ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­விக்குப் பின்­னரும், நானே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தலைமை தாங்­குவேன் என்று அதி­காரத் தொனி­யுடன் கூறி வந்த மஹிந்த ராஜபக் ஷ இப்­போது, அதிலும் தோல்வி காணத் தொடங்­கி­யுள்ளார்.

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்­தி­ருப்­பது அத­னையே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கடந்த நவம்பர் மாதம் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருந்து, பிரித்­தெ­டுத்துக் கொண்டு வந்து, எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்தப் போவ­தாக அறி­வித்த கொழும்பு நகர மண்­டப செய்­தி­யாளர் சந்­திப்பில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஒரு விட­யத்தைக் கூறி­யி­ருந்தார்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியில் அமர்த்தும் வரை தான் ஓய­மாட்டேன் என்று அவர் அப்­போது அறி­வித்­தி­ருந்தார்.

இப்­போது அவர், மைத்­தி­ரி­பா­லவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வது, சுதந்­திரக் கட்­சியின் தலை­மையைக் கைப்­பற்­று­வது ஆகிய இரண்டு சப­தங்­க­ளி­லுமே வெற்றி பெற்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா கொண்டு வரு­வதில் முன்­னின்­ற­தற்கு, எதி­ர­ணியில் உள்ள கட்­சி­களை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதே காரணம் என்று கரு­தினால் அது தவ­றான கருத்து.

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியை மஹிந்த ராஜபக் ஷவின் கையிலிருந்து மீட்­பதே அவ­ரது முக்­கிய இலக்கு.

அதற்­காக, அவர் பொது­ந­ல­னுடன், செயற்­ப­ட­வில்லை என்று மறுத்­து­ரைக்க முடி­யாது. அவ­ரது முன்­னு­ரி­மைக்­கு­ரிய விடயம், சுதந்­திரக் கட்­சியின் அதி­கா­ரத்தை ராஜபக் ஷ குடும்­பத்தின் கையில் இருந்து கைப்­பற்­று­வது தான். அதை இப்­போது கிட்­டத்­தட்ட அவர் செய்து விட்டார் என்றே கூறலாம்.

மஹிந்த ராஜபக் ஷ தேர்­தலில் தோல்வி கண்ட பின்­னரும், சுதந்­திரக் கட்­சியில் அவ­ருக்கு கணி­ச­மான செல்­வாக்கு இருக்­கவே செய்­தது.

ஜனா­தி­பதித் தேர்­தலில், சந்­தி­ரி­காவின் சொந்த தொகு­தி­யான அத்­த­ன­க­லவில் கூட, மஹிந்த ராஜபக் ஷ தான் வெற்றி பெற்­றி­ருந்தார்.

பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் மூன்று பிர­த­மர்கள், ஒரு ஜனா­தி­ப­தியை பிர­தி­நி­தித்­துவம் செய்த அத்­த­ன­கல தொகு­தியில் கூட மஹிந்த ராஜபக் ஷவே செல்­வாக்குச் செலுத்­தினார்.

அதை­விட, மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில், கலந்து கொண்­ட­வர்­களை விடவும் அதிகமானோர் மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய கூட்­டத்தில் தான் பங்­கேற்­றி­ருந்­தனர். எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் செல்­வாக்கு சுதந்­திரக் கட்­சிக்குள் முற்­றா­கவே ஒழிந்து போயி­ருக்­க­வில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க விரும்­பி­ய­வர்கள் கூட, எப்­ப­டியும் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குப் பின்னர் நாடா­ளு­மன்றத் தேர்தல் நடக்கப் போகி­றது என்­பதால் சற்று யோசிக்­கவே செய்­தனர்.

ஐ.தே.க. தலை­மை­யி­லான கூட்­டணி தமக்கு நாடா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட இடம் கொடுக்க மறுத்தால் என்ன செய்­வது என்ற குழப்பம் அவர்­க­ளுக்கு இருந்­தது.

எனவே மதில் மேல் பூனை­யாக இருக்க முடிவு செய்­தனர். இருந்தும் பலர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாகத் திரும்பி விட்­டனர் என்­பதை மறுக்க முடி­யாது.

ஒரு கட்­டத்தில், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 48 ஆக அதி­க­ரித்­தி­ருந்­தது. எனினும், துல்­லி­ய­மான கணக்கு எத்­தனை என்று தெரி­யா­ம­லேயே இருந்­தது.

பலர் மறை­மு­க­மாக மைத்­தி­ரி­பா­லவை ஆத­ரித்­தனர். இதனால் மஹிந்த ராஜபக் ஷ­வுக்கே தனது பக்கத்தில் எத்­தனை பேர் நிற்­கி­றார்கள் என்று தெரி­யாமல் இருந்­தது. அதை­விட இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை.

