அது வரு­டத்தின் முதல் நாள் ஆம், ஜன­வரி முதலாம் திகதி. நேரம் எப்­ப­டியும் நண்­பகல் 12 மணியை கடந்­தி­ருக்கும். பகல் உணவை முடி த்து விட்டு இருந்த மொரட்­டு­வையை சேர்ந்த செல்­வந்தர் ஜான­கவின் தொலை­பேசி அல­று­கி­றது. ஹலோ…யார் பேசு­றீங்க? ஜானக கேட்கும் போதே பதிலும் வந்­தது.

நாங்கள் லுணு­வில வைத்­தி­ய­சா­லையில் இருந்து கதைக்­கிறோம். உங்கள் தொலை­பேசி இலக்­கத்தை வென்­னப்­பு­வையில் உள்ள உங்கள் ஹோட்­டலில் இருந்து பெற்­றுக்­கொண்டோம். உங்கள் தங்கை இன்று பார்ட்­டி க்கு வரு­வ­தாக கூறினார்.

கூடவே கேக்கும் கொண்டு வரு­வ­தாக கூறினார். எனினும் அவர் வர­வில்லை. தொலை­பே­சியும் சேவையில் இல்லை. வீட்டுக்கும் சென்று பார்த்தோம். அங்கும் இல்லை. எங்­கா­வது போயுள்­ளாரா ? என டாக்டர் ஒருவர் விசா­ரிக்க ஜானக பதில் எதுவும் இல்­லாது அதிர்ச்­சி­ய­டைந்தார்.

இல்லை எங்கும் போவ­தாக என்­னிடம் கூற­ வில்லை என ஜானக பதி­ல­ளிக்க விடயம் பொலிஸ் நிலையம் எட்­டி­யது.

வென்­னப்­புவ பொலிஸ் நிலையம் சென்ற லுணு­வில வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி பெர­மு­ன­க­மகே இவ்வாறு முறைப்­பா­டொன்றை பதிவு செய்­கிறார்.

எமது வைத்­தி­ய­சா­லையில் ஒன்­றாக வேலை செய்யும் பெண் பல் சத்­திர சிகிச்சை வைத்­தி­ய­ரான பூன்ய குமாரி விஜேதுங்கவை காண­வி ல்லை.

வைத்­தி­ய­சா­லைக்கு வரு­வ­தாக கூறி­ய வர் வர­வில்லை. தொலை­பே­சியும் சேவையில் இல்லை. வீடும் பூட்­டப்­பட்­டுள்­ளது. வாக­னங் கள் வெளியில் உள்­ளன என அந்த முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து ஜான­கவை தொடர்பு கொண்ட வைத்­தியர் தாம் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­ட­தா­கவும் வீட்டை உடைத்துப் பார்க்க அனு­மதி தர முடி­யுமா எனவும் வின­வி­யுள்ளார்.

அதற்கு ஜான­கவும் ஒப்­புதல் அளிக்க வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்பதிகாரி பொலிஸ் பரி­சோ­தகர் சமன் தஸ­நா­யக்­கவின் கீழ் பொலிஸ் குழு குறித்த வீட்­டுக்கு சென்­றது.

ஜானக, பூன்ய குமா­ரியின் மூத்த சகோதரர் அவர் வென்­னப்­பு­வையை சேர்ந்­த­வ­ராக இருந்த போதும் மொரட்­டு­வையில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்து வரு­பவர். பூன்ய குமாரி லுணு­வில வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தியர்.

75911_-----copy43 வய­தான அவர் நலின் ஹெட்டி ஆராச்சி 52 என்ற கோடீஸ்­வர வர்த்­த­கரை திரு­மணம் செய்­தி­ருந்தார். அவர்­க­ளுக்கு 15 வயதில் ஒரு மகனும் 13 வயதில் ஒரு மகளும் உள்­ளனர்.

