இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா.
இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கட்டளை பீடத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்ட படையினர், கொழும்பில் இரண்டு இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.
அலரி மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் முதலாவதாகவும், தேர்தல் ஆணையாளரின் செயலகத்துக்கு வெளிப்புறமாக இரண்டாவது வளையமாகவும் படையினர் நிறுத்தப்பட்டனர்.
எந்தப் பாதுகாப்பும் தேவையென்றால், காவல்துறை மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் தகவல் தர வேண்டும்.
ஆனால், இந்த விடயத்தில் அத்தகைய எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, என்டிரிவி தொலைக்காட்சிக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்துள்ள செவ்வியில்,
வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போது, ஜனவரி 9ம் நாள் அதிகாலையில் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அதில் அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணியளவில், இராணுவத்தளபதி, காவல்துறை மா அதிபர் ஆகியோருடன், அலரி மாளிகைக்கு வருமாறு சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
ஆனால், இது துரோகத்துக்கு ஒப்பானது என்று சட்டமா அதிபர் மறுத்து விட்டார். பாதுகாப்பு படைகளின் தளபதிகளும் ஒத்துழைக்கத் தயங்கினர்.
அவர்களின் தைரியத்தினால், சிறிலங்காவின் ஜனநாயகம் தப்பிப்பிழைத்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதையடுத்து, இந்த விசாரணைகள் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படுமா என்று பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த விசாரணை நீதியாக முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரத் பொன்சேகாவும், மங்கள சமரவீரவும் தெரிவித்துள்ளனர்.
போதுமான ஆதாரங்கள் இருந்தால் சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வுப் பிரிவு தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மாகாண சபை அமைச்சர் உதயகம்மன்பில, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச் சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன் வைக்கப்பட்டுள்ள இது தொடர்பிலான முறைப்பாடு குறித்து தற்போது புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரிக்கு தெரிவித்தார்.
மங்கள சமரவீரவின் முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் பேச்சாளரை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவசர காலச் சட்டத்தை ஏற்படுத்தி இராணுவத்தினரை அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்குள்ளும் புகுத்தி முடிவுகளை மாற்றவும், பனாகொடை இராணுவ முகாமில் உள்ள வீரர்களைக் கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய உள்ளிட்டவர்கள் இருந்த தேர்தல்கள் செயலக கட்டிடத்தை சுற்றிவளைத்தும் முடிவுகளை மாற்றவும் சதி பின்னப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டு மக்களின் அதிர்ஷ்டமாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனும், இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவும், சட்ட மா அதிபர் யுவஞ்சன் விஜேயதிலகவும் இந்த சதியை எதிர்த்ததாகவும் அதனாலேயே அத்திட்டம் பலிக்காது போனதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, அதன் பணிப்பாளர் ரணவீர ஆகியோரின் மேற்பார்வையில் விஷேட குழுவொன்று தகவல் சேகரிக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது.
ராஜபக்ஷவினரின் வான் ஊர்தி பயண விபரங்கள் வெளியாகின
16-01-2014
மகிந்த ராஜபக்ஷ 82 தடவைகளும் நாமல் ராஜபக்ஷ 25 தடவைகளும் ஷிரந்தி ராஜபக்ஷ 10 தடவைகளும் பசில் ராஜபக்ஷ 7 தடவைகளும் விமல் வீரவன்ஷ 10 தடவைகளும் சுசில் பிரேம ஜயந்த 4 தடவைகளும் தயாசிறி ஜயசேகர, சரத் மனமேந்திர, தினேஷ் குணவர்தன, திஸ்ஸ வித்தாரண ஆகியோர் தலா ஒரு தடவையும் தமது பயணங்களுக்காக வான் ஊர்திகளை பயன்படுத்தியுள்ளனர்.
மீதமுள்ள 9 பயணங்களில் 2 தடவைகள் வான் பரப்பை படம்பிடிக்க வான் ஊர்திகளை பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் 7 தடவைகள் வேறு விடயங்களுக்காக வான் ஊர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு சிறப்புரிமைகளின் அடிப்படையில் விமானப் பயணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷ பயணம் செய்த 25 தடவைகளுக்கான விமான கட்டணங்களை செலுத்தப்படவில்லை.
ஏனையோரும் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தவில்லை என தெரியவருகிறது.
மகிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை மிகக் கீழ்த்தரமாக பயன்படுத்தியமை தொடர்பில் தற்போது விமானப்படையிடம் இருந்த மாத்திரமே இந்த தகவல் கிடைத்துள்ளது.