தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், குமரன் பத்மநாதன் எவ்வித புனர்வாழ்வுக்கும் உள்ளாக்கப்படாமல், எவ்வித விசாரணைகளும் இன்றி கடந்த அரசாங்கம் அவரை சுதந்திரமாக நடமாட இடமளித்து உள்ளதாக ஏற்கெனவே மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோடி – மங்கள சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
புதுடில்லியின் உள்ள பிரதமர் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
முதல் சந்திப்பு…
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையிலான சந்திப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை – புதுடெல்லியிலுள்ள சவுத் புளொக்கில் இடம்பெற்றது.