மகன் சாருக மகள் பியூமி. இந்த சிறிய குடும்பம் வென்­னப்­புவ பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நைனா­மடம பகு­தி­யி­லேயே வாழ்ந்து வந்­தனர். நைனா மட­மவில் உள்ள வீட்­டுக்கே தற்­போது டாக்டர் பூன்­ய­கு­மா­ரியை தேடி பொலி­ஸாரும் லுணு­வில வைத்­தி­ய­சாலை வைத்­தி­யர்­களும் செல்­கின்­றனர்.

வீடு பூட்­டி­யி­ருக்க வீட்டின் முன் பெண் டாக் டர் பூன்­ய­கு­மாரி. அவ­ரது கண­வரின் வாக­ன ங்கள் இருந்­தன. 31 ஆம் திக­தியின் பத்­தி­ரிகை பிரிக்­கப்­ப­டாமல் வெளியே உள்ள ரீப்­போவில் கிடந்­தது.

பொலி­ஸாரும் வைத்­தியர்­களும் பூன்­ய­கு­மா­ரியின் சகோ­ தரர் ஜான­க­விடம் பெற்­றுக்­கொண்ட அனு­ம­திக்கு அமைய கதவை உடைத்த போது அவ ர்கள் அதிர்ந்து போயினர். வீட் டின் அலு­மா­ரி­களில் இருந்த உடைகள் உள்­ளிட்­டவை வீடெங்கும் சிதறி இருந்­தன.

பழு­த­டைந்த நிலையில் இடி­யப்­பமும் தேங்காய்ப் பாதியும் அப்­ப­டி­யப்­ப­டியே இருந்­தன. சந்­தே­கத்­துக்கு இட­மான தட­யங்கள் சிலவும் இருந்த நிலையில் மொரட்­டு­வையில் இருந்த ஜான­கவின் தொலை­பேசி மீண்டும் சிணுங்­கி­யது.

நான் தான் டாக்டர் பேசு­கிறேன். நீங்கள் உடன் இங்கு வாருங்கள். பூண்­யாவின் வீட்டை உடைத்து பார்த்து விட்டோம். ஏதோ அசம்­பா­விதம் நடந்­ததைப் போல் உள்­ளன. நீங்கள் உடன் இங்கு வாருங்கள் என பதற்­றத்­துடன் பேசி முடித்தார்.

இத­னி­டையே பொலி­ஸாரின் கவனம் வீட்டு வளா­கத்தை நோக்கி நகர்ந்­தது. சுமார் மூன்று ஏக்கர் விசா­ல­மான அந்த தோட்டத்தில் வீட்டின் பின்னால் ஒரு குட்டை இருந்­தது.

இதனை விட ஒரு தும்பு ஆலையும் அதனை ஒட்­டி­ய­தாக ஒரு சிறிய வீடும் இருந்­தது. அந்த வீடு காவல் அர­ ணாக இருக்க வேண்டும் என பொலிஸார் ஊகித்­தாலும் அவ்­வ­ளவு பெரிய வளா­கத்தில் எவரும் இருக்­க­வில்லை.

வீட்டின் பின்னால் இருந்த குட்டை, மட்­டை­களை ஊற வைக்க பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாகும். எனினும் அப்­போது அதில் மட்டைகள் இல்­லா­த தால் நீர் நிரம்பி அது தெளிந்­தி­ருந்­த­துடன் தாம­ரை­களும் பூத்­தி­ருந்­தன. அந்த காட்சி அழ­காக இருக்­கவே பொலிஸார் குட்­டையை நோக்கி நகர்ந்­தனர்.

ஏதேச்­சை­யாக அந்த குட்­டையின் கீழ் நோக்கி பார்த்த பொலிஸார் அதிர்ச்­சியில் உறைந்து போயினர். இரு சட­லங்கள் நீருக்கடியில் இருப்­பது தெளிந்த நீரில் துல்­லி­ய­மாக தெரிந்­தது.

தடி­யொன்றை எடுத்து பொலிஸார் அதனால் உண்­மையில் அது சடலம் தானா என்­பதை குத்­திப்­பார்த்­தனர். இத­னை­ய­டுத்து அதனை உறுதி செய்த பொலிஸார் உட­ன­டி­யாக விட­யத்தை வென்­னப்­புவ தலைமை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரி­சோ­தகர் ஜயந்த குமா­ர­வுக்கு அறி­வித்­தனர்.

