பெண்கள் தங்கள் அழகை பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுவர். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் சொல்லவே வேண்டாம் இன்னும் பெருத்து விடுவார்கள்.
இது குறித்து அவுஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரை உள்ள சுமார் 6,500 அவுஸதிரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல் நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல் நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜே.பிரவுன் கூறியதாவது:
ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.
ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது.
அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
இப்போதெல்லாம், பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இதுவும் அவளர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ¤ம் அதற்கான தீர்வாகும்.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது.
கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு திணறும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம். மெனோபாஸ் 45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.
அறிகுறி
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும்
2. திடீரென வியர்த்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.
செய்ய வேண்டியது
1. ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.
2. கல்சியம் சத்து குறைவதால எலும்பு மெலியும் அபாயம் உள்ளது.
3. சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
4. கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்.
5. சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.
6. பச்சை காய்கறிகள், பழங்கள் சேர்ப்பது நலம்
7. கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.
8. கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது 45 நிமிடங்கள் மாலை வேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களை தவிர்க்கலாம்.
9. கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.