லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியான் குறித்த ஒரு பரபரப்புத் தகவல் சவூதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளில் வலம் வந்து கொண்டுள்ளது.

அதாவது சவூதி அரேபிய இளவரசருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க அவர் 10 லட்சம் டாலர் பணம் கட்டணமாக பெற்றுள்ளார் என்றும், விரைவில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.

இந்த மாதமே அந்த விருந்து நடைபெறவுள்ளதாகவும், இதற்காக கிம் சவூதி வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பார்ட்டியில் சிறப்பு விருந்தினராக கிம் கலந்து கொள்ளவுள்ளாராம்.

12-1415786352-kim-kardashian-7-600அந்த இளவரசர், இன்ஸ்டாகிராம் மூலமாக கிம்மைத் தொடர்பு கொண்டு பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தாராம். ஒரு இரவு 10 லட்சம் டாலர் தருவதாகவும் அவர் கூறினாராம்.

அதை கிம் ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு அடெல் அல் ஒடாