறி­யி­ருக்­கிறார். எனவே, இப்­பேச்­சு­வார்த்­தைக்­கான அங்­கீ­காரம் எப்­போதோ கிடைத்துவிட்­டது.

எனினும், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கிழக்கில் பேரின முஸ்லிம் முக­வர்­களே வெற்றி பெற்­றார்கள். கிழக்கில் அந்த முக­வர்­களைத் தோற்­க­டிக்க வேண்­டு­மாயின் முஸ்லிம் தனித்­துவக் கட்சி அவ­சி­யப்­பட்­டது.

ஏனெனில், கிழக்கு முஸ்­லிம்கள் தெற்கு பேரின முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளையே சார்ந்து நின்­றார்கள். தமிழர் ஆத­ரவு அதற்கு ஈடு­கொ­டுக்க முடியாதிருந்­தது.

அதைச்­ச­மா­ளிக்கும்  வியூ­க­மா­கத்தான் முஸ்லிம் தனித்­துவக் கட்­சியின் பெயரால் முஸ்­லிம்கள் இணைக்­கப்­பட்­டார்­களே தவிர தமிழ்­த­ரப்­புக்கு எதி­ரா­க­வல்ல.

ஒரு புறம் பேரி­ன­வா­தத்தை தமிழ் தரப்­போடு கூட்டு சேர்ந்து எதிர்க்க வேண்­டி­யி­ருப்­பினும் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­தையும் பேண வேண்­டி­யி­ருக்­கி­றது. முஸ்லிம் வாக்கு வங்கி கிழக்­குக்கு வெளியே தேசிய கட்­சி­க­ளுக்கு 80 வீத­மாகும்.

கிழக்கில் மட்­டுமே தனித்­துவ முஸ்லிம் கட்­சிக்கு 80 சத­வீ­த­மாகும். எனவே, தலைவர் அஷ்ரப் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பு தமிழ் தரப்­புக்கு அளப்­ப­ரி­ய­தாகும்.

இது இலே­சாகக் கிடைக்­க­வில்லை. 1948 ஆம் ஆண்டின் டொமி­னியன் சுதந்­தி­ரத்­துக்கு முன் இலங்கை முஸ்­லிம்­களின் தலை­மைத்­துவம் கனதனவான்களினதும் நிலச் ­சு­வா­ந்தார்­க­ளி­னதும் கைக­ளி­லேயே இருந்­தன.

அவர்­க­ளி­லி­ருந்தே முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வமும் உரு­வாக்­கப்­பட்­டது. அந்­நிலை 1948 ஆம் ஆண்­டுக்குப் பின் மாற்றம்பெற்று முஸ்லிம் அமைச்சரே முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலைவர் எனும் நிலை உரு­வா­கி­யது.

முதற்­கட்டம் சமூகம் தலை­மையை உரு­வாக்­கி­ய­தாகும். இரண்டாம் கட்டம் அரசு சமூ­கத்­த­லை­மையை உரு­வாக்கிக் கொடுத்­த­தாகும்.

ஆங்­கி­லேயர் பல்­லின அணுகு முறையைக் கொண்­டி­ருந்­த­தாலும் குறித்த சமூ­கத்­துக்­கான செய­லாண்­மையை தனித்­தனி சமூ­கத்­த­லை­மைக்கே கொடுத்திருந்­த­மை­யாலும் முதற்­கட்­டத்தில்  முஸ்லிம் சமூ­கத்­துக்கு அளப்­ப­ரிய சேவைகள் நிகழ்ந்­தன.

இன்­னொரு காரணம் வர்த்­தக நோக்­குக்கு ஆங்­கி­லேயர் முத­லிடம் அளித்­த­து­மாகும்.

ஆக, முஸ்லிம் அமைச்சர் முஸ்லிம் சமூ­கத்­த­லை­வ­ரான இரண்டாம் கட்­டமே அவரை பேரி­னப்­பி­டியில் சிக்க வைத்­தது.

கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் சிங்கள மொழி மட்டும் எனும் தீர்­மா­னத்தை வழி மொழிந்­ததும், கல்வி முறையில் தரப்­ப­டுத்­தலைக் கொண்டு வந்­ததும், சிறுபான்­மை­களின் தனியார் கல்விக் கூடங்­களை தேசிய உட­மை­யாக்­கி­யதும்  தமிழ் – முஸ்லிம் உற­வைக் ­க­டு­மை­யாகப் பாதித்­தன.

அவர் தனக்கு வழங்­கப்­பட்ட அரச பொறுப்­பைத்தான் செய்தார். எனினும் இவை சிறு­பான்­மை­யோடு சிறு­பான்­மையை மோத விடும் பேரி­ன­வா­தத்தின் சூழ்ச்­சி­யா­கவே அமைந்­தது.

பண்டா– செல்வா ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு கிழக்கில் ஓர் அலகு என எழு­திய தந்தை செல்­வாவின் அர­வ­ணைப்­புக் ­க­ரத்தைத் தட்டி விடு­வது போன்றே இச்­செ­யற்­பா­டு கள் அமைந்­து­விட்­டன.

முதற்­கட்­டத்தில் சேர் பொன் இரா­ம­நாதன், இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை திரி­பு­ப­டுத்­தி­ய­துதான் அப்­போது வாழ்ந்த முஸ்லிம் தலை­வர்கள் பேரின­வா­தத்­துக்குச் சார்­பாக செயற்­பட கார­ண­மா­யிற்று எனலாம்.

