இலங்­கையின் சர்வ வல்­லமை பொருந்­திய ராஜா­தி­ராஜ  மகா­ரா­ஜாவும் அவ­ரது சகாக்­களும் மக்கள் விருப்பு வாக்­குகள் மூலம் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்டு இரு வாரங்­க­ளா­கின்­றன.

இவ்­விரு வார காலத்­திற்­குள்ளும் தேர்­த­லுக்கு முந்­திய வாரத்­திலும் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் வெகு சுவா­ரஷ்­ய­மா­னவை.

அர­சி­யலில் நிரந்­தர நண்­பர்­களோ பகை­வர்­களோ கிடை­யாது என்­ப­துடன் அர­சி­யல்­வா­தி­களில் பல­ருக்கு நிரந்­த­ர­மான கொள்கை­களோ நாக­ரி­கத்­தன்­மை­களோ விழு­மி­யங்­களோ கிடை­யாது என்­பதை இக்­கால பகு­தியில் இடம்­பெற்ற சம்பவங்களை வைத்து உய்த்­து­ணர்­வது கடி­ன­மன்று.

கட்சித் தாவல்கள், காட்­டிக்­கொ­டுப்­புக்கள், நம்­பிக்கைத் துரோ­கங்கள், தமது துரோ­கங்­களை நியா­யப்­ப­டுத்த முயலும் நடத்தைகள் போன்­ற­வற்றை ஸ்ரீமான் பொது ஜனம் வெகு நுணுக்­க­மாக அவ­தா­னித்துக் கொண்­டு­தா­னி­ருக்­கி­றது.

வெறு­மனே தேர்­தல்­களை நடத்தி அர­சி­யல்­வா­தி­களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி விடு­வதால் ஒரு நாடு ஜன­நா­யக நாடாகி விடாது.

ஆட்­சியில் அமர்­பவர் யார், அவ­ரது தகுதி என்ன, கடந்த காலத்தில் அவ­ரது செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைந்­தன போன்ற எது­வித உசா­வல்­களும் இன்றி பணமும் அதி­கார பலமும் உள்ள மேல்­மட்ட அர­சி­யல்­வா­தி­களின் ஆசீர்­வாதம் பெற்ற எவரும் அர­சி­ய­லுக்கு வரலாம் என்ற நிலையில்,

எழுத்­த­றிவு இருந்த போதிலும் அர­சியல் அறி­வற்ற – கொள்­கை­க­ளுக்­காக அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு வாக்­க­ளிக்­காமல் அவர் தம் பிர­ப­லத்­திற்­கா­கவும் அற்ப சலு­கை­க­ளுக்­கா­கவும் வாக்­க­ளிக்கும் கணிசமான வாக்­கா­ளர்­களைக் கொண்ட எந்­த­வொரு நாட்டிலும் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையோ நல்­லாட்­சி­யையோ எதிர்பார்ப்­பது கடினம்.

கூர்­மை­யான திட்­டங்­க­ளையும் கைகளில் கறை­ப­டி­யாத அர­சியல் தலை­வர்­க­ளையும் கொண்ட அர்ப்­ப­ணிப்­புடன் தமது அரசியல் எதிர்­கா­லத்தை பற்றி அதிகம்   அலட்­டிக்­கொள்­ளாத ஒரு அர­சாங்­கத்­தினால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் ஒருங்­கி­ணைந்த நட­வ­டிக்­கையின் மூலமே பகீ­ர­தப்­பி­ர­யத்­த­னத்தின் பின்னர் அது சாத்­தி­ய­மாகும்.

2005 இல் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் ஊடாக மகா­ராஜா அரி­யணை ஏறி­யதும் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளாக பார்க்­கப்­பட முடி­யாது.

தனது சகோ­த­ரர்­க­ளையும் உற­வி­னர்­க­ளையும் தனக்கு நெருக்­க­மான விசு­வா­சி­க­ளையும் துதி­பா­டி­க­ளையும் உயர்­மட்டபதவி­களில் அமர்த்­து­வதன் மூலம்…

தனது ஆட்­சிக்கு அர­சுக்­குள்­ளேயும் வெளி­யேயும் ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­களை முளை­யி­லேயே கிள்ளி தனது அடுத்து வரும் பரம்­ப­ரையும் நீண்ட காலத்­திற்கு நாட்டை ஆளும் வண்ணம் தனது அதிகாரத்தை உறு­தி­யாக தக்க வைத்­துக்­கொள்­வதே முக்­கிய நோக்­க­மாக அமைந்­ததை நாம் பார்க்­கலாம்.

