முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் செலிடப்பட்ட முழு விபரங்களை ஆராயும் வரை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகள் தற்காலிகமான இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்தார்.

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கான முதற்கட்ட பணி கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இதன்படி, செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால்நட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவிருந்தது.

 முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும் நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணப் பணிகள் இடம்பெற இருந்தன.

 6 ஆயிரத்து 750 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த பாதை 2018 ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என்று எதிர்வுகூறப்பட்ட போதும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version