எனினும் தனிப்­பட்ட ஒருவர் மீது கொண்­டி­ருந்த வெறுப்­புக்­காக முஸ்லிம் தலை­வர்கள் பேரி­ன­வா­தத்தில் தம்மை இணைத்துக் கொண்­டி­ருக்கக் கூடாது.

உண்­மையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பேரி­ன­வா­தத்தை இனங்­கண்டு 40 ஆண்­டுகள் கழித்தே முஸ்­லிம்கள் இனங்­கண்­டார்கள்.

தந்தை செல்­வாவின் நல்­லு­ற­வா­லேயே இதை மாம­னிதர் அஷ்ரப் பெற்­றுக்­கொண்டார். ஆக, இடைப்­பட்ட 40 ஆண்­டு­க­ளிலும் தேசிய அடிப்­ப­டையில் ஐக்கிய தேசியக் கட்­சி­யையே முஸ்­லிம்கள் நம்­பி­யி­ருந்­தனர்.

ஐக்­கிய தேசியம் எனும் சொல்லும் பச்சை நிறமும் வச­தி­ப­டைத்­தோரும்   அதில் இருந்­த­மையே இதற்­கொரு கார­ண­மாகும். ஆரம்­பத்தில்  எதிர்க்­கட்­சி­க­ளாக மாக்­சீயக் கட்­சிகள் இருந்­ததும் இன்­னொரு கார­ண­மாகும்.

மாக்­சீயக் கொள்கை மதங்­க­ளுக்கு விரோ­த­மா­னது, சம­தர்மம் வர்த்­தக ஏக போகத்­துக்கு எதி­ரா­னது என்­றெல்லாம் பாமர முஸ்லிம் வெகு­ஜ­னங்கள் நம்ப வைக்­கப்­பட்­டனர். இந்­நி­லை­யில்தான் 1951 ஆம் ஆண்டு முதல் அர­சியல் ரீதியில் பேரி­ன­வாதம் தலை தூக்கி வள­ர­ ஆரம்­பித்­தது.

100க்கு 74 வீதம் பெரும்­பான்மைச் சமூகம் வாழு­கையில் பேரி­ன­வா­தத்தால் ஆட்சி மாறு­வது நிச்­சயம் என்­பதை உணர்ந்து கொண்ட பதி­யுதீன் மஹ்மூத் அதற்­கேற்­ற­படி தனது அர­சியல் வியூ­கத்தை வகுத்­துக்­கொண்டார்.

1. பெரும்­பான்மைச் சமூகப் பேரி­ன­வா­தத்தில் முற்­றிலும் சாய்தல்.

2 ஐக்­கிய தேசியக் கட்­சியின் முஸ்லிம் வாக்கு வங்­கியை அழிக்க இஸ்­லா­மிய சம­தர்­மத்தின் பெயரால் பாமர முஸ்லிம் வெகு­ஜ­னங்­களைப் பிரித்­தெடுத்தல்.

3. உங்கள் பந்­து­களை ஒரே கூடையில் போடாமல் மறு கூடை­யிலும் போடுங் கள். அப்­போது தான் மறு­கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் பயன் கிடைக்கும் எனக் கருத்­து­ரு­வாக்கம் செய்தல் என்­ப­னவே கலா­நிதி பதி­யுதீன் மஹ்­மூதின் அர­சியல் அணுகு முறை­க­ளாக இருந்­தன.

இவற்றின் மூலம் பெரும்­பான்­மைச்­ச­மூ­கத்தின்  அப­ரிமித நம்­பிக்­கையைப் பெற்று பேரி­ன­வா­தத்­துக்கு முஸ்லிம் சமூ­கத்தை உட்­ப­டுத்தி கல்­வித்­துறையில் மட்­டுமே அவரால் முஸ்லிம் சமூ­கத்­துக்கு நன்மைபுரிய முடிந்­தது.

கல்­வித்­து­றையில் மேன்மை பெறு­வது முக்­கி­ய­மா­னது தான். அதற்­காக பேரி­ன­வா­தத்­துக்கு உதவி புரிந்­தி­ருக்கக் கூடாது. ஏனெனில், பேரி­ன­வாதம் அசுர வளர்ச்சி பெற்றால் சிறு­பான்­மை­களின் கல்­வித்­து­றையை மட்­டு­மல்ல வாழ்­வா­தா­ரத்­தையே பாதித்துவிடும்.

தற்­போது அத்­த­கைய நிலைதான் நாட் டில் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. கல்­வித்­துறை மட்­டு­மென்று முஸ்லிம் சமூ­கத்தின் மத வழி­பாடு, பள்­ளி­வா­சல்கள், வர்த்தகம், இருப்பு, வர­லாறு ஆகிய எல்­லா­வற்­றுக்­குமே பேரி­ன­வா­தத்தின் அசுர வளர்ச்சி இடை­யூறு செய்­கி­றது.

யாப்பில் உத்­த­ர­ வா­தப்­பட்­டி­ருக்கும் பாது­காப்­புக்கும் உத்­த­ர­வா­த­மில்லை. தந்தை செல்வா வதை­பட்டும் சிறை சென்று கூறிய உண்­மை­களை இனி­மேலாவது சிறு­பான்­மைகள் புரிந்துகொண்டு இணைய வேண்டும். இன்றேல் பேரினவாதத்துக்கு வாய்ப்பாகி விடும்.

ஏ.ஜே.எம்.நிழாம்

 

Share.
Leave A Reply

Exit mobile version