அதேபோல் ஒரு இரும்புக் கரத்தை தமிழ் மக்கள் மீது பிர­யோ­கித்து அவர்­க­ளது இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் நடவடிக்கை­க­ளையும் முன்­னெ­டுத்தார்.

2009இல் உள்­நாட்டுப் போர் முடிவில் இடம்­பெற்ற நிகழ்­வுகள் கார­ண­மாக இது உல­க­ளா­விய ரீதியில் பலத்த விமர்­ச­னங்­க­ளையும் கண்­ட­னங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யது.

ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் சிறு­பான்மை மக்கள் மீது ஏற்­ப­டுத்­திய பாதிப்­புக்கள் குறித்து தென் பகுதி மக்கள் பெரும்­பா­லானோர் மத்­தியில் நியா­ய­மான புரிதல் இருக்­க­வில்லை.

யுத்தம் இடம்­பெற்ற போது ஏற்­பட்ட பொது­மக்­களின் இழப்­புக்கள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்­களும் சமூக வலைத்­த­ளங்­களும் காட்­சிப்­புல சாட்­சி­யங்­க­ளுடன் வெளிப்­ப­டுத்­தியபோது தென்­ப­கு­தியில் இருந்த சாதா­ரண பொது­மக்­களும் தென்­ப­குதி கல்விச் சமூக புல­மை­யா­ளர்­களும் அது பற்றி கிஞ்­சித்­தேனும் அனு­தா­பப்­ப­டவோ அல்­லது குரல் கொடுக்­கவோ முன்­வ­ர­வில்லை.

மாறாக கொல்­லப்­பட்ட அனை­வரும் புலிகள் என்றும் அல்­லது புலி­க­ளுக்கு சார்­பா­ன­வர்­க­ளா­கையால் அவர்கள் சாவது நியாயமே என்றும் குழந்­தை­களும் சிறு­வர்­களும் இறக்­கையில் எதிர்­கால புலிகள் இறப்­பது நியா­யமே என்றும் பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தினர்.

யுத்தம் முடி­வுற்ற போது தென்­ப­குதி பூரா­கவும் பாற்­சோறு சமைத்து, வெடி கொளுத்தி கொண்­டா­டி­ய­வர்கள் நம் கண்முன்னே வரு­கின்­றனர்.

வேரோடு நாட்டைக் கைப்­பற்றி குதூ­க­லிப்­பது போல தென்­னி­லங்கை கொண்­டாட்­டங்கள் அமைந்­தன. ராஜபக் ஷ பேர­ர­ச­ராக வர்­ணிக்­கப்­பட்­ட­மைக்கு தமிழ் பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­க­டித்தார் என்ற ஒற்றைக் காரணம் மட்­டுமே இருந்­தது.

ஊட­கங்கள் தோர­ணங்கள், பொதுக்­கூட்­டங்கள் எல்­லாமே இலங்­கையை ஒரு­மைப்­ப­டுத்­திய பேர­ர­ச­ரா­கவே ராஜபக் ஷவை வெளிப்­ப­டுத்­தின.

சமூ­கங்கள் மத்­தியில் யுத்­தத்தின் முடிவு ஒரு­மைப்­பாட்டைக் கொண்டு வரு­மென்று பொது­வான கருத்­து­களும் இருந்த போதிலும் யுத்­தத்தின் முடிவு இனங்­க­ளுக்­கி­டை­யே­யான பிள­வினை அக­லப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தது.

இலங்­கையில் சிறு­பான்மை என்று எவரும் இல்லை என்று ராஜபக் ஷ உதட்­ட­ளவில் கூறி­னாலும் தோற்­க­டிக்­கப்­பட்ட ஒரு இனம், தாம் சொல்­வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற மேட்­டி­மைப்­போக்கே அவ­ரதும் அவ­ரது அர­சாங்­கத்­தி­னதும் நடவடிக்­கை­களில் பிர­தி­ப­லித்­தது.

தமக்கு சார்­பாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளக் கூடிய புலித்­த­லை­வர்­களைப் பிடித்து அவர்கள் மூல­மா­கவும் தமக்கு தேவை­யா­ன­வற்றை நிறை­வேற்றும் போக்கும் காணப்­பட்­டது.

இந்­ந­ட­வ­டிக்­கைகள் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில் ராஜபக் ஷவின் மதிப்பை மேலும் உயர்த்­தி­ய­துடன் தோற்­க­டிக்­கப்­பட முடி­யாத ஒரு பேர­ரசன் என்ற நிலைக்கு அவரை உச்­சா­ணிக்­கொம்பில் ஏற்றி வைத்­தது.

