திரௌ­ப­திக்கு மட்­டுமா ஐந்து கண­வர்மார்? அவ­ரது மாமி­யா­ரான குந்திதேவிக்கும் ஐந்து கண­வர்­மார்­களே. இது பல­ருக்குத் தெரிந்தும் சில­ருக்குத் தெரி­யா­மலும் இருக்­கலாம்.

திரு­த­ராட்­டி­னரின் மக­னான துரி­யோ­தனன், ஆகியோர் கௌர­வர்கள். திரு­த­ராட்­டி­னரின் தம்­பி­யான பாண்­டுவின் புத்­தி­ரர்களே பஞ்ச பாண்­ட­வர்கள். வியா­சக முனி­வ­ருக்கும் அம்­பி­கா­விற்கும் பிறந்­த­வரே திரு­த­ராட்­டினர்.

வியா­சக முனி­வ­ருக்கும் அம்­பா­லிக்­கா­விற்கும் பிறந்­தவர் தான் பாண்டு, இங்கு தந்தை ஒருவர் தாய்மார் இருவர்.

குந்­தி­தேவி சிறு­மி­யாக இருக்கும் போது துர்­வாச முனி­வ­ருக்கு பணி­விடை செய்­த­மையால் அவர் மந்­திரம் ஒன்றை குந்­தி­தேவிக்கு உப­தே­சித்தார்.

makaparatham“இந்த மந்­தி­ரத்தை உச்­சா­டனம் செய்து எந்தத் தெய்­வத்தை வேண்­டி­னாலும் அத்­தெய்வம் அவள் மீது பிர­சன்­ன­மாகும். குந்தி­தேவி இள­மையில் அந்த மந்­தி­ரத்தை உச்­சா­டனம் செய்து சூரி­யனை அழைத்தாள்.

அதன் விளை­வாக கர்ணன் பிறந்தான். பின்பு அவள் பாண்­டுவைத் திரு­மணம் செய்து கொண்டாள். பாண்டு இள­மையில் ஒருநாள் வேட்­டை­யாடச் சென்­ற­போது இரண்டு மான்கள் இணைந்து இன்­புற்­றி­ருப்­பதைக் கவ­னி­யாது அம்பை எய்துகொன்றான்.

இதனால் “மனை­வியைத் தழு­வினால் மரணம் ஏற்­படும்” என்ற சாபம் அவ­னுக்கு ஏற்­பட்­டது. இதனால் தனக்கு சந்­தானம் இல்லை என்று பாண்டு மனம் வருந்­தினார். இந்­த­வே­ளையில், குந்­தி­தேவி தன்­னி­ட­முள்ள மந்­தி­ரத்தின் சக்­தியை எடுத்துக் கூறினாள்.

பாண்­டுவின் வேண்­டு­கோ­ளிற்­கி­ணங்­கவே

1.தரு­ம­தே­வனை அழைத்து தரு­ம­ரையும்

2.வாயு பக­வானை அழைத்து வீம­னையும்

3.இந்­தி­ரனை அழைத்து அர்ச்­சு­ன­னையும் பெற்றாள்.

எனவே குந்­தி­தே­விக்கு ஐந்து கண­வர்மார்.

1.சூரியன் – – கர்ணன்

2.தர்ம தேவன் – – தருமர்

3.வாயு பகவான் -– வீம­னையும்

4.இந்­திரன் – – அர்ச்­சு­ன­னையும் பெற்றாள்

5. பாண்டு

பாண்­டுவின் இரண்­டா­வது மனைவி மாத்­ரிக்கு குந்­தி­தேவி தான் கற்ற மந்­தி­ரத்தை கொடுத்­ததன் விளை­வாக அவள் அசுவினியை வேண்டிச் செபிக்­கவே நகுலன், சகா­தேவன் ஆகியோர் பிறந்­தார்கள். பஞ்ச பாண்­ட­வர்கள் இவ்­வாறே தோன்றினார்கள்.