அவர் இது தொடர்பில் வென்­னப்­பு­வைக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் துஷித்த குமா­ர­வுக்கும் சிலாபம் பிரிவுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சாலிய டீ சில்­வா­வுக்கும் அறி­வித்து ஆலோ­சனை பெற்றுக்கொண்டார்.

அதன்­படி முதலாம் திகதி மாலையே இந்த விடயம் தொடர்­பான அறிக்கை ஒன்றை மார­வில நீதிவான் சாலி­ய­வத்த அபேரத்ன­விடம் சம ர்ப்­பித்­தனர். உடன் ஸ்தலம் விரைந்த நீதிவான் சட­லத்தை அந்த தண்ணீர் குட்­டை­யி­லி­ருந்து மீட்க நடவ­டிக்கை எடுத்தார்.

இதனை விட சிலாபம் பொலிஸ் தட­ய­வியல் பிரிவும் சிலாபம் வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி விஜே­ய­ரத்­னவும் ஸ்தலம் வந்­தனர். இவர்கள் முன்­னி­லையில் சட­லங்கள் மீட்­கப்­பட்­டன.

முதலில் ஆணொ­ரு­வரின் சடலம் மீட்­கப்­பட அத­னுடன் கட்­டப்­பட்­டி­ருந்த பெண்ணின் சட­ல மும் வெளியே வந்­தது. அவை வர்த்­தகர் நலின் வைத்­தியர் பூன்­ய­கு­மா­ரி­யி­னு­டை­யது என்­பதை பூன்­யாவின் சகோ­தரர் ஜான­கவின் உத­வி­யு டன் பொலிஸார் அடை­யாளம் கண்­டனர்.

அவ்­விரு சட­லங்­க­ளு­டனும் பாரிய கொங்றீட் கல்­லொன்றும் கட்­டப்­பட்­டி­ருந்­தது. அந்த இரு சட­லங்­க­ளையும் மீட்ட பின்னர் அதன் கீழ் இன்­னொரு சடலம் இருந்­தது.

அது 15 வய­தான சாருக்­க வின் சட­ல­மாகும். அத­னையும் பொலிஸார் மீட்­டனர். அதனை தொடர்ந்து பொலித்தீன் பை ஒன்­றுக் குள் கட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் 13 வய­தான பியூமி நிர்­வாண கோலத்தில் சடல­மாக மீட்­கப்­பட்டார்.

பொலிஸார் அதிர்ச்சி மேல் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். அந்த வீட்டில் வசித்த டாக்டர் அவ­ரது கணவர். இரு பிள்­ளைகள் என நால்­வரும் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளதை பார்க்கும் போதே பொலி­ஸா­ருக்கு தெரிந்­தது.

வீட்டின் பின்னால் இருந்த தும்பு ஆலையில் இரு பெண்கள் வேலை செய்த நிலையில் அவ ர்­க­ளுக்கு புது­வ­ருட விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்­த­மை­யையும் வீட்­டுக்கு ஒரு காவல்­காரர் இருந்­த­மை­யையும் அவர் தனது மனைவி என கூறிக்­கொண்ட ஒரு­வ­ருடன் வீட்டு வளா­கத் தில் உள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்­த­தை யும் பொலிஸார் தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிந்து கொண்­டனர்.

எனினும் அந்த காவல்­கா­ரனும் மனை­வியும் அங்கு இருக்­க­வில்லை. இந்­நி­லையில் டாக்டர் குடும்­பத்தை கொலை செய்­தவன் அல்­லது கொலை செய்­த­வர்கள் காவ­லா­ளி­யையும் கொன்­றி­ருக்க வேண்டும் அல்­லது காவ­லாளி இந்த கொலையை செய்­தி­ருக்க வேண்டும் என ஊகிக்கும் பொலிஸார் அந்த குட்­டையை முழு­வ­துமாய் அவ­தா­னித்தும் வேறு சட­லங்கள் தென்ப­டா­ததால் காவல்­காரர் மீதான சந்­தே­க த்தை அதி­க­ரித்துக் கொண்­டனர்.

