வெளி­நாட்டு கட­வுச்­சீட்டைக் கொண்­டி­ருப்போர் வடக்கின் பாது­காப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடுமென்ற அர­சாங்­கத்தின் கருத்து நியா­ய­மா­னதல்ல. ஏனென்றால், அத்­த­கைய பாதிப்பை ஏற்­ப­டுத்த எவ­ரேனும் திட்­ட­மிட்­டி­ருந்தால்,  அதற்­காக அவர்கள் ஒரு­போதும் வடக்கைத் தெரிவு செய்­ய­மாட்­டார்கள். ஏனென்றால், வடக்கு இன்­னமும் முழு­மை­யான இரா­ணுவ முற்­று­கைக்குள் இருக்­கின்ற பிர­தேசம்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அனு­ரா­த­புர ஸ்ரீமா­போ­தியில் வழி­பா­டு­களை முடித்துக் கொண்டு, அவர் வடக்­கிற்­கான பய­ண த்தை ஆரம்­பித்­தி­ருந்தார்.

கிளி­நொச்­சி­யிலும், யாழ்ப்­பா­ணத்­திலும் மூன்று நாட்­களைச் செல­விட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைச் சுற்றி தமி­ழர்கள் கூடு­கின்­றனர் என்று காண்பிப்­ப­தற்­கா­கவே திட்­ட­மிட்டு நிகழ்வு ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

20 ஆயிரம் பேருக்கு காணி உறு­திகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், புலி­களின் தமி­ழீழ வைப்­ப­கத்தில் அடகு வைக்­கப் ­பட்ட நகைகள் மீள­ளிக்­கப்­படவுள்ளதாகவும், குறைந்த விலையில்    அரச ஊழி­யர்­க­ளுக்கு மோட்டார் சைக்­கிள்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், ஆசி­ரியர் நிய­ம­னங்கள், தர­மு­யர்­வுகள் வழங்­கப்­படும் என்றும் கூறித் தான், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்­வு­க­ளுக்குப் பெரு­ம­ள­வா­னோரை அர­சாங்கம் இழுத்து வந்­தது.

வடக்கில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்குப் பேரா­த­ரவு உள்­ளது என்று காண்­பிப்­பதன் ஊடாக, தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தியில் தளர்ந்து வரும் ஆத­ர வைச் சரிக்கட்டப் பார்க்­கி­றது அர­சாங்கம்.

அதா­வது, தமி­ழர்­களும் அர­சாங்­கத்தின் பக்­கமே நிற்கும் நிலையில், சிங்­கள வாக்­கா­ளர்­க­ளினால் ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டு த்த முடி­யாது என்ற செய்­தியை தெற்­கிலு ள்ள மக்­க­ளுக்கு எடுத்துக் காட்டும் முயற்­சியே இது.

இந்­திய உத­வி­யுடன் அமைக்­கப்­பட்ட பாதையில் யாழ்­தேவி ரயில் பய­ணத்தின் மீள்­ஆ­ரம்பம், அக்­க­ரா­யனில் அமெ­ரிக்கா கட்டிக் கொடுத்த மருத்துவமனையின் திறப்பு என்று பல்­வேறு வெளி­நாட்டு உதவித் திட்­டங்­க­ளுக்கும், உரிமை கோரிக்­கொள் ளும் வாய்ப்பும்,  ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்த்துப் போனது.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக, கடந்­தாண்டு செப்­டெம்பர் மாதம் கிளி­நொச்சி சென்­றி­ருந்த போது, கிளி­நொச்சி வரை­யான ரயில் சேவையை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆரம்­பித்து வைத்­தி­ருந்தார்.

இப்­போது, இன்னும் ஒரிரு மாதங்களில், ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் சூழலில், யாழ்ப்­பாணம் வரை­யான ரயில் சேவையை ஆரம்­பித்து வைத்­தி­ருக்­கிறார் அவர்.

கிடைக்­கின்ற எல்லா சந்­தர்ப்­பங்­க­ளை யும், தேர்தல் நலனை முன்­னி­றுத்­தியே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பயன்­ப­டுத் திக் கொள்­கிறார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் வடக்­கிற்­கான பய­ணத்­துக்கு முன்­பா­கவே, வெளி­நாட்டு கட­வுச்­சீட்டுக் கொண்­டி­ருந்­த ­வர்கள் ஓமந்­தைக்கு அப்பால் பய­ணிக் கத் தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்த சம்­ப­வமும் இடம்­பெற்­றுள்­ளது.

showImageInStoryஜனா­தி­பதி மஹிந்­தவின் பய­ணத்­துக்கு இரண்டு நாட்கள் முன்­ன­தா­கவே இந்த தடை, நடை­மு­றைக்கு வந்துவிட்­டது.

