வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற மீன் லொறி கொள்ளையும் ஏழு மாதங்களின் பின் சிக்கிய சந்தேக நபர்களும்

வீர­சிங்­க­லாகே சந்­தி­ர­பால பெர்னாண்டோ ஒரு மீன் வியா­பாரி. மொரட்­டுவை மொரட்டு முல்லை பிர­தே­சத்தை சேர்ந்த சந்திர­பால தனது தொழி­லுக்கு தேவை­யான மீன் வகை­களை வழ­மை­யாக பேலி­ய­கொடை மீன் சந்­தை­யி­லி­ருந்து எடுத்து வந்து விற்­பனை செய்­பவர்.

தனது தொழி­லுக்கு ஏற்­றாற்போல் டிமோ பட்ட ரக லொறி­யொன்­றினைக் கொண்­டி­ருந்த சந்­தி­ர­பால அந்த லொறி­யி­லேயே மீன்­களை கொள்­வ­னவு செய்ய செல்­வது வழ­மை­யாகும்.

அன்று கடந்த 2014 மே மாதம் 05 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை. தனது அன்­றைய நாள் விற்­ப­னைக்­காக மீன் கொள்­வ­னவு செய்ய பேலி­ய­கொடை மீன் சந்­தைக்கு செல்­ல­லானார் சந்­தி­ர­பால.

மொரட்­டு­வை­யி­லி­ருந்து இரத்­ம­லானை, கல்­கிஸ்ஸை, தெஹி­வளை வரை காலி வீதியில் வரும் சந்­தி­ர­பால தெஹிவளையில் இருந்து கோட்டை பகு­தியை நோக்கி வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி ஊடாக பய­ணிக்கும் நோக்கில் கடற்­கரை பகு­தி­யூ­டான வீதியில் தனது லொறியை செலுத்­த­லானார்.

அப்­போது நேரம் எப்­ப­டியும் அதி­காலை 4.30 ஐ எட்­டி­யி­ருந்­தி­ருக்கும். தெஹி­வ­ளையை கடந்து வெள்­ள­வத்தை பொலிஸ் பிரி­வுக்குள் சந்­தி­ர­பால தனது (டப்­ளியூ.பீ. எல்.எப்.9380) என்ற லொறியை செலுத்­திய போது டீபக் நிறு­வ­னத்­துக்கு முன்னால் வைத்து இரு பொலிஸார் அந்த டிமோ லொறியை நிறுத்து மாறு சமிக்ஞை செய்­துள்­ளனர்.

பொலி­ஸாரின் கடமைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தாது, அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைக்கும் நோக்­கோடு சந்­தி­ர­பா­லவும் தனது லொறியை ஒரு ஓர­மாக நிறுத்­தவே உப பொலிஸ் பரி­சோ­தகர் என அடையாளம் கண்­டு­கொள்ளும் வித­மாக உடை அணிந்திருந்த ஒரு­வரும் கான்ஸ்­டபிள் என அடை­யாளம் காணு­ம­ள­வுக்கு சீரு­டை­ய­ணிந்­தி­ருந்த ஒரு­வரும் லொறி­ய­ருகே வந்­துள்­ளனர்.

இதனை விட பொலிஸார் நின்­றி­ருந்த இடத்தில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ள­துடன் அதன் அருகே சிவில் உடையில் நபர் ஒருவர் நின்­றி­ருந்­துள்ளார்.

பொலிஸார் வழ­மை­யாக கேட்­பதைப் போன்று சாரதி அனு­மதிப் பத்­திரம், காப்­பு­றுதி தொடர்­பி­லான ஆவணம் ஆகி­ய­வற்றை பரி­சோ­தித்­துள்ள சீரு­டையில் இருந்த அவ்­வி­ரு­வரும் சந்­தி­ர­பா­லவின் பயணம் குறித்து வின­வி­யுள்­ளனர்.

தான் ஒரு மீன் வியா­பாரி என்­ப­தையும் வழ­மை­யாக அந்த வீதியில் பேலி­ய­கொ­டைக்கு மீன் கொள்­வ­ன­வுக்கு செல்­வ­தையும் சந்­தி­ர­பால இதன் போது அவர்­க­ளிடம் குறிப்­பிட்­டுள்ளார்.

இதனை அடுத்து லொறியை சோதனை செய்ய வேண்டும் என பொலிஸ் சீரு­டையில் இருந்த அவ்­வி­ரு­வரும் சந்­தி­ர­பா­ல­விடம் குறிப்­பிட்­டுள்­ளனர்.

வழ­மை­யாக அவ்­வி­டத்தில் பொலி­ஸாரை கண்­டி­ராத சந்­தி­ர­பால ஏதேனும் விஷேட நட­வ­டிக்­கை­யாக இருக்கும் என எண்னி பொலி­ஸாரின் கோரிக்­கைக்கு இட­ம­ளித்­துள்ளார்.