ஏப்ரல் வரை நாடா­ளு­மன்றம் செயற்­பட்டால் போதும் தமக்கு ஓய்­வூ­தியம் கிடைத்து விடும் என்ற எதிர்­பார்ப்பில், முதல்­மு­றை­யாகத் தெரி­வான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.

அதனால், அவர்­களும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்தைக் காப்­பாற்றத் தயா­ராக இருந்­தனர். இந்­த­நி­லையில், மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சரி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் சரி, அடுத்து என்ன செய்­வது என்ற குழப்பம் எற்­பட்­டது.

இதனால், தாம் எதனைக் கனவு என்று தேர்தல் பிர­சா­ரத்தின் போது எள்ளி நகை­யா­டி­னரோ, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதே 100 நாள் செயற்­றிட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை அளிப்­ப­தாக, அறி­விக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து. யார் ஆளும்­கட்சி, யார் எதிர்க்­கட்சி என்று தெரி­யாத குழப்பம் உரு­வா­யிற்று. இத்­த­கைய நிலையில் கட்­சியின் தலை­மையைத் தன்­னிடம் வைத்துக் கொள்­வதால், எதுவும் நடக்கப் போவ­தில்லை என்ற முடி­வுக்கு வந்து தான் மஹிந்த ராஜபக் ஷ அதனை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைக்க முன்­வந்­தாரா?

அல்­லது மிகப்­பெ­ரிய சக்­தி­யாக தான் மீண்டும் உரு­வெ­டுக்க வேண்டும் என்ற திட்­டத்­துடன் கட்சித் தலை­மையை மைத்­தி­ரி­பா­ல­விடம் வழங்க முன்­வந்­தாரா என்ற கேள்­விகள் உள்­ளன.

45 வருட அர­சியல் அனு­ப­வத்தைக் கொண்­டுள்­ள­தாக மஹிந்த ராஜபக் ஷ அண்­மையில் கூறத் தொடங்­கி­யி­ருக்­கிறார். அந்த அனு­பவம் அவ­ருக்கு, முன்­கூட்­டியே தேர்­த­லுக்­கான அழைப்பை விடும் போது கைகொ­டுத்­தி­ருக்­க­வில்லைத் தான்.

என்­றாலும், இப்­போது மஹிந்த ராஜ­பக் ஷ சற்று ஒதுங்கி- அடங்கிப் போக முயற்­சிப்­பது, சந்­தே­கங்­க­ளையே எழுப்­பு­கி­றது. அரசியல் உள்­நோக்­கத்­துடன் அவர் பதுங்கிக் கொள்ள முனை­கி­றாரா என்­பதே அது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை உடை­யாமல் பாது­காக்க வேண்டும் என்­ப­தற்­காக மட்டும் அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்பார் என்று எதிர்­பார்ப்­பது சுத்த முட்­டாள்த்­தனம்.

அவ்­வாறு கரு­தி­யி­ருப்­பா­ரே­யானால், அலரி மாளி­கையை விட்டு வெளி­யேற முடி­வெ­டுத்த போதே கட்சித் தலை­மை­யையும் விட்டுக் கொடுக்க முடிவு செய்­தி­ருப்பார்.

மெல்ல மெல்ல தனது அதி­காரம் கட்­சிக்குள் வலு­வி­ழந்து வரத் தொடங்­கிய பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்­பதால், கட்­சியின் நலனை அவர் கருத்தில் கொண்­டி­ருப்பார் என்று ஒரு போதும் எதிர்­பார்க்க முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில், தனது அர­சியல் வாழ்வு இத்­துடன் முடிந்து போய் விட்­ட­தாக கரு­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.

மீண்டும் அர­சி­யலில் தலை­யெ­டுக்கும் ஆர்­வமும், அவாவும் அவ­ருக்கு இருக்­கி­றது. அவ்­வாறு தலை­யெ­டுத்தால் தான், தமது குடும்­பத்தின் அடுத்த தலை­மு­றை­யி­னரை அர­சி­யலில் நிலை நிறுத்­தலாம் என்­பது அவ­ருக்கு நன்­றாகத் தெரியும்.

அதை­விட, அவர் நாட்டை விட்டுத் தப்­பி­யோ­டவும் தயா­ராக இல்லை.

அது தனது ஒட்­டு­மொத்தக் குடும்­பத்­துக்கும் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தும் என்று கலங்­கு­கிறார். அதை­விட அவ்­வா­றா­ன­தொரு தெரிவை அவர் மேற்­கொண்டால் கூட, அவர் எதிர்­கா­லத்தில் பல்­வேறு சட்­ட­ரீ­தி­யான சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் ஏற்­ப­டலாம்.

எனவே, அவர் தொடர்ந்து இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கவே விரும்­பு­கிறார். எவ்­வா­றா­யினும், இப்­போ­தைக்கு அமை­தி­யாக இருக்க வேண்டும் என்று அவர் கரு­து­வ­தாகத் தெரி­கி­றது.

புதிய அர­சாங்­கத்­துடன் மோதல் போக்கை கடைப்­பி­டிக்க முனைந்தால், அவர்­களின் எதிர் நட­வ­டிக்­கைகள் இன்னும் இன்னும் தீவி­ர­மாகும். அது தனதும் தனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­னதும் நல­னுக்கு பாத­க­மாக அமையும் என்று மஹிந்த ராஜபக் ஷ கணக்குப் போடு­வ­தாகத் தெரி­கி­றது.

சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைக்க அவர் இணங்­கி­ய­தற்கு அதுவும் ஒரு காரணம்.

அதை­விட, இப்­போ­தைய நிலையில், சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக நேரத்தை செல­வி­டு­வதை விட, அதனை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கு­வதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.

ஏனென்றால், சுதந்­திரக் கட்­சியின் தலைமை மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வசம் வந்து விட்டால், மஹிந்த ராஜபக் ஷ அரசில் மோச­டிகள், முறை­கே­டு­களை செய்த முன்னாள் அமைச்­சர்­க­ளான, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அவரே தலை­வ­ராக மாறி­வி­டுவார்.

அது அவ­ருக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்தும், அவரை பத­விக்கு கொண்டு வந்த ஐ.தே.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கும் இக்கட்­டான நிலையை ஏற்­ப­டுத்தும்.

அதே­வேளை, 100 நாள் செயற்­றிட்­டத்தின் முடிவில் பாராளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தும் போது, மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐ.தே­.கவும் அதன் கூட்­ட­ணியில் உள்ள கட்­சி­களும் எவ்­வாறு செயற்­படப் போகின்­றன?

ஒரு உறையில் இரண்டு கத்­திகள் இருக்க முடி­யாது என்று கூறப்­ப­டு­வ­துண்டு. ஐ.தே­.கவும், சுதந்­திரக் கட்­சியும் இரண்டு கத்திகள்.

அவை இரண்டும் எப்­படி ஒரே உறையில் – ஒரே கூட்­ட­ணியில் இடம்­பெற முடியும்? இதனால், நாடா­ளு­மன்றத் தேர்தலில் தனித்­த­னி­யாக பிரிந்து மோதும் நிலை உரு­வா­கலாம்.

அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்டால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், ரணில் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யையும் பிரித்து விட்­ட­தாக மஹிந்த ராஜபக் ஷவினால், உரிமை கோர முடியும்.

மேலும், ஊழல் மோசடி செய்­த­வர்கள் மீது தற்­போ­தைய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­ப­திலும் சிக்­கல்­களை எதிர்­கொள்ள நேரிடும். தனது வசம் உள்ள கட்­சியின் உறுப்­பி­னர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தயங்க வேண்டி வரலாம். இவை­யெல்லாம் மஹிந்த ராஜபக் ஷ ­வுக்கு சாத­க­மான விட­யங்கள்.

வடமேல் மாகா­ண­சபை ஒட்­டு­மொத்­த­மாக முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தலை­மையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சர­ண­டைந்த போது, ஐ.தே.க. திகைத்துப் போய் விட்­டது.

ஏனென்றால், அங்கு ஆட்­சியைப் பிடிக்க ஐ.தே.க. முயன்­றது, ஆனால், நடந்­தது எதிர்­ம­றை­யான விடயம். மத்­திய மாகா­ண­ச­பை­யிலும், ஆட்­சியைப் பிடிக்க முனைய, திடீ­ரென அதன் முத­ல­மைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்­டி­ருக்­கிறார்.

இது­போன்று ஏனைய மாகா­ண­ச­பை­க­ளிலும் நடந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் மாகாண சபைகளில் நிலைத்திருக்கும். இதுபோன்ற நிலை தொடருமேயானால், ஐ.தே.கவுக்குள் குழப்பம் உருவாகும்.

அது பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் விரிசலை யும் ஏற்படுத்தும்.

மஹிந்த ராஜபக் ஷ சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது.

மைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ஒப்படைத்து விட்டால் அவர் கட்சியையும் கவனிக்க முடியாமல் நாட்டையும் நிர்வகிக்க முடி யாமல் திணறுவார். அது அவரை திறனற்ற, நேர்மையற்ற தலைவராக சித்திரிப்பதற்கு வசதியாகி விடும்.

எனவே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்பது சுலபமாகவே மைத்திரிபால சிறிசேனவிடம் கிடைத்து விட்டாலும், அது அவருக்குப் பெரும் பாரத்தையும் தலைவலியையும் தான் ஏற்படுத்தும்.

அது மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாத­க­மான சூழலை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தா­வி­டினும், என்றோ ஒருநாள் உரு­வாக்­கலாம். அந்தக் கனவுடன் தான் அவர் காத்திருக்க முடிவு செய்துள்ளார் போலும்.

Share.
Leave A Reply

Exit mobile version