ஓமந்­தையில் வைத்து, நூற்­றுக்­க­ணக்­கான வெளி­நாட்டுக் கட­வுச்­சீட்டு உரி­மை­யா­ளர்கள் திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.  இதனால், வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களும், அவ­சர தேவை­க­ளுக்­கா­கவும், நிகழ்­வு­க­ளுக்­கா­கவும், உற­வி­னர்­களைப் பார்க்­கவும், வடக்கே செல்­ல­வி­ருந்த பெரு­ம­ளவு பய­ணிகள் நிர்க்கதிக்கு ஆளாக நேரி ட்­டது.

எந்த முன்­ன­றி­வுப்­பு­மின்றி, இந்தக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் வடக்குப் பய­ணத்­துக்­கான பாது­காப்­பை­யொட்டி இந்தத் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை என்று இப்­போது இரா­ணுவ அதிகாரிகள் கூறு­கின்­றனர்.

சில வெளி­நாட்டு  கட­வுச்­சீட்டு  உரி­மை­ யா­ளர்­களால், தேசிய   பாது­காப்­புக்கு பாதிப்பேற்­ப­டலாம் என்­பதைக்   கருத்தில் கொண்டே, வெளி­நாட்­ட­வர்கள் முன் அனு­மதி பெற்றே வடக்­கிற்குச் செல்லாம் என்ற  கட்­டுப்­பாடு   விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிரி­கே­டியர் ருவன் வணி­க­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

போர் முடி­வுக்கு வந்து ஐந்து ஆண்­டு­க­ளுக்கும் மேலா­கி­விட்­டது.

வடக்­கி­லி­ருந்து பயங்­க­ர­வா­தத்தை முற்றா­கவே அழித்து விட்­ட­தா­கவும் அர­சாங் கம் சொல்­கி­றது.  ஆனாலும், நாட்டின் ஒரு பகு­திக்கு வெளி­நாட்­ட­வர்கள் பயணம் செய்­வ­தற்கு மட்டும் அர­சாங்கம் கட்­டுப்­பா­டு­களை விதிக்­கி­ற­தென்றால், ஒன்றில் அர­சாங்­கத் தின் கூற்றுத் தவ­றா­ன­தாக இருக்க வேண் டும்.

இல்­லையேல், உள்­நோக்­கத்­துடன் அர­சாங்கம் நடந்து கொள்­கி­றது என்று கரு­தப்­பட வேண்டும்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிற­ப­கு­தி­க­ளுக்­கெல்லாம் பயணம் மேற்­கொள்ளும் போது, இது­போன்று வெளி­நாட்­ட­வர்கள் அந்தப் பிரதேசங்களுக்குச் செல்­வ­தற்குத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தில்லை.

அது­போல, வெளி­நாட்­ட­வர்கள் முன் அனு­மதி பெற்றே செல்ல வேண்டும் என்ற கட்­டுப்­பாடும் வேறெந்தப் பகு­திக் கும் கிடை­யாது.

அவ்­வா­றா­ன­தொரு நிலை இருக்­கு­மே­யானால், இலங்­கையின் சுற்­றுலாத் தொழில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக ஏறு­முகம் கண்­டி­ருக்க முடி­யாது.

இதற்கு முன்னர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ வடக்­கிற்குச் சென்­றி­ருந்த போது இத்­த­கைய தடைகள் ஏதும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விதிக்­கப்­ப­ட­வில்லை.

போர் முடி­வுக்கு வந்தபின்னர், வடக்­கி ற்கு செல்­வ­தற்கு வெளி­நாட்­ட­வர்கள் முன் அனு­மதி பெறவேண்டும் என்ற கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும், 2011ஆம் ஆண்­டுடன் அந்தக் கட்­டுப்­பா­டுகள் நீக்­கப்­பட்டு விட்­டன.

திடீ­ரென இப்­போது இந்தத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது என்றால், அதற்கு நிச்­சயம் ஏதோ ஓர் உள்­ளார்ந்த காரணம் இருப்­ப­தா­கவே கருதத் தோன்­று­கி­றது.

குறிப்­பாக, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வடக்­கிற்குப் பயணம் மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பத்தை வைத்தே இந்தக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டுக் கட­வுச்­சீட்டு உரி­மை­யா­ளர்கள் சிலரால், நாட்டின் பாது­காப்­புக்­ கெவ்­வாறு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்த முடி யும் என்ற அர­சாங்­கத்தின் கருத்து புதி­ரா­கவே உள்­ளது.

வெளி­நாட்டுக் கட­வுச்­சீட்­டு­க­ளுடன் வருட புலம்­பெயர் தமி­ழர்­களைக் கண்டு அர­சாங்கம் அஞ்­சு­கி­றதா?  அல்­லது அவர்­களைப் பழி­வாங்க வேண்டும் என்று இவ்­வாறு நடந்து கொள்­கி­றதா?