இந்­நி­லையில் வென்­னப்­புவ பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டன. அதன்­படி வைத்­தியர் பூன்­ய­கு­மாரி டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இறு­தி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றுள்­ள­மையும் 31ஆம் திகதி விடு­முறை எடுத்துக் கொள்வ­தாக தெரி­வித்­துள்­ள­மையும் தெரிய வந்­துள்­ளது.

ஜன­வரி முதலாம் திகதி மீண்டும் அவர் வைத்­தி­ய­சா­லைக்கு வரு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்­த­தையும் வீட்டில் உணவு பொருட்களின் பழு­த­டைந்த நிலை­யையும் அவ­தா­னித்த பொலிஸார் இக்­கொலை 30 ஆம் திகதி இரவு அல்­லது 31 ஆம் திகதி இரவு இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என்ற அனு­மா­னத்­துக்கு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் வடமேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சிறி குண­வர்த்­தன பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்­கு­மார ஆகி­யோரின் மேற்­பார்­வையில் விசா­ரணை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஜன­வரி 2 ஆம் திகதி கடற்­ப­டையின் உத­வியை நாடிய பொலிஸார் சட­லங்கள் இருந்த குட்­டைக்குள் தடயம் தேடினர். எனினும் பய­னே­ து­மில்லை.

இதனை தொடர்ந்து சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சாலிய டீ சில்வா தனது அதி­கா­ரத்­துக்கு உட்­பட்ட வென்­னப்­புவ மற் றும் தங்­கொட்­டுவ ஆகிய பொலிஸ் நிலை­யங்­களை சேர்ந்த 50 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை கட­மையில் ஈடு­ப­டுத்தி அந்த மூன்று ஏக்கர் வளா­கத்தில் தட­யங்­களை தேட உத்­த­ர­விட்டார்.

இந்த தேடலில் செருப்பு ஜோடி ஒன்று டோச்லைட் ஒன்று கத்தி ஒன்று மீட்­கப்­பட்­டன. மீட்­கப்­பட்ட கத்­தியை முகர்ந்த மோப்ப நாய் நேராக காவ­லா­ளியின் வீட்­டுக்கு சென்­றது.

எனவே காவ­லாளி மீதான சந்­தேகம் மேலும் அதி­க­ரித்­தது. இதனை விட அந்த தேடலில் பொலி­ஸா­ருக்கு 3 தொலை­பேசி மீள் நிரப்பு அட்­டை­களும் சிக்­கின. அவை பயன்­ப­டுத்­தப்­பட்­டவை. இத­னை­விட உருப்­ப­டி­யான எந்த தட­யமும் பொலி­ஸா­ருக்கு கிடைக்­க­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே விசா­ர­ணை­களை குற் றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்­ககோன் கைய­ளிக்­கின் றார்.

புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரட்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரண­வீர ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உப­பொலிஸ் பரி­சோ­தகர் வீர­சே­கர சார்ஜன் ஐ.எம்.என். ஈரி­ய­கொல்ல குண­ரத்ன ஜய­ரத்ன ஆகியோர் விசார­ணை­களை ஆரம்­பித்­தனர்.

காவ­லாளி மீது பலத்த சந்­தேகம் நில­விய நிலையில் மீட்­கப்­பட்ட 3 மீள் நிரப்பு அட்­டை­க ளும் அவரால் பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என அனு­மா­னித்த புல­னாய்வுப் பிரிவு அதனை தொடர்பு படுத்­திய அறி­வியல் தட­யங்­க­ளூ­டாக விசா­ர­ணையை முன்­னெ­டு த்­தது.

மீள் நிரப்பு அட்­டை­களின் சீரியல் இல க்­கத்­தி­னூ­டாக அவை எந்த தொலை­பேசி இலக்­கத்தை ரீ சார்ஜ் செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதை தொலை­பேசி நிறு­வ­னத்தின் உத­வி­யுடன் புல­னாய்வு பிரி­வினர் தெரிந்து கொண்­டனர்.

இத­னை­ய­டுத்து அந்த தொலை­பேசி எண்ணின் சமிக்­ஞை­களை மையப்­ப­டு த்தி பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் நகர்ந்­தன. அதன் பிர­தி­பலன் கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை புலா­னாய்வு பிரி­வினர் காவ­லாளி தம்­ புள்ளை பிர­தே­சத்­திற்கு அப்பால் உள்ள கல்­கி­ரி­யா­கம எனும் இடத்தில் இருப்­பதை வெளிப்­ப­டுத்திக் கொண்­டனர்.

அங்கு சென்ற பொலிஸார் கல்­கி­ரி­யா­கம வட்­ட­கல பிர­தே­சத்தின் வீடொன்றில் காவ­லா­ளியும் அவன் மனைவி என கூறிய கள்­ளக்­கா­த­ லியும் இருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தது.

அங்கு பொலிஸார் சென்ற போது கள்­ளக்­கா­தலி மட்­டுமே இருந்த நிலையில் காவ­லாளி கல்­கி­ரி­யா­க­ம­வி­லி­ருந்து கொழும்பு வர பஸ் நிலையம் சென்­றி­ருந்­துள்ளார். உடன் பஸ் நிலையம் சென்ற பொலிஸார் கொழும்பு பஸ்ஸில் அவன் ஏறும்போது கைது செய்­தனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் கெதி­கம பிர­தே­சத்தை சேர்ந்த 52 வய­தான புஞ்சி கங் ­க­ணம்கே குண­பால என்­ப­வ­ராவார். இரு பிள்­ளை­களின் தந்­தை­யான இவன் மனைவி பிள்­ளை­களை விட்டு பல வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ ரேயே கள்ளக் காத­லி­யுடன் வாழ்க்கை நடத்­தி­ யுள்ளான்.

இரு­வ­ரையும் கைது செய்த புல­னாய் வுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. அதன் பய­னாக குறித்த நான்கு கொலைகளை யும் காவ­லா­ளியே செய்­துள்­ள­தையும் 13 வய­தான பியூ­மியை கொலை செய்ய முன் குண­பால பல தடவைகள் பாலியல் வன்­கொ­டுமை புரிந்­துள்­ள­மையும் உறு­தி­யா­னது.

அத்­துடன் இந்த கொலை­களின் பின்னர் அவ்­வீட்­டி­லி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்ட 7000 ரூபா பணம் தொடர்­பான விப­ரங்­களை பெற்றுக் கொண்ட பொலிஸார் 2 ஜோடி தோடுகள், தங்­கச்­சங்கிலி ஒன்று, தங்க வளையல், இரு கைய­டக்கத் தொலைபேசிகளையும் மீட்­டனர்.

அத்­துடன் டாக்டர் பூன்ய குமா­ரியின் கல்­யாண மோதி­ர த்தை அப­க­ரிக்க அவ­ரது விரலை துண்­டாக்­கி­ய­தையும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர். ஏனெனில் இது தொடர்பில் குண­பால பொலி­ஸா­ருக்கு ஒப்­புதல் வாக்கு மூலம் அளித்­தி­ருந்தான்.

”சேர் உண்­மையை சொல்­கிறேன். நான் தான் அவர்­களை கொன்றேன். அன்று தோட்­டத்தில் எனக்கு எஜமான் அகப்­பட்டார். அப்­போது நான் அவ­ரிடம் சம்­பளம் தொடர்பில் கதைத்து விட்டு முற்­பணம் 5000 ரூபா கோரினேன்.

அதனை தர மறுத்த அவர் கோப­மாக பேசி னார்.

இந்த சம்­ப­வத்தால் பெரிதும் மன உளைச்­ச­ல­டைந்த நான் அவரை ஏதா­வது செய்ய வேண் டும் என தீர்­மா­னித்தேன். அன்று 30ஆம் திகதி இரவு 7 மணி இருக்கும் வீட்டின் மின் இணைப்பு பிர­தான ஆளி நான் தங்­கி­யி­ருந்த வீட்­டி­லேயே இருந்­தது. அதனை அணைத்தேன்.

