லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர்.இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே.