ஐப்பானிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று, அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஒருமாத காலத்துக்கு அவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 ஆண்களை இந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தியாவில் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தன
சுற்றுலா வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள், அந்தப் பெண்ணை அணுகியதாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணை பிகாரில் உள்ள பௌத்தர்களின் புனித இடமான புத்தகயா உட்பட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கொல்கத்தா காவல்துறை அதிகாரியான பல்லவ் கான்டி கோஷ் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு, பின்னர் காசிக்கு கூட்டிச் சென்றபோது அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த அந்த ஜப்பானியப் பெண் கொல்கத்தா வந்துசேர்ந்து பின்னர் அங்குள்ள ஜப்பானிய தூதரகம் வழியாக புகார் அளித்துள்ளார்.
தனியாளாக வரும் இளம் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் செயற்படுவதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், துணை மருத்துவம் படித்துவந்த மாணவி கும்பல் ஒன்றால் ஒடும் பேருந்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கோப அலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், வல்லுறவு தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.
இருந்தும், இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன