கொழும்பு: புலிகளின்  தலைவர் பிரபாகரனையும், புலிகளையும் பூண்டோடு  அழித்தமைக்காக  இலங்கையின் புதிய  பாதுகாப்பு அமைச்சர் பதவியை  பெற்றுக்கொண்ட  சரத்  பொன்சேகா,   எஞ்சியிருக்கும்  தமிழீழ   விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள்  சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாபன் என்ற கே.பி மற்றும் கருணா ஆகியோர் மீது விசாரணை நடத்தப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற நிலையில் நேற்று 25 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் முன்னாள் ராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவும் ஒருவர். சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
12-1421054522-kp-and-karuna-have-to-be-tried-fonseka-600
இந்நிலையில் இந்தியாவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பேட்டியில், கே.பி மற்றும் கருணா இருவரும் முக்கிய தீவிரவாதிகள்.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கே.பி. மூலமாக விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டன் கணக்கிலான தங்கம் மற்றும் பெருமளவு பணம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் முந்தைய ராஜபக்சே அரசு, கே.பி. மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கே.பி., கருணா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இதில்  என்ன விசேடமான செய்தியென்றால்….   கே.பி, கருணா  மீதான   நடவடிக்கை  சம்பந்தமான  இச்செய்தியை புலிப்பினாமி  ஊடகங்கள்  ஒரு  மகிழ்ச்சிகரமான, முக்கிய     செய்தியாக  பிரச்சாரம்  செய்துள்ளதை பார்கக்கூடியதாகவுள்ளது.

சரத்பொன்சோகாவால்  பெரும்தொகையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை, சரணடைந்த தங்கள்  தலைவர் பிரபாகரன்  உட்பட  பல  முக்கிய  புலி  தலைவர்கள், தளபதிகள்  சரத்பொன்சேகாவால்   படுகொலை கொல்லப்பட்டதையிட்டு   புலிப்பினாமி   ஊடகங்கள்  இப்பொழுது  பெரிதாக  அலட்டிக்கொள்வதில்லை.

சரத்பொன்சேகா  2010 ஆம்  ஆண்டே  புலிகளின்  நண்பராகிவிட்டார். புலிகளை  அழித்ததற்காக அவர்கள்  மன்னிப்பும் அளித்துவிட்டார்கள்.

சரத்பொன்சேகா   பாதுகாப்பு அமைச்சர் பதவியை  பெற்றுக்கொண்டுள்ளார் என்றால்…  தமிழர்களுக்கு “கெட்டகாலம் பிறக்கிறது” என்று அர்த்தம்.

தமிழா!   நீ  இதற்கு தான்  ஆசைப்பட்டு சிறிசேனாவுக்கு வாக்களித்தாயா???

பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 48 மணிநேர காலக்கெடு (வீடியோ)
11-01-2014

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சுமார் 500 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தினால், சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் இன்று உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு, பதவி நீக்கப்பட்ட சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும், பிரதம நீதியரசராக நியமிக்க வேண்டும் என்று நேற்று சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவி விலகுவதற்கு, சட்டத்தரணிகள் சங்கத்தினால் 48 மணிநேரம் காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவுவதை உணர்ந்து, இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் போது, மொகான் பீரிசும், அலரி மாளிகையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
11-01-2014

குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர்.

எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்

குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர்.

எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளார்.

– See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=35745&cat=srilanka&sel=current&subcat=2#sthash.tMoaDwCP.dpuf

Share.
Leave A Reply

Exit mobile version