நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியும் சினிமா கதாநாயகியாகிறார். அவரை ஹீரோயினாக்க சில இயக்குநர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Untitled-138இன்றைய தமிழ் சினிமாவில், சினிமா, அரசியல் பின்னணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்றாகிவிட்டது. இன்றைக்கு முன்னணியில் உள்ள நடிகர்களில் அஜீத், விஜய் சேதுபதி போல சினிமா பின்னணி இல்லாதவர்கள் மிகக் குறைவு. நடிகைகளிலும் பல வாரிசுகள் வந்துவிட்டார்கள். இயக்குநர்களிலும் வாரிசுகளே அதிகம்.

கமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஹாஸன் இருவருமே நடிகைகளாகிவிட்டனர். முன்னாள் கதாநாயகி ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் கதாநாயகிகளாகியுள்ளனர்.
இந்த வரிசையில் கவுதமி மகள் சுப்புலட்சுமியும் கதாநாயகியாக நடிக்கப் போகிறாராம். சுப்புலட்சுமிக்கு இப்போது 16 வயது ஆகிறது. சினிமாவுக்கு தேவையான அளவுக்கு நடனம் கற்றுள்ளாராம்.

சுப்புலட்சுமியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் சிலர் முயன்று வருகின்றனர். சீக்கிரமே அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். வெல்கம்!

“த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஏன் இந்த தலைப்பு? – இயக்குநர் ஆதிக் பதில்

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக, ரசிகர்களின் மனம் கவரும் நடிகனாக மாறியிருக்கிறார் “டார்லிங்” ஜி.வி.பிரகாஷ்குமார். தாடியுடன் சிம்பிள் கெட்டப்பில் அனைவரிடமும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து ஜி.வியின் அடுத்த படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ பட நாயகி ஆனந்தி நடிக்கிறார்.

 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வாயில் பாட்டாசு, மணிக்கட்டில் பாட்டில் வாட்ச் என வித்தியாசமான கெட்டப்புடன் கம்மிங் ஆன் த வே டி செல்லக்குட்டீஸ் என இணையத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே அதிக நபர்களால் பகிரப்பட்டு டிரெண்ட் செட் ஆனது குறிப்பிடத்தக்கது.

படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்க படபிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள கிருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாவு மில்லில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே படத்தின் பெயரைக் கேட்டு, த்ரிஷாவும், நயன்தாராவும் வந்திருப்பதாக மக்கள் பெரும் அளவில் கூடி விட்டார்களாம்.

 

கடைசியில் ஆனந்தியை பார்த்ததும் இந்தப் பொண்ணும் அழகாத்தானே இருக்குனு சொல்லி சிரித்திருக்கிறார்கள் ரசிக பெருமக்கள்.

அப்போ என்னதான் படத்தோட கதை, “ அப்பாவி இளைஞனின் காதலும் அதில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களுமே ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ என்கிறார் படத்தின் இயக்குநர் ஆதிக்.

 

டார்லிங்’ சட்டென இடி மழை பாடல் வீடியோ

Share.
Leave A Reply

Exit mobile version