மைத்­தி­ரி­யின்­வெற்­றி­யைத்­ தீர்­மா­னித்த 4 1.2 லட்­சம்­வாக்­கு­கள்­ வ­ட-­கி­ழக்­கில்­பெற்­றவை. வடக்கு கிழக்கு மைத்­தி­ரி­வசம்: மட்டக்­க­ளப்பில் அதி­கூ­டிய 81.62

நடந்­து­ மு­டிந்த நாட்டின் 7ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் பல செய்­தி­களை உலகுக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்­ளது. நாட்டின் இன­மத பேதங்கள் வேண்டாம் நீதி­யான சுதந்­தி ­ர­மான நல்­லாட்சி வேண்டும் சிறு­பான்­மை யி­னரை ஒதுக்­கக்­கூ­டாது உண்­மை­யான ஜன­நா­யகம் வேண்டும் போன்­ற ­பல செய்­தி களை உரத்­துச்­சொல்­லி­யுள்­ளது.

நிற்க இத்தேர்தலில் தமி­ழர்கள் குறிப்­பாக சிறு­பான்­மைச்­ச­முகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடி­வுகள் மேலும்­பல செய்தி­களைச் சொல்­லி­யுள்­ளது. இம்­முறை தமிழ் மக்கள் ஆர்­வத்­துடன் வாக்­க­ளித்­த­மையே இச்­செய்­திக்­குக்­கா­ர­ண­மாகும்.

2005இல் மஹிந்த வெல்­லவும் 2015இல் மஹிந்த தோற்­கவும் காரணம் வடக்­கு­கி­ழக்கு மாகா­ணமே அதிலும் தமிழ்­மக்­களே எனலாம்.

ஆம் 2005 இல் ரணி­லுக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டா­மென விடு­த­லைப்­பு­லிகள் கூறி­ய­மை­யினால் மஹிந்த வென்றார். 2015 இல் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று தமிழ்த்­த­ரப்பு கூறி­ய­மை­யினால் மஹிந்த தோற்றார்.

சரி இனி வட-­கி­ழக்கு தேர்தல் முடி­வு­களை சற்று ஆய்வு செய்வோம்.

வடக்கில் யாழ்ப்­பாணம் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்­டங்­களும் 14தேர்தல் தொகு­தி­களும் கிழக்கில் திரு­மலை மட்டக்களப்பு  அம்­பாறை ஆகிய மூன்று மாவட்­டங்­களும் 10 தேர்தல் தொகு­தி­களும் உள்­ளன.

இத்­தேர்­தலில் 05 மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த22 தேர்தல் தொகு­தி­க­ளிலும் உயிர்ப்­பான வாக்­க­ளிப்பு இடம்­பெற்­றன. இப்­ப­குதிகளில்வாழும் சிறு­பான்­மைச்­சமூ­கங்­க ளான தமிழ், முஸ்லிம் மக்கள் கூடிய வீதத்தில் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளித்­தனர்.

இதன்­படி வடக்கில் 3லட்­சத்து 94ஆயி­ரத்து 991 வாக்­குகள் மைத்­திரிக்கும் 1லட்­சத்து 8ஆயி­ரத்து 831 வாக்­குகள் மஹிந்தவிற்கும் அளிக்­கப்­பட்­டன.

கிழக்கில் 5லட்­சத்து 83ஆயி­ரத்து 120 வாக்­குகள் மைத்­திரிக்கும்  2லட்­சத்து 14ஆயி­ரத்து 769 வாக்­குகள் மஹிந்­த­விற்கும் அளிக்­கப்­பட்­டன.

மொத்­த­மாக வடக்கு கிழக்கில் 9லட்­சத்து 78 ஆயி­ரத்து 111 வாக்­குகள் மைத்­ரிக்கும் 3 லட்­சத்து 23 ஆயி­ரத்து 600 வாக்­குகள் மஹிந்­த­விற்கும் அளிக்­கப்­பட்­டன.

அதா­வது வடக்கு கிழக்கில் மஹிந்­த­வை­விட 4லட்­சத்து 54 ஆயி­ரத்து 511 வாக்­கு­களால் மைத்திரி முன்­ன­ணியில் நின்று தோற்­க­டித்­துள்ளார்.

வெற்­றி­யைத்­தீர்­மா­னித்த வாக்­குகள் 

முழு நாட்­டிலே மைத்திரி பெற்ற வாக்­குகள் 62லட்­சத்து 17 ஆயி­ரத்து162 வாக்­குகள் மஹிந்த பெற்ற வாக்­குகள் 57லட்­சத்து 68 ஆயி­ரத்து 90 வாக்­குகள் அதா­வது 4லட்­சத்து 49 ஆயி­ரத்து 72 வாக்கு வித்­தி­யா­சத்தால் மைத்திரி வெற்­றி­பெற்­றுள்ளார்.

