தேசிய அர­சாங்கம் அமை­யப்­பெற்று சரி­யான பாதையில் பய­ணிக்­கு­மானால் அதில் இணை­வது குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்ட­மைப்பு ஆராயும். ஆனால் அமைச்­சுப்­ப­த­விகளை ஏற்­கப்­போ­வ­தில்­லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளது.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது குறித்த செயற்­பா­டு­களை கையாள்­வ­தற்கு விரைவில் விசேட குழு­வொன்று நியமிக்கப்­ப­ டவேண்டுமென்றும் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் வடக்கு, கிழக்கில் அமைச்­சர்­க­ளா­கவும், அர­சியல் பிரதிநிதிகளா­கவும் பத­வி­வ­கித்து தமிழர் விரோதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்­களை புதிய அர­சாங்­கத்தில் இணைத்துக்கொள்­ளக்­கூடாது எனவும் வலி­யு­றுத்­தியுள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு,

சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம், நீண்­ட­கா­ல­மாக தடுப்பில் உள்­ள­வர்­களின் விடு­தலை, வடக்கு கிழக்கு மாக­ணங்­களில் ஆளு­நர்கள், பிர­தம செய­லா­ளர்கள், அர­சாங்க அதி­பர்களின் இட மாற்றம், மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­க­ளுக்கு முதலைமைச்சர் மற்றும்  அப்­பி­ர­தே­சங்­களில் உள்ள சிரேஷ்  அர­சியல்   பிர­தி­நிதி ஆகி­யோரைக் கொண்ட இணைத்­த­லைமை நிய­மனம் உள்­ளிட்ட விடங்கள் தொடர்­பா­கவும் விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது.

புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ருக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று நண்­பகல் 12.00மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற்றது.

ஒன்­றரை மணித்­தி­யா­லங்கள் வரை நீடித்த இச்­சந்­திப்பில் அர­சாங்­கத்­த­ரப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராஜித சேனா­ரட்ன, ஜனா­தி­பதி செய­லாளர் பீ.பி.அபேகோன் பாது­காப்புச் செய­லாளர் பி.எம்.யு.டி. பஸ்­நா­யக்க ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலை­வரும் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், ரெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் புளொட் அமைப்பின் தலை­வரும் வட­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான தர்ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

குறித்த சந்­திப்பு தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இன்­றை­ய­தினம்(நேற்று) புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­றதன் பின்னர் அவர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துடன் முதற் சந்­திப்பில் நாம் கலந்து கொண்­டி­ருந்தோம். இதன் போது பொது­மக்­களின் பிரச்­சி­னைகள் உள்­ளிட்ட முக்­கிய விடங்கள் குறித்து பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தோம்.

சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம்

குறிப்­பாக கடந்த 30வரு­டங்­க­ளுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­ற­முடி­யாத நிலையில் இருக்­கின்­றார்கள்.

தேசிய பாது­காப்பு என்ற அடிப்­ப­டையில் தேவைக்கு அதி­க­மா­க­வுள்ள இரா­ணு­வத்­தினர் இம்­மக்­களின் காணி­களை கையகப்படுத்­தி­யுள்­ளனர்.

உத­ரா­ண­மாக யாழ்ப்­பா­ணத்தில் வலி.வடக்கு, கிழக்­கு­மா­கா­ணத்தில் சம்பூர், வன்னிப் பிர­தே­சத்தை எடுத்­துக்­கொண்டால் பர­விப்­பாஞ்சான், உள்­ளிட்ட பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் கைய­ளிக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றன.

இதனால் அவர்கள் தமது சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யே­ற­மு­டி­யா­த­நி­லையில் முகாம்­களில் அகதி வாழ்வை தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்­காது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வேண்டும் என நாம் எடுத்துக் கூறினோம்.

அதன்­போது யுத்தம் மற்றும் அசா­தா­ரண நிலை­மை­களால் இடம்­பெ­யர்ந்­துள்ள தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் உள்­ளிட்ட அனை­வரும் அவர்­க­ளுடை சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வதை கொள்கை ரீதி­யாக அர­சாங்­கத்­த­ரப்­பினர் ஏற்றுக்கொண்­டனர்.

அத்­துடன் அம்­மக்கள் மீளவும் மீள்­கு­டி­யே­று­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரை உள்­வாங்­கி­ய­தான விசேட குழு­வொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

நீண்­ட­கா­ல­மாக தடுப்பில் உள்­ள­வர்­களின் விடு­தலை

யுத்­தத்தில் நேர­டி­யாக தொடர்­பு­டை­ய­வர்கள் சுதந்­தி­ர­மாக நட­மா­டிக்­கொண்­டி­ருக்­கையில் சாத­ர­ண­மா­ன­வர்கள் நீண்­ட­கா­ல­மாக தடுப்­புக்­களில் தடுத்து கைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவும் , சந்­தே­கத்தின் பேரிலும் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­க­ளுக்கு சமூ­கத்­துடன் இணை­வ­தற்கு ஒரு சந்­தர்ப்­ப­ம­ளிக்கும் வகையில் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்யப்பட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­ய­துடன் கடந்த காலத்தில் ஜே.பி.யின் இரண்டு கிளர்ச்­சி­களின் போது கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பிற்­கா­லத்தில் பொது­மன்­னிப்­ப­ளித்த வர­லா­று­களும் இந்த நாட்டில் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தையும் எடுத்துக் கூறினோம்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் நிரு­வாகம்

அதே­நேரம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் இரா­ணு­வத்தின் கட­மை­யாற்றிய அதி­கா­ரிகள் ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாற்­றப்­ப­ட­வேண்டும். சிவில் சமூ­கத்­ததைச் சார்ந்­த­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். மேலும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­படும் அனைத்து மாவட்­டங்­களில் பதவி வகிக்கும் சிங்கள அர­சாங்க அதி­பர்­களும் இட­மாற்­றப்­ப­ட­வேண்டும்.