அல்­லது வேறேதும் கார­ணமா என்­பதே இப்­போ­தைய கேள்­வி­யாக உள்­ளது.

வெளி­நாட்டு கட­வுச்­சீட்டைக் கொண்­டி ­ருப்போர் வடக்கின் பாது­காப்­புக்கு பாதி ப்பை ஏற்­ப­டுத்தக் கூடுமென்ற அர­சாங்­கத் தின் கருத்து நியா­ய­மா­ன­தல்ல.

ஏனென்றால், அத்­த­கைய பாதிப்பை ஏற்­ப­டுத்த எவ­ரேனும் திட்­ட­மிட்­டி­ருந் தால், அதற்­காக அவர்கள் ஒரு­போதும் வடக் கைத் தெரிவு செய்­ய­மாட்­டார்கள்.

ஏனென்றால், வடக்கு இன்­னமும் முழு­மை­யான இரா­ணுவ முற்­று­கைக்குள் இருக்­கின்ற பிர­தேசம்.

எந்த நேர­மும், எல்­லா­வற்­றையும் கண்­கா­ணிக்கும் வகையில், யாருக்கும் எண்­ணி க்கை தெரி­யா­த­ள­வுக்கு பெருந்­தொ­கை­யான புல­னாய்­வா­ளர்கள் கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

எனவே, தேசிய பாது­காப்­புக்கோ, ஜனா­தி­ப­தியின் பாது­காப்­புக்கோ அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்த எத்­த­னிக்கும் எவ­ருமே, அதற்­கான கள­மாக வடக்கைப் பயன்­ப­டுத்த விரும்­ப­மாட்­டார்கள்.

இது அர­சாங்­கத்­துக்கும் அர­ச­ப­டை­களின் தலை­மைக்கும் நன்­றா­கவே தெரியும்.  எனவே, பாது­காப்பை முன்­னி­றுத்தி, இந்தக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட நியாயம் வலு­வா­ன­தாகத் தெரி­ய­வில்லை.

அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே இந்தத் தடை விதிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என்று கருத இட­முண்டு.

வடக்கில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ பங்­கேற்கும் நிகழ்­வுகள் பற்­றிய ஒரு­பக்கச் செய்­தி­களை வெளி­வரச் செய்­வது அரசின் நோக்­க­மாக இருந்திருக்கலாம்.

தனியே அபி­வி­ருத்தி, அர­சியல் நிகழ்ச்சி நிரலை முன்­னி­லைப்­ப­டுத்­து­வதே அரசின் திட்டம்.

அதற்கு. வெளி­நாட்டு கட­வுச்­சீட்டு உரி­ மை­யா­ளர்கள் வடக்கே தங்கு தடை­யின் றிச் செல்­வது இடை­யூறை ஏற்­ப­டுத்­தலாம்.

வெளி­நாட்டு கட­வுச்­சீட்டுக் கொண்­டு ள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள், வடக்கே செல்­ லும்­போது, ஒவ்­வொரு சம்­ப­வத்­தி­னது பின்­ன­ணியை ஆராய்ந்து விடக்கூடும்.

அதைத் தவிர்க்க இந்தத் தடை­வி­திக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

எனினும், இந்தத் தடைக்கு வெளியே கூறப்­ப­டாத – யாராலும் அனுமானிக்க முடி யாத காரணங்களும் இருக்கக்கூடும்.

இந்தத் தடையின் ஊடாக அரசாங்கம் எத்தகைய இலக்கை அடைய எத்தனித் திருந்தாலும், வடக்கு இலங்கை இன்ன மும் தனியானதொரு பகுதியாகவே இருந்து வருகிறது என்பதை அரசாங்கமே உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, யாழ்தேவியின் மூலம் வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டுவிட்ட தாக அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், வடக்கு இன்னமும் தனியொரு ஆட்சிப் பிரதேசமாகவே விளங்குகிறது. அங்கு எல்லாமே இராணுவம்தான் என்ற உண் மையை இந்தத் தடை மீண்டும் உணர்த் தியிருக்கிறது.

அபிவிருத்தியின் ஊடாக, வடக்கின் எல்லா அவலங்களையும், பிரச்சினைக ளையும் மூடிமறைத்து விடலாம் என்று அரசாங்கம் கனவு கண்டாலும், தன்னைய றியாமலேயே அது தன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

வெளிநாட்டவர்களுக்கு வடக்கே செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் மூலமும், அரசாங்கம் இதனைத்தான் சாதி த்திருக்கிறது.

(சத்­ரியன்)

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-2)

Share.
Leave A Reply

Exit mobile version