படுகொலை செய்யப்பட்ட  அரசியல்வாதிகளான மகேஜ்வரன்  ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ,  நடராஜா ரவிராஜ்,  மற்றும் ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்க  ஆகியோரின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.

உடனடியாக நாம் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்போம் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரவிராஜ் என்னுடைய சிறந்த நண்பராக இருந்தார். மேலும் அவர் திக்கி திக்கி பேசும் சிங்கள மொழியை கேட்க சிங்கள மக்களுக்கு மிகவும் விருப்பம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அவர் கொலை செய்யப்பட்டதும் சிங்கள மக்கள் மிகவும் கவலையடைந்தனர்.

இதேபோன்று இவருடைய இறுதி கிரியைகளை நானே பொறுப்பேற்று செய்தேன். மேலும் இவரது பிரேதத்தை தகனம் செய்ய விடாது தடுத்தனர்.

ஆனால் நான் வீதியில் வைத்து பிரேதத்தை எரிப்பேன் என கூறி ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து அப்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த தற்போதைய பொலிஸ்மா அதிபரர், சரியான முறையில் பிரேதத்தை தகனம் செய்ய உதவி செய்தார்.

jeyarajஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

மேலும் ஜெயராஜ் பெர்னாண்டோவை   புலிகள் கொலை செய்தார்கள் என கூறப்பட்ட போதும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இவருடைய படுகொலை தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.

ஜெயராஜ் பெர்னாண்டோ, நடராஜா ரவிராஜ் போன்றோர் தற்போது இருந்திருந்தால் தமிழ் மக்களுடனான உறவு எவ்வாறு அமைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதியிடம் ஒருமுறை கூறினேன்.

ஆனால் அதற்கு அவர் இராணுவத்தினருக்கு அரசியல் பற்றி ஒன்று தெரியவில்லை என்றார்.

இதேபோன்று ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட பின்னர் நான் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக பரபரப்பாக செயற்பட்டேன். இதனை முன்னாள் அமைச்சர் தினேஸ் குனவர்த்தனவிடமும் கூறினேன்.

இதனை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார். அதற்கு அவர் என்னிடம், நீங்கள் ஒன்றும் குழப்பமடைய வேண்டாம் அமைதியாக இருங்கள் என்றார்.

இந்த செயலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார். ஆனால் இதுவரையில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்று முன் நிறுத்துவோம் என்றார்.

ஜனாதிபதி மாளிகையில் பயன்படுத்தப்பட்ட புலிகளின் பல சொகுசு வாகனங்கள்
21-01-2014

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்டப் போரின் பின்னர் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல அதிசொகுசு வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களும் ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளிடமிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் மீட்கப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்கள் உரிய முறையில் பதியப்பட்டிருக்கவில்லை.

பல வாகனங்கள் பற்றிய தகவல்கள் எந்தவொரு ஆவணத்திலும் பதியப்படாமலே அவை ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வாகனங்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புலிகள் ஏன் சொகுசு வாகனங்கள் வைத்திருந்தார்கள்?

விடுதலைக்காக போராடியவர்கள் ஆயதங்கள் வாங்குவதற்கு பதிலாக ஏன் சொகுசு வாகனங்கள் வாங்கி  வைத்திருந்தார்கள்? வெளிநாட்டிலிருந்து சும்மா வந்த காசுதானே.

அப்பாவி பிள்ளைகளை தற்கொலை படைக்கும், களத்துக்கும் அனுப்பிவைத்து பலிகொடுதுவிட்டு… பெரும்பாலன புலித்தலைவர்கள் மாடமாளிகைகளோடும், சுகுசு வாகனங்களோடும் மனைவி பிள்ளைகளோடும் வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலனவர்கள் கடைசிக்கட்ட போரில் சனத்தை சாகடித்துவிட்டு, மக்களிடம் கப்பமாக பெற்ற பணத்தை கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து வெளிநாட்டுக்கு தப்பி வந்துவிட்டார்கள்.

வெளிநாடுகளிலிருந்து  புலிகளின் பெயரில்  காசுசேர்த்தவர்களும் வீடுகள், அங்காடிகள்,  சொகுசு வாகனங்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

ஆக… தமிழீழ போராட்டம் என்பது ஒரு பிழைப்பு போராட்டமாக நடந்திருக்கு என்பது தான் உண்மை.

புலிகளின் சொகுசு வாகனங்களில்தான் இராணுவ அதிகாரிகளும் வன்னியில் ஓடித்திரிகிறார்கள் என்பது நாட்டுக்கு போய் வந்தவர்கள் பாத்திருப்பார்கள்.

“ஊரை ஏமாற்றி  சேர்த்த சொத்துகள் இப்படிதான் போகும்”

Share.
Leave A Reply

Exit mobile version