மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானமொன்று கொழும்பு 5இல் உள்ள பொருளாதார வலயத்தில் பொலிஸாரினால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் இருந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சீ.எஸ்.என் நிறுவனத்தின் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே மேற்படி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இருவர் பயணிக்கலாம் எனவும் இந்த விமானத்தை இயக்குவதற்கு தேவையான பொருட்கள் அவ்விடத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை காணவில்லை:ஆராய்கிறது குற்றப்புலனாய்வுப் பிரிவு
13-01-2014
காணாமல்போன அல்லது வெளி நபர்களால் உபயோகப்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் குற்றப்புலனாய்வுப் பிரிவை பணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வெளி நபர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்துக்கு பெறப்பட்ட வாகனங்கள், வழங்கப்பட்ட நபர்கள் மற்றும் ஏனைய தகவல்கள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் திரட்டி வருகின்றனர்.