இங்கிலாந்து இளவரசரும் ராணி எலிசபெத்தின் இளைய மகனுமான ஆண்ட்ரூ சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளதால் இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் 14வயது சிறுமியாக இருந்தபோது தன்னை இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ கற்பழித்தார் என புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
அவர் தனது மனுவில் அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி பெஸ்டீன் என்பவர் என்னை கடத்தி தன்னுடைய மாளிகையில் பூட்டி வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தன்னுடைய நண்பர்களுக்கும் என்னை விருந்தாக்கினார்.
அவர்களுள் ஒருவர்தான் இளவரசர் ஆண்ட்ரூ என்று கூறியுள்ளார்.
ஆனால் இளம்பெண்ணின் குற்றசாட்டை ஆண்ட்ரு மற்றும் அவரது வழக்கறிஞர் ஆலன் ஆகியோர் மறுத்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்து அரண்மனை அலுவலகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இளவரசரின் நெருங்கிய நண்பரான ஜெப்ரி பெஸ்டீன் இதே வழக்கில் 18 மாதம் சிறைதண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.