மகளிர் விவ­கார பிரதி அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று தனது கட­மையை பொறுப்­பேற்ற பின்பு வெலிக்­கடை சிறைச்­சா­லையின் பெண்கள் பிரி­வுக்கு விஜயம் செய்து பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்கப்­பட்­டுள்ள  தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் நேரில் சென்று பார்­வை­யிட்டு நலன் விசா­ரித்தார்.

இதன் போது நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா, முன்னாள் சிறைச்­சாலை புனர்­வாழ்வு அமைச்சின் ஆலோ­சகர் எஸ்.சதீஸ்­குமார், வெலிக்­கடை சிறைச்­சா­லையின் பொறுப்­பாளர் எமில்.ஆர்.லிய­னகே உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.

வெலிக்­கடை சிறைச்­சா­லையின் பெண்கள் பிரி­விற்கும் விஜயம் செய்த பிரதி அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் உள்­ளிட்ட குழு­வினர் முதலில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 8 தமிழ் அர­சியல் கைதிகளை நேரில் கண்டு அவர்­க­ளது துய­ரங்­களை பகிர்ந்து கொண்­டனர்.

vijikalaகுறித்த எட்டு பேர்­களில் கிளி­நொச்சி புதுக்­கு­டி­யி­ருப்பு யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மாக கொண்டோர் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்­களில் கிளி­நொச்­சியில் கைது செய்­யப்­பட்ட ஜெயக்­கு­மா­ரியும் அடங்­குவார்.

கைது செய்­யப்­பட்ட ஜெயக்­கு­மாரி தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது வெலிக்­கடை பெண்கள் சிறைச்சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கின்றார்.

அர­சியல் கைதிகள் தம்மை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று பிர­தி­ய­மைச்­ச­ரிடம் கோரி­யுள்­ளனர்

அத்­துடன் சிறைச்­சா­லையில் இந்து ஆலயம் ஒன்­றையும் அமைத்­து­தர நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்றும் தமக்குத் தேவை­யான பொருட்­களை பெற்­றுத்­த­ரு­மாறும் கோரிக்­கை­வி­டுத்­துள்­ளனர்.

பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் சிங்­கள பெண்­ணொ­ரு­வரும் கைது செய்­யப்­பட்டு இங்கு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவர்­க­ளுடன் நீண்ட நேர­மாக கலந்­து­ரை­யா­டிய பிர­தி­அ­மைச்சர் குறித்த கைதி­களின் விடு­த­லைக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தாக அதன் போது உறு­தி­ய­ளித்தார்.

அர­சியல் கைதி­களை பார்­வை­யிட்ட பின்னர் சிறைச்­சா­லைக்கு வெளியே ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்துத் தெரி­வித்த பிர­தி­ய­மைச்சர்;

நான் கட­மையை பொறுப்­பேற்ற பின்பு கோயி­லுக்கு செல்­லாமல் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு வருகை தந்தேன். இங்கு பெண் கைதிகள் பல வரு­டங்­க­ளாக வேத­னையில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

எனவே குறித்த கைதிகள் தமது குடும்­பங்­க­ளுடன் வாழ்­வ­தற்­கான வழி­யினை அரசு செய்ய வேண்டும். முன்­னைய அரசின் தவ­றினை போக்க வேண்டும் என்றார்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டோர் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் இல்லை. எனினும் உண்­மை­யான குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

ஆகவே குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இது தொடர்பில் நான் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுவேன் என்று இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version