அத்­துடன் கடந்த அர­சாங்­கத்தில் மக்­களின் அன்­றாட செயற்­பா­டு­களை கையாள்­வ­தற்­காக அரச திணைக்­க­ளங்கள் மற்றும் நிறு­வ­னங்­களில் நிய­மிக்­கப்­பட்டு சரி­யான முறையில் செயற்­ப­டாத அதி­கா­ரி­களும் இட­மாற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் நாம் கோரினோம்.

ஒருங்­கி­ணைப்­புக்­குழு

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­க­ளுக்கு அந்­தந்த மாகா­ணங்­களைச் சேர்ந்த முத­ல­மைச்­ச­ரையும் அம்­மா­கா­ணங்­க­ளி­லுள்ள மாவட்­டங்­களில் காணப்­படும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை இணைத்­த­லை­வர்­க­ளாக நிய­மிக்க வேண்டும் என வலி­யு­றுத்­தினோம் என்றார்.

இதே­வேளை குறித்த சந்­திப்பு தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வௌிவி­வ­காரச் செய­லா­ள­ரு­மான எம்.ஏ சுமந்­திரன் கூறு­கையில்,

நாம் சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம், நீண்­ட­கா­ல­மாக தடுப்பில் உள்­ள­வர்­களின் விடு­தலை, வடக்கு கிழக்கு மாகாண நிரு­வாகம், ஒருங்­கி­ணைப்­புக்­குழு உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்தோம்.

தேசிய அர­சாங்கம்

அதே­நேரம் குறித்த சந்­திப்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அவ்­வி­டயம் தொடர்­பாக எமது நிலைப்­பாட்டை அவர்­க­ளி­டத்தில் தௌிவாக குறிப்­பிட்டோம்.

அதா­வது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­க­மாட்­டது என தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்­க­மொன்று  அமை­யப்­பெற்று அதன் செயற்­பா­டுகள் சரியான பதையில் பயணிக்குமானால் அதில் இணைவது தொடர்பில் நாம் உரிய நேரத்தில் ஆராயந்து பரிசீலனை மேற்கொள்வோம். இன்றைய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடனடியாக இணைந்து கொள்ளும் நிலையில் இல்லை என எடுத்துக் கூறினோம்.

தமிழர் விரோதிகளை இணைக்க கூடாது

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைச்சர்களாவும் அரசியல் பிரதிநிதிகளா கவும் பதவிகளை வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் ஆணித்தனமாக வலியுறுத்தினோம்.

இனப்பிரச்சினை தீர்வு

மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள் வதற்கான எமது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தியதுடன் தீர்வு நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இருதரப்பினரையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றையும் அமைக்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம் அதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடைந்துவருவது தொடர்பில் எடுத்துக்கூறி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். இந்த விடயம் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்…..………………………………………………………………………………

//தமிழர் விரோதிகளை இணைக்க கூடாது//

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைச்சர்களாவும் அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவிகளை வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் ஆணித்தனமாக வலியுறுத்தினோம்.

கூட்டமைப்பினரால்   முன்வைக்கப்பட்ட  மேற்குறிப்பிட்ட   இந்த கோரிக்கையின்  அடிப்படை   சாரம்சம்  என்ன தெிரியுமா?

சுயநலவாதம்தான்.

தாங்கள்  மட்டுமே வட- கிழக்கை  ஆளவேண்டும் என்கின்ற சுயநலவாத கொள்கையாகும். சிங்களவர்கள்  எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்து போகின்றார்கள்.

ஆனால்….  தமிழர்கள் மட்டும் தான்  “நண்டு மாதிரி”   எந்த தமிழனையும்  மேலே போகவிடமாட்டான்.  சிங்களவர்கள் அல்லது வெள்ளைக்காரர்களுடன்  தமிழர்கள்  ஒத்துபோவார்கள்.  தமிழனோடு  தான்  தமிழன் ஒத்துபோகமாட்டான்.

மைத்திரிபால சேனாவும் முன்னைய தமிழர் விரேர்த அரசாங்கத்தில் தான் இருந்தவர்.   ரிசாத் பதியுதீனும் தமிழர் விரேத நடவடிக்கையில்  ஈடுபட்டவர்தான்.

அதைவிட மிகமோசமான  தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் சரத்பொன்சேகா  என்பவர்.

தமிழர்களை  அழித்த சரத்பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கவேண்டாம் என  கூட்டமைப்பு   அரசிடம் கோரிக்கை முன்வைப்பார்களா?

 

Share.
Leave A Reply

Exit mobile version