தமிழீழ விடுதலைப் புலிகளிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச ஆயுதப் பொறுபாளரும் புலிகளின் முக்கியஸ்தருமாகிய கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் 24 பெயர்களில் செயற்பட்டுவந்ததாகவும் பத்து கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தியதாகவும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவினர், புதிய அரசாங்கத்திற்கு இந்த தகவல்களை அறிவித்துள்ளனர்.

இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பத்து நாடுகளின் கடவுச் சீட்டுக்களை குமரன் பத்மநாதன் வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குமரன் பத்மநாதனை கடந்த அரசாங்கம் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவே கருதியது என குறிப்பிடப்படுகிறது.

குமரன் பத்மநாதனின் தாய்லாந்து மனைவி தனாவதி சுதியானோ பல தடவைகள் வன்னிக்குச் சென்றுள்ளார்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சுதியானோ இவ்வாறு வன்னிக்குச் சென்று குமரன் பத்மநாதனை சந்தித்துள்ளார்.

மலேசியாவின் விக்ரம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக பத்மநாதன் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமரன் பத்மநாதன் கதில் சதில் மொஹமத் என்ற பெயரில் எகிப்து நாட்டு கடவுச்சீட்டு ஒன்றை வைத்திருந்தார் என குறிப்பிடப்படுகிறது.

(வீடியோ) புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் “கே.பி” கைது செய்யப்படுவாரா??

புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் “கே.பி” எனும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்படுவாரா? சிறையில் அடைக்கப்படுவாரா?? எனும் பிரச்சினையில் விரிவான தகவலும், விபரங்களும்….

தொடர்புடைய செய்தி..

கே.பி.(குமரன் பத்மநாதன்) என்பவர் உண்மையில் கைது செய்யப் பட்டாரா? (சாத்திரி பேசுகிறேன் -பாகம் -மூன்று)

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

”றோ’ தான் புலிகளை அழித்து முடித்ததா? என்கிறீர்களா? “சாத்திரி” பேசுகிறேன் (பாகம்-1)

Share.
Leave A Reply

Exit mobile version