நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போது உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படத்திலும், சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்திலும் நடித்து வருகிறார்.

சூர்யாவுடன் ‘மாஸ்’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் தராங்கல்’ படத்தில் நடிக்கிறார். இவற்றில் நண்பேன்டா, இது நம்ம ஆளு படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகின்றன.

இந்நிலையில், தெருவோரக் மதுக்கடை ஒன்றில் நடிகை நயன்தாரா பீர் வாங்குவது போல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் உலா வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கடையில் நயன்தாரா நிஜமாகவே பீர் வாங்கினாரா அல்லது படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version