முழு தோட்­டமும் இருளில் மூழ்­கி­யது. எஜமான் என்ன நடந்­தது என்­பதை அறிய நாம் தங்­கி­யி­ருந்த அந்த சிறிய வீட்டின் பக்கம் வந்தார். அப்­போது மறைந்­தி­ருந்த நான் கைக்­கோ­ட­ரி­யினால் அவர் பின் மண்­டையில் அடித்து வீழ்த்­தினேன்.

பின்னர் அவர் சட­லத்தை ஒதுக்­கினேன். தொட ர்ந்தும் பதுங்­கினேன். சிறிது நேரத்தில் கண­வரை தேடி டாக்டர் அம்மா வந்தார். அவ­ரையும் அதே பாணியில் கொலை செய்தேன்.

அதன்பின் அவ்­வி­ரண்டு பிரே­தங்­க­ளு­டனும் கல்­லொன்றை சேர்த்து கட்­டினேன். அந்த இட த்தில் இருந்த இரத்­தத்தை கழுவி விட்டு அவர்­களின் வீட்­டுக்குள் சென்றேன். அங்கு பிள்­ளை கள் இருவர் மட்­டுமே இருந்­தனர். மகனின் தலையை கோட­ரியால் தாக்க அவன் அங்­கேயே சாய்ந்தான்.

அதன் பிறகு பியூ­மியை ஒரு அறைக்குள் பய­மு­றுத்தி கூட்டிச் சென்றேன். அந்த சிறு­மி­யுடன் காலை வரை ஒன்­றாக இருந்தேன். அவளை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்தேன். முதல் சந்­தர்ப்­பத்தில் அந்த சிறுமி மயக்­க­ம­டைந்தாள். காலை­யாகும் போது அவள் இறந்­தி­ருந்தாள்.

இருந்த தங்க நகை­களை சுருட்டிக் கொண்டு முதலில் மகனின் சட­லத்தை குட்­டைக்குள் போட்டேன். பின்னர் டாக்டர் அம்­மா­வி­னதும் எஜ­மா­னி­னதும் ஒன்­றாக கல்லால் கட்­டப்­பட்ட சட­லங்­களை அதன் மேல் போட்டேன்.

சிறு­மி யின் உடலை பை ஒன்றில் போட்டு கட்டி வீசி விட்டு 31ஆம் திகதி அதி­கா­லை­யி­லேயே எனது கள்ளக் காத­லி­யோடு அங்­கி­ருந்து கிளம்­பினேன். கொலைக்கு பயன்­ப­டுத்­திய கோட ரியை சுற்றி எடுத்துக் கொண்ட நான் முதலில் வென்­னப்­பு­வையில் இருந்து நீர்­கொ­ழும்பு – தோப்­புவ பாலம் அருகே சென்றோம்.

அங்கு கோட­ரியை மா ஓயா பகு­தியில் வீசி விட்டு அங்­கி­ருந்து பஸ்ஸில் குரு­ணாகல் வந்தோம். குரு­ ணா­கலில் இருந்து கல்­கி­ரி­யா­கம வந்தோம் என குண­பால நான்கு உயிர்­களை ஈர­வி­ரக்­க­மின்றி பறித்த கொடூ­ரத்தை வாக்கு மூல­மாக புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கினான்.

இந்­நி­லையில் கொலை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உடந்­தை­யாக இருந்தார் என்ற குற்­றச்­சாட்டில் குண­பா­லவின் கள்ளக் காத­லி­யையும் புல­னாய் வுப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து விசா­ரி த்து வந்­தனர்.

கடந்த நவம்பர் 2 ஆம் திக­தியே பத்­தி­ரிகை விளம்­பரம் மூலம் 15000 ரூபா சம்­ப­ளத்­துக்கு குண­பால காவ­லா­ளி­யாக வேலைக்கு சேர்க்­கப்­பட்­டி­ருந்தான். இந்­நி­லை­யி­லேயே கள்ளக் காத­லியை மனைவி எனக் கூறி குண­பால அங்கு தங்க வைத்­துள்ளான்.

இந்­நி­லையில் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கோட­ரியை மீட்க புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் குண­பா­ல­வையும் அழைத்துக் கொண்டு தோப்­புவ மா ஓய பாலத்­துக்கு அருகே சென்­றனர். குண­பா­லவின் கைகளில் விலங்கு மாட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் அன்று சனிக்­கி­ழமை இரவு வேளையில் தோப்­புவ பா லம் அருகே பலத்த வாகன நெரிசல் காணப்­பட் ­டது.

இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்­திய குண­பால புல­னாய்வுப் பிரி­வி­னரை தள்ளி விட்டு அங்­கி­ருந்து தப்பி ஓடினான். எனினும் புல­னா ய்வுப் பிரி­வினர் அவனை விடாது துரத்த மா ஓயா ஆற்­றினுள் குண­பால குதித்து தற்­கொலை செய்து கொண்டார். உட­ன­டி­யாக குணபா­லவை பொலிஸார் ஆற்­றி­லி­ருந்து மீட்ட போதும் அவனை காப்­பாற்ற முடி­ய­வில்லை.

இந்­நி­லையில் அவனின் சட­லத்தை ஒரு­வரும் பொறுப்­பேற்க முன்­வ­ராத நிலையில் அரச செலவில் பொலிஸார் அடக்கம் செய்­தனர்.

இதனை தொடர்ந்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்ட குண­பா­லவின் கள்ளக் காதலி புல­னாய்வுப் பிரி­வி­னரால் வென்­னப்­புவ பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

அவளை விசா­ ரணை செய்த வென்­னப்­புவ பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து கொண்­ டுள்­ளனர். கடந்த 04ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாக்கு மூலத்தில் அவள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாள்.

எனது கள்ளக் காதலன் டாக்டர் அம்மாவின் மகளை துஷ்பிரயோகம் செய்யும் போது அச் சிறுமி கதறினாள். என்னை தேனீர் தயாரித்து தருமாறு கூறியே அவர் அவ்வாறு செய்தார். நான் தேனீர் எடுத்து வரும் போதே அந்த சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்வதை கண்டேன். என்ன நாய் வேலை செய்கிறாய். அதனை நிறுத்து என நான் சத்தம் போட்டேன்.

சத்தம் போடாதே. ஓரமாக இருந்து வேடிக் கைப் பார். வாய் திறந்தால் உன்னையும் கொன்று விடுவேன் என குணபால என்னையும் அச்சுறுத்தினான் என குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.சீலாவதி என்ற பெயருடைய குறித்த பெண்ணுக்கும் குணபாலவுக்கும் இடையிலான கள்ள உறவு சில வருடங்களுக்கு முன்னரேயே ஆரம்பித்துள்ளது.

எஸ்.எம்.சீலாவதி தங் கொட் டுவை பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன் றில் பணி புரிந்தபோது மிஸ் கோல் ஒன்று ஊடாக வளர்ந்த தொடர்பால் குணபாலவை அறி முகமாகியுள்ளதுடன் அதிலிருந்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துள்ளமை விசார ணைகளில் தெரிய வந்துள்ளது.

அன்பு, பாசம், கருணை, செல்வம் என அழ காக வாழ்ந்த ஒரு குடும்பத்தை காமம், கோபம், பேராசை என்ற கெட்ட எண்ணங்களின் மொத்த வடிவமொன்று பலியெடுத்து அடங்கி விட்டது. இன்று டாக்டர் அம்மா அவர் கணவர் பிள்ளைகள் இருவரும் கல்லறையில் துயில் கொள்ளும் நிலையில் அவர்களின் ஆத்மாக் களுக்காக ஆயிரம் உறவுகள் பார்த்திருக்கின்றன.

(பொலிஸ் தகவல்களை வைத்து எழுதப்பட்டது)

Share.
Leave A Reply

Exit mobile version