யுத்­தத்தின் முடிவு இலங்கை தனது காயங்­களை ஆற்றி முன்­னோக்கிச் செல்­லக்­கூ­டிய அரிய ஒரு வாய்ப்­பினை ஆட்சியாளர்க­ளுக்கு வழங்­கிய போதும், அவ்­வாய்ப்­பினை ராஜபக் ஷ அர­சாங்கம் தனது இறு­மாப்பின் கார­ண­மாக நழுவ விட்டது.

யுத்த வெற்றி என்ற மம­தையே காயப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறு­த­ல­ளித்து ஆற்­றுப்­ப­டுத்தி அர­வ­ணைத்து செல்­லு­வ­தற்கு பதிலாக அடக்கு முறை­யையும் வன்­மு­றைக் கலாசா­ரத்­தையும் இருப்­பையே மறுத்­து­ரைக்கும் போக்­கி­னையும் ஏற்படுத்தியதென்றால் அது மிகைப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றல்ல.

மறு­புறம் தனது நீண்ட கால இருப்­பினை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் முக­மாக ராஜ­பக் ஷ குடும்பம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பத்தில் சிங்­கள அர­சி­யல்­வா­திகள் அவ்­வ­ள­வாகக் கண்டு கொள்­ளா­விட்­டாலும் சிறு­பான்மைத் தமி­ழரை அடக்­கப் ­ப­யன்­ப­டுத்­தப்­பட்ட இரும்புக் கரம் தம் மீது பாய்ந்த போது நிலை தடு­மாறிப் போனார்கள்.

குறிப்­பாக யுத்­தத்­திற்கு தலைமை வகித்த இரா­ணு­வத் ­த­ள­பதி சரத் பொன்­சேகா தனது போட்­டி­யா­ள­ராக 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கி தோற்ற போது அவ­ருக்கு நடந்த உப­ச­ர­ணைகள் ராஜ­பக்ஷ  தன்னை எதிர்க்கும் எவரையும் விட்டு வைக்­கப்­போ­வ­தில்லை என்­பதை வெளி­யு­ல­குக்கு துலாம்­ப­ர­மாகக் காட்­டி­ன.

ராஜபக் ஷ அர­சாங்­கத்தை விமர்­சித்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் அச்­சு­றுத்­தப்­பட்டு நாட்டை விட்டு வெளி­யேற நேர்ந்­தது. சிலர் கொல்­லப்­பட்­டனர்.

ஊடக நிறு­வ­னங்கள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின. குறிப்­பாக, சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் கொலை, சர்­வ­தேச ரீதியில் ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­திற்கு மிகுந்த அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யது.

இறு­திக்­கட்­டப்­போரில் ஏற்­பட்ட பொது­மக்­களின் உயி­ரி­ழப்­புக்கள் குறித்து சாட்­சி­யங்­க­ளுடன் சர்­வ­தேசம் கேள்வி கேட்க முனைந்த போது நாட்டைக் காட்டி கொடுக்கும் சதி­கா­ரர்­களின் வேலையே இக் குற்­றச்­சாட்­டுக்­க­ளெ­னவும்…

தனி மனித உரிமைகள் பற்­றிய பிர­க­ட­னத்தை ஒரு கையிலும் துப்­பாக்­கியை மறு கையிலும் கொடுத்தே தனது வீரர்கள் தமிழ் மக்­களை புலிப்­ப­யங்­க­ர­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்து மீட்கும் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள அனுப்­பி­ய­தா­கவும் பொதுமக்கள் எவரும் உயி­ரி­ழக்­க­வில்லை எனவும் உயி­ரி­ழந்த அனை­வரும் பயங்­க­ர­வா­தி­களே எனவும் பதி­ல­ளிக்க முற்பட்டார்.

இலங்­கையில் இரு வகை­யான மக்­களே இருப்­ப­தா­கவும் நாட்டை நேசிக்கும் மக்கள் ஒரு­வகை. நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோ­கிகள் மறுவகை எனவும் அவர் வெளிப்­ப­டுத்த முயன்றார்.

தானும் தனது அரசும் மேற்­கொள்ளும் எல்லா நட­வ­டிக்­கை­களும் நாட்டை நேசிக்கும் நட­வ­டிக்­கை­க­ளெ­னவும் நாட்டை நேசிக்கும் மக்கள் தனக்கு ஆத­ர­வாக உள்­ள­தா­கவும்

நாட்­டுக்கு துரோகம் விளை­விப்­போரே தமக்கு எதி­ரா­கவும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தா­கவும் சர்­வ­தேச ஏகா­தி­பத்­தியவாத சக்­தி­களும் அரசு சாரா நிறு­வ­னங்­களும் வழங்கும் டொலர்­களைப் பெற்­றுக்­கொண்டு தமது அரசாங்­கத்­திற்கு எதி­ராக பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களைச் சுமத்­து­வ­தா­கவும் நியா­யப்­ப­டுத்த முனைந்தார்.