இதில் விசேடம் என்­ன­வென்­றால் ­இந்த 449072 கூடிய வாக்­கு­க­ளா­னது வடக்கு கிழக்கில் மஹிந்­த­வை­விட மைத்திரி கூடுதலாகப் பெற்ற 454511 வாக்­கு­க­ளுக்கு அண்­மித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்­கா­ர­ண­மாக மைத்தி­ரியின் வெற்­றியைத் தீர்­மா­னித்த வாக்­கு­க­ளாக வட­கி­ழக்கு தமிழ் முஸ்லிம் வாக்­குகள் திகழ்வதைக்கா­ணலாம்.

இவ்­வாக்­குகள் நாட்டில் சிறு­பான்மை மக்­களை அர­வ­ணைத்­துச்­செல்­ல­வேண்டும் என்ற செய்­தியை சொல்­கி­றது.

மாவட்­ட­ரீ­தியில் யாழ்.முத­லிடம் வட-­கி­ழக்கில் மாவட்­ட­ரீ­தியில் பார்த்தால் யாழ்ப்­பாண மாவட்­டம்தான் அதி­கூ­டிய வாக்குவித்­தி­யா­சத்தில் மைத்­தி­ரியை வெல்­ல­வைத்­தது.

அதா­வது 1 இலட்­சத்து 79ஆயி­ரத்து 120 வாக்­கு­களால் மஹிந்­த­வை­விட மைத்திரி கூடு­த­லாகப் பெற்­றுள்ளார்.இதுவே வட-கி­ழக்கில் அதி­கூ­டிய வாக்கு வித்­தி­யா­ச­மாகும்.

இரண்­டா­வ­தாக மட்டு.மாவட்டம் 1லட்­சத்து 67ஆயி­ரத்து 791 மேல­திக வாக்­கு­களால் மைத்­ரியை வெல்­ல­வைத்­தது. மூன்றாவ­தாக அம்­பாறை மாவட்டம் 1லட்­சத்து 12ஆயி­ரத்து 333 மேல­திக வாக்­கு­களால் மைத்தி­ரியை வெல்­லவைத்தது.

அடுத்து வன்னி மாவட்டம் 1லட்­சத்து 7ஆயி­ரத்து 40 மேல­திக வாக்­கு­க­ளாலும் திரு­மலை மாவட்­டத்தில் 88ஆயி­ரத்து 227 மேல­திக வாக்­கு­க­ளாலும் மைத்திரி மஹிந்­தவை வென்றார்.

மைத்­திரிக்­கான வாக்­க­ளிப்­பு­வீதம்

மட்­டக்­க­ளப்பில் அதிகம்

மாவட்­ட­ரீ­தியில் மட்டு.மாவட்­டத்­தில்தான் அதி­கூ­டிய 81.62 வீத வாக்­குகள் மைத்­ரிக்கு அளிக்­கப்­பட்­டன.அங்கு 2லட்­சத்து 9ஆயி­ரத்து 422 வாக்­குகள் மைத்­திரிக்கு அளிக்­கப்­பட்­டன. மஹிந்­த­விற்கு 4,1631வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன.

மைத்­திரிக்கு மட்டு.மாவட்­டத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக வன்னி மாவட்­டத்தில் 78.47வீத வாக்­கு­களும் அடுத்­த­ப­டி­யாக யாழ்.மாவட்­டத்தில் 74.42 வீத வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

மாவட்­ட­ரீ­தியில் மட்டு.மாவட்­டத்­தில்தான் மைத்­ரிக்கு அதி­கூ­டிய வாக்­க­ளிப்பு வீதம் 81.62 இருந்­தது. குறைந்த வாக்­க­ளிப்பு வீதம் அம்­பா­றை­மா­வட்­டத்தில் 65.22 வீதம்.இது அம்­பாறைத் தொகு­தியின் விளை­வாக ஏற்­பட்­டது எனக்­கூ­ற­மு­டியும்.

தொகுதி ரீதியில் மைத்திரி அலை

வட-­கி­ழக்­கி­லுள்ள 24 தொகு­திகள் ரீதியில் பார்க்­கு­மி­டத்து கிழக்கில் மட்­டக்­க­ளப்பு பொத்­துவில், மூதூர், கல்­குடா ஆகிய தொகு­தி­களில் 50 ஆயி­ரத்­துக்கும் கூடு­த­லான வாக்­கு­களால் மைத்திரி வெற்­றி­யீட்­டி­யுள்ளார். வடக்கில் முல்­லைத்­தீவில் 57,506 மேல­திக வாக்­கு­களால் மைத்திரி வெற்­றி­யீட்­டி­யுள்ளார்.

கிழக்கில் மட்­டக்­க­ளப்புத் தொகு­தியில் 76,306 மேல­திக வாக்­கு­க­ளாலும் பொத்­துவில் தொகு­தியில் 59,122 மேல­திக வாக்குகளாலும் மூதூர் தொகு­தியில் 50,400 மேல­திக வாக்­கு­க­ளாலும் கல்­குடா தொகு­தியில் 50,005 மேல­திக வாக்குகளாலும் மைத்ரி வெற்­றி­வாகை சூடி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கல்­முனைத் தொகு­தியில் அதி­கூ­டிய 89.81வாக்­கு­களும் முல்­லைத்­தீவுத் தொகு­தியில் அடுத்­த­கட்ட 87.64 வீத வாக்­கு­களும் மன்­னார்த்­தொ­கு­தியில் 85.13 வீத வாக்­கு­களும் மைத்­ரிக்கு கூடு­த­லாக அளிக்கப்­பட்­டன.