இதன் போது லொறியை சோதனை செய்த அவ்­விரு பொலிஸ் சீருடைக் காரர்­களின் கவ­னமும் மீன் கொள்­வ­னவின் பொருட்டு சந்­தி­ர­பால வைத்­தி­ருந்த நாலரை இலட்சம் ரூபா பணம் மீது சென்­றது.

அந்த பையை கையி­லெ­டுக்கும் போது சந்­தி­ர­பால அதில் மீன் கொள்­வ­ன­வுக்­கான பணம் உள்­ள­தாக குறிப்­பி­டு­கை­யி­லேயே அந்த பையுடன் அந்த இரு பொலிஸ் சீருடைக் காரர்­களும் துப்­பாக்­கியை நீட்டி சந்­தி­ர­பா­லவை அச்­சு­றுத்­தி­விட்டு வெள்ளைக் காரில் வேக­மாக பறந்­துள்­ளனர்.

கூடவே நின்­றி­ருந்த சிவில் உடைக் காரரும் அந்தக் காரில் மின்­னலாய் மறைய ஒரு கணம் சந்­தி­ர­பா­லவால் நடந்­ததை நம்­ப­மு­டி­ய­வில்லை.

ஆம், அது ஒரு வழிப்­பறி. இல்லை அது ஒரு ஆயுத முனைக் கொள்ளை. உட­ன­டி­யாக சுதாக­ரித்துக் கொள்ளும் சந்­தி­ர­பால அங்­கி­ருந்து வேக­மாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தை அடை­கின்றார்.

அங்கு கட­மையில் இருந்த பொலிஸ் அதி­கா­ரி­யிடம் நடந்­ததை அப்­ப­டியே ஒன்று விடாது ஒப்­பு­விக்க பொலிஸார் உஷாராகினர்.

விடயம் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்­ல­ருக்கு தெரியப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து அவர் நிலை­மையை அவ­தா­னித்­து­விட்டு வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்றவியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் பிர­ஸன்ன டயஸ் நாக­ஹ­வத்­த­விடம் சந்­தேக நபரை கைது செய்யும் பொறுப்பை ஒப்­ப­டைத்தார்.

இந் நிலையில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு தெற்­குக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரே­மலால் ரண­கல மற்றும் கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்ஸா ஆகி­யோரின் மேற்­பார்­வையின் கீழ்

வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்­லரின் ஆலோ­ச­னைக்கு அமைய குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த தலை­மையில் அந்த பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளான ஜய­தி­லக (4972), தில­க­ரட்ன (70963),லக்மால்(72737) ஆகியோர் அடங்­கிய பொலிஸ் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­ஹ­வத்த விசா­ர­ணை­களை பல்­வேறு கோணங்­களில் நடத்­தினார். பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி  உத­ய­கு­மார வுட்­லரின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக விசா­ர­ணைகள் விரிவு படுத்­தப்­பட்­டன.

பிர­தே­சத்தில் உள்ள சீ.சீ.ரிவீ.கம­ராக்­களின் உத­வி­யு­டனும் அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்­களின் உத­வி­யு­டனும் விசாரணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இதனை அடுத்து 48 மணி நேரத்­துக்குள் இந்த கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் ஒரு­வரை பொலி­ஸாரால் கைது செய்ய முடிந்­தது.

திஸாநாயக்க முதி­யன்­ஸ­லாகே நலிந்த பண்­டார என்­ப­வ­ரையே பொலிஸார் இவ்­வாறு கைது செய்­தனர். இவர் சிவில் உடையில் காரின் அருகே இருந்­தவர் என்­பதை உறுதி செய்­து­கொண்ட பொலிஸார் பொலிஸ் சீரு­டையில் இருந்­த­வர்கள் தொடர்பில் தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

எனினும் அவர்கள் தொடர்பில் எவ்­வித சரி­யான தக­வல்­க­ளையும் பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள இய­ல­வில்லை.

எனினும் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வெள்ளைக் கார் அந்த நப­ருக்கு சொந்­த­மா­னது என்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

எனினும் அது தற்­போது யாரி­டமும் உள்­ளது என்­பதை கண்­ட­றிய முடி­ய­வில்லை. இந் நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்­தனர்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் குரு­ணாகல் நகரில் வைத்து, வாரி­ய­பொல பிர­தே­சத்தில் இடம்­பெற்ற கொள்ளை ஒன்று தொடர்பில் இரு­வரை வாரி­ய­பொல பொலிஸார் கைது செய்­தனர்.

வெள்ளை நிற காரில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போதே அவ்­வி­ரு­வ­ரையும் அவர்கள் கைது செய்­தி­ருந்­தனர். குரு­ணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சம­ரகோன் ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் வாரி­ய­பொல பொலிஸார் அவர்­களை விசா­ரணை செய்­ததில் வெள்­ள­வத்தை கொள்­ளை­யுடன் அவர்­க­ளுக்கு தொடர்­பி­ருப்­பதை வெளிப்­ப­டுத்திக் கொண்­டனர்.

இதனை அடுத்து அவ்­வி­ரு­வ­ரையும் வெள்­ள­வத்தை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைப்­பது என அவர்கள் முடி­வெ­டுத்­தனர்.

