வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் விநோத, சித்திர பட்டம் விடும் போட்டி வல்வெட்டித்துறை மடத்தடி உதயசூரியன் கடற்கரையில் புதன்கிழமை (15) இடம்பெற்றது.

இந்தப் பட்டம் விடும் போட்;டியில் தாஜ்மஹால், சிறியரக உழவு இயந்திரம், சைனிஸ் றாகன், தேவதை, பறக்கும் பாம்பு, பிராந்து, ஆமை, மீன், பெப்சி கோலா, குதிரை, நட்;டுவக்காலி, கப்பல், உலங்கு வானூர்தி ஆகிய பல விநோத உருவப்பட்டங்களை உருவாக்கிய 53 போட்டியாளர்கள் இந்தப்போட்டியில் பங்குபற்றினார்கள்.

இந்தப் பட்டம் விடும் போட்டியில் தாஜ்மஹால் வடிவப் பட்டத்தை வடிவமைத்து ஏற்றிய சிவநாதன் நிமலன் என்பவர் முதலிடத்தைப் பெற்றார்.

இரண்டாம் இடத்தை சிறிய ரக உழவு இயந்திரத்தை வடிவமைத்த மகேந்திரன் காசன், மூன்றாமிடத்தை சைனிஸ் றாகன் பட்டத்தை வடிவமைத்த நாகலிங்கம் அகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற வல்வைப் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் இணைய நூலக வசதி அறிமுகப்படுத்தல் திட்டம் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.எஸ்.மீடின் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

padam-04

Share.
Leave A Reply

Exit mobile version