தருமர், வீமன், அர்ச்­சுனன், நகுலன்,சகா­தேவன் இந்த ஐவரும் உண்­மையில் திரு­த­ராட்­டி­னரின் தம்­பி­யான பாண்­டு­விற்குப் பிறக்­க­வில்லை. எனவே உண்­மையில் துரி­யோ­தனன் ஆகி­யோ­ருக்கு இவர்கள் சகோ­த­ரர்­களா?

இவர்­க­ளுக்கு உண்­மையில் இராஜ்­ஜி­யத்தைப் பெறும் தகுதி உண்டா? அப்­ப­டி­யானால் எதற்­காக துரி­யோ­தனன் சுற்றிச் சுற்றி சூழ்ச்­சி­களைச் செய்து அவனை வீழ்ச்­சி­ய­டையச் செய்து இராஜ்­ஜி­யத்தை அப­க­ரித்து துரி­யோ­த­ன­னுக்கும் களங்­கத்தை ஏற்படுத்­தி­விட்­டார்கள்.

துரி­யோ­த­னரின் தந்­தைக்கு பாண்­டுதான் தம்­பி­யாவார். தரு­மரின் தந்­தை­யான தரு­ம­தே­வரோ, வீமனின் தந்­தை­யான வாயு பக­வானோ, அர்ச்­சு­னனின் தந்­தை­யான இந்­தி­ரனோ, நகுலன் சகா­தே­வனின் தந்­தை­யான அசு­வி­னியோ சகோ­த­ரர்கள் அல்லர்.

உண்­மையில் பாண்­டு­விற்­கென்று பிள்­ளைகள் கிடை­யாது. அப்­படி நியா­யப்­படி நோக்­கினால் இராஜ்யம் துரி­யா­தனன் ஆகியோ­ரையே சேரும்.

அப்­ப­டி­யி­ருக்க துரி­யோ­த­னனை ஏமாற்றி சூழ்ச்சி செய்து தோல்­வியைத் தழுவ வைத்­து­விட்டு துரி­யோ­தனன் மீது பொய்க்குற்­றங்­களைச் சுமத்தி அவனை தீய­வ­னாகச் சித்­த­ரிப்­பது நியாய அநி­யா­யங்­களைத் தெரிந்­த­வர்­களை ஏமாற்றும் ஒரு செப்­படி வித்­தைதான்.

துரி­யோ­த­னனின் தந்­தை­யான திரு­த­ராட்­டி­னரின் தம்­பி­யான பாண்­டு­விற்கு பஞ்­ச­பாண்­ட­வர்கள் பிறந்­தி­ருந்தால் துரியோதனனே முன்­வந்து இராஜ்­யத்தை பாகம் பிரித்­துக்­கொ­டுத்­தி­ருப்பார்.

அவ­ரது பெருந்­தன்­மைக்கு ஒரு உதா­ரணம், துரி­யோ­த­னனின் உற்ற நண்பன் கர்ணன் (குந்­தியின் மூத்த மகன், கர்ணன் துரி­யோ­த­ன­னு­டைய சொத்­துக்­க­ளையே எடுத்து தான­தர்­மங்கள் செய்து பெரி­ய­தர்­மஸ்தர் என்ற பெயரைப் பெற்ற போதும் ஒரு முறையாவது கர்ணனிடம் “யாரைக் கேட்டு எனது சொத்துக்களை எடுத்து தானதர்மங்கள் செய்கிறீர்கள்” என்று கேட்டதும் கிடையாது.

அதுமட்டுமா? அவமானத்தால் தலைகுனிந்து நின்ற கர்ணனுக்கு அங்கதேசத்தை தந்து அவனை பட்டாபிஷேகம் செய்து மன்னனாக்கினான். இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்? சிந்திக்க வேண்டிய விடயம். துரியோதனன் துட்டனா? என்ற கேள்வி எழுகின்றது.

கலாபூஷணம் வயலற் சரோஜா

Share.
Leave A Reply

Exit mobile version