இதன் படி குரு­ணா­க­லுக்கு சென்ற வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் விஷேட குழு அவர்­களை கைது செய்து வெள்­ள­வத்­தைக்கு அழைத்து வந்­தது.

அந்த இரு­வரும் வேறு யாரும் அல்ல, மீன் வியா­பாரி சந்­தி­ர­பா­ல­விடம் நாலரை இலட்சம் ரூபாவை பறித்­த­வர்கள். பொலிஸ் வேட­மிட்டு இருந்­த­வர்­களே இந்த கொள்­ளை­யையே செய்­த­தாக பொலிஸார் நம்பி வந்த நிலையில் பொலி­ஸாரின் சந்­தேகம் பிழைத்­தது.

ஆம், அவர்கள் வேட­ம­ணிந்த பொலிஸார் அல்ல. மாறாக உண்­மை­யி­லேயே பொலிஸார் என்­பதை வாரி­ய­பொல பொலிஸாரும் வெள்­ள­வத்தை பொலி­ஸாரும் உறுதி செய்­தனர்.

மின்­னே­ரிய பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்­றிய அனுர உப­திஸ்ஸ என்ற உப பொலிஸ் பரி­சோ­த­கரும் ஹப­ரா­துவ பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றி வந்த தரங்க என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள்.

வெள்­ள­வத்தை பொலிஸார் தொடர்ச்­சி­யாக இந்த பொலிஸ் கொள்­ளை­யர்­க­ளிடம் செய்த விசா­ர­ணை­களில் குறித்த மீன் வியா­பா­ரி­யிடம் கொள்­ளை­யிட்­டமை தொடர்­பி­லான அனைத்து தக­வல்­க­ளையும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டனர்.

இதனை அடுத்து கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய இரு பொலிஸார் உள்­ளிட்ட இவர்கள் மூவரும் கொழும்பு பிர­தான மஜிஸ்­திரேட் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்தி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர்.

இத­னை­விட கடந்த ஜன­வரி 6 ஆம் திகதி இவர்கள் நீதி­மன்றில் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் மீன் வியா­பா­ரி­யினால் அடை­யாளம் காட்­டப்­பட்­டுள்ளார்.

பல மாதங்கள் நீடித்த இந்த கொள்ளை தொடர்­பி­லான மர்மம் கலந்த பொலிஸ் விசா­ர­ணைகள் வெள்­ள­வத்தை, வாரி­ய­பொல பொலி­ஸாரின் சிறப்­பான நட­வ­டிக்கை கார­ண­மாக முடி­வுக்கு வந்­தது.

இன்று பொலிஸில் சேவை செய்­து­கொண்டே கொள்­ளையில் ஈடு­பட்ட அந்த இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் கட­மை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­கின்­றன. வாரி­ய­பொல நீதிவன் நீதி­மன்­றிலும் இவ்­விரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் எதி­ரான பிறி­தொரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் கடந்த காலங்­களில் இடம்­பெற்ற பல்­வேறு குற்றச் செயல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பெரும்­பாலும் விசா­ரிக்­கப்பட்டு முடிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நிலு­வையில் இருந்த இந்த கொள்ளை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர்­களும் தற்­போது சட்­டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

தரா­தரம் பாராது பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலரும் அவர்கள் செய்த இவ்­வா­றான பொலிஸ் சேவைக்கு இழுக்கு ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் தொடர்பில் இவ்­வாறு வெள்­ள­வத்தை பொலி­ஸா­ரினால் கைது செய்யப்பட்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ள­மையை நாம் பல்­வேறு சம­யங்­களில் எழு­தி­யி­ருக்­கின்றோம்.

இந் நிலையில் 58 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான சனத்­தொ­கையை கொண்ட வெள்­ள­வத்­தையை குற்ற சூனிய பிர­தே­ச­மாக மாற்­று­வதே தனது இலக்கு என குறிப்­பிடும் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் அதனை அடைய பொது­மக்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் குற்றங்களை முழுமையாக இல்லாதொழிக்க தமது நிலையத்தில் கடமையில் இருக்கும் 80 பொலிஸாரால் மட்டும் முடியாது என்பதை ஞாபகப்படுத்தும் அவர் அது தொடர்பில் வெள்ளவத்தை மக்கள் தம்முடன் கைகோர்த்து நின்று உதவ வேண்டும் என குறிப்பிடுகின்றார்.

கடந்த காலங்களில் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்ற போதும் தற்போது வெள்ளவத்தை பிரதேச வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அலாரம் செயற்படுத்தப்படும் நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லரினால் பல்வேறு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்குதல், அவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளல், ஒத்துழைத்தல் போன்ற வற்றினூடாக வெள்ளவத்தையையும் குற்றச் செயல்கள் இடம்பெறாத சொர்க்க புரியாக மாற்ற நாமும் ஒத்துழைப்பு நல்குவோம்.

– எம்.எப்.எம்.பஸீர் –

Share.
Leave A Reply

Exit mobile version