மைத்­திரிக்கு கல்­முனைத் தொகு­தியில் 90 வீத வாக்­குகள்

அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள கல்­முனைத் தொகு­தி­யி­லுள்ள பதி­வு­ செய்­யப்­பட்ட 71,254 வாக்­கா­ளர்­களில் 50,903 வாக்காளர்கள் வாக்­க­ளித்­தனர். 432 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. செல்­லு­ப­டி­யான வாக்­குகள் 50,561 ஆகும்.

இந்த 50,561 வாக்­கா­ளர்­களில் 45411 வாக்­கா­ளர்கள் மைத்­தி­ரிக்கு அதா­வது 89.81 வீத­மான வாக்­குகள் அளிக்கப்பட்டன.மஹிந்­த­விற்கு ஆக 4683 வாக்­கு­களே அதா­வது 9.26 வீத வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

கல்­மு­னைத்­தொ­கு­தியில் தமிழ் முஸ்லிம் வாக்­கா­ளர்­களே உள்­ளனர். பெரும்­பான்­மை­யாக முஸ்­லிம்கள் உள்­ள­போ­திலும் தமிழ் வாக்­கா­ளர்கள் சுமார் 23ஆயிரம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஜ.தே.க. மற்றும் த.தே.

கூட்­ட­மைப்பின் பிர­சாரம் கார­ண­மாக மைத்­திரிக்கு 95வீத­மான தமிழ்­வாக்­குகள் அளிக்­கப்­பட்டன என கரு­த­இ­ட­முண்டு. அதன்­படி கல்­முனைத் தொகு­தியில் மைத்ரி அமோக வெற்­றி­யீட்­டி­ய­தற்கு தமிழ் பேசும் இரு சமூ­கங்­களும் பாரிய பங்களிப்பைச்­செய்­துள்­ளன.

சேரு­வில, அம்­பாறை தொகு­திகள் மஹிந்த வசம்

­வ­ட-­கி­ழக்­கி­லுள்ள 24 தொகு­தி­களில் திரு­மலை மாவட்­டத்­தி­லுள்ள சேரு­வில தொகு­தி­யிலும் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அம்­பாறை தொகு­தி­யிலும் மஹிந்­த­விற்கு கூடு­த­லான வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன.

அங்கு மஹிந்­த­விற்கு முறையே 26716வாக்­கு­களும் 76409 வாக்­கு­களும் கிடைக்­கப்­பெற்­றன. அங்கு மைத்­திரிக்கு முறையே 24833வாக்­கு­களும் 47658 வாக்­கு­களும் கிடைக்­கப்­பெற்­றன.

தபால்­வாக்­கு­க­ளிலும் மைத்திரி முத­லிடம்.

தபால்­மூல வாக்­கு­க­ளிலும்; 12மாவட்­டங்­களில் மைத்­திரியும் 10மாவட்­டங்­களில் மஹிந்­தவும் பெற்­றுள்­ளனர்.மொத்­த­மாக 265596வாக்­கு­களை மைத்­திரியும் 253656 வாக்­கு­களை மஹிந்­தவும் பெற்­றுள்­ளனர்.

வட-­கி­ழக்கில் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் தபால்­மூல வாக்­கு­களில் மைத்திரி முத­லிடம் பெற்­றுள்ளார்.

வட-­கி­ழக்கில் தபால்­மூல வாக்­க­ளிப்பை ஆய்வு செய்தால் மைத்­திரிக்கு யாழ்ப்­பா­ணத்தில் 10,888 வாக்­கு­களும் வன்னியில் 4,750வாக்குகளும்மட்டக்களப்பில் 6,816 வாக்குகளும் திகாமடுல்லவில் 11,917 வாக்குகளும் திருமலையில் 8,323 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மஹிந்தவிற்கு யாழ்ப்பாணத்தில் 4,607வாக்குகளும் வன்னியில் 2,940 வாக்குகளும் மட்டக்களப்பில் 1,606 வாக்குக ளும் திகாமடுல்லவில் 9,713 வாக்குகளும் திருமலையில் 6,207 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதிலும் மட்டு.மாவட்ட அரச ஊழியர்களே மைத்திரிக்கு கூடுதலான வாக்குவீதத்தை அளித்துள்ளனர்.

வட-கிழக்கிற்கு அப்பால் மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் சமூகத்தினரும் கணிசமான ஆதரவை மைத்தி ரிக்கு வழங்கியுள்ளனர் என்பதும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

மொத்தத்தில் தமிழ்பேசும் வாக்காளர்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவான புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு அவர்களது தேவைகள் அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய ஆவன செய்யவேண்டுமென மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

வி.ரி.சகாதேவராஜா.

Share.
Leave A Reply

Exit mobile version