அரசதுறை முழு­வ­தையும் தனது பூர­ண­மான கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வந்து ராஜ­ப­க் ஷவைத் தவிர வேறெ­வரும் தலை­வ­ரில்லை என்­ற­வா­றா­ன­தொரு மாயை உரு­வாக்­கப்­பட்­டது.

அரச ஊட­கங்கள் முற்றும் முழு­தாக ராஜ­பக் ஷ புகழ்­பா­டு­வ­தையே தமது முழு நேரக் குலத்­தொ­ழி­லாகக் கொண்­டன. உதா­ர­ண­மாக, இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் தமது நிகழ்ச்­சி­களின் நடுவே குறிப்­பிட்ட நிமி­டங்கள் தேச­பக்திப் பாடலை ஒலிபரப்ப உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

தேச பக்திப் பாடல் என்ற பெயரில் ராஜபக் ஷவை காவென்றும் கோவென்றும் புகழ்­மாரி பொழியும் பாடல்­களே ஒலிபரப்பப்பட்­டன. நாட்டின் சகல சந்து பொந்­து­க­ளிலும் ராஜபக் ஷவின் கட் அவுட்­டு­களும் பதா­தை­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

நட்­டத்தில் இயங்கும் அரச நிறு­வ­னங்­களும் கூட பத்­தி­ரி­கை­களில் முழு அளவு விளம்­ப­ரங்­களைப் பிர­சு­ரித்து வாழ்த்தத் தொடங்­கின. இவ்­வாறு தன்னை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­வாறு அர­ச­னாக முற்­பட்ட ராஜ பக் ஷ தனது குடும்­பத்­தி­ன­ரது நட­வ­டிக்­கை­களால் மேலும் தன்னை நிலைப்­ப­டுத்த முயற்­சித்தார்.

அதுவே தனக்குப் பாது­காப்பு எனவும் கரு­தினார். அர­சி­யல்­வா­தி­யாக மாறிய அவ­ரது மகன் அடுத்த வாரி­சா­கவும் இள­வ­ர­ச­ரா­கவும் தன்னைக் கருதிக் கொண்டார்.

அவ­ரது நட­வ­டிக்­கை­களும் அவ்­வாறே அமைந்­தன. மூத்த அர­சி­யல்­வா­தி­களே முகம் சுளிக்கும் அள­வுக்கு நடத்­தைகள் அமைந்தன என்பது பரகசியம். பாதுகாப்புச் செயலாளராக ராஜபக் ஷவின் சகோதரர் ஒரு சர்வாதிகாரியாகவே தன்னை நினைத்தார்.

யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை கொண்ட ஒருவராகவே தன்னை முன்னிலைப்படுத்தினார். ஒரு அமைச்சின் செயலாளர் என்ற அரச ஊழியர் பதவி அவருடையது.

ஆனால் ராஜபக் ஷவுக்கு அடுத்த படியாக அதி கூடிய அதிகாரமிக்கவராக அவர் விளங்கியமைக்கு ராஜபக் ஷவின் சகோ தரர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு காரணங்களில்லை.

கலா­நிதி எம். கணே­ஷ­மூர்த்தி சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்

பல்லைக் கடித்த படி அவர் அளித்த பேட்டிகளைக் காணும போது அருவருப்பு மிக்க ஒரு உணர்வே ஏற்படுகிறது.

எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சுடன் நகர அபிவிருத்தி என்ற நீட்சியையும் எற்படுத்தி கொழும்பு நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து இராணுவத்தினரை கட்டு மானப் பணி­களில்   ஈடு­ப­டுத்­தி­யமை கார­ண­மாக கொழும்பு நகரின் முக்­கிய பகு­திகள் தற்­போது வெளி­நாட்டு நகரங்களின் வச­தி­க­ளோடு அபி­வி­ருத்தி செய்­ததில் கோத்­தா­பய ராஜபக் ஷ வின் தலை­மைத்­து­வத்­தினை நாம் குறைத்து மதிப்­பிட முடி­யாது.

அவ்­வாறு செய்­வது பக்கச் சார்­பு­டை­ய­தா­கவே அமையும். எவ்­வா­றா­யினும், அவ­ரது ஜன­நா­யக விரோதச் செயற்­பா­டுகள் பல­வாறும் கடு­மை­யான விமர்­சனங்களுக்கு உட்பட்டுள்ளமை வெளிப் படையானதாகும்

(தொடரும்)

Share.
Leave A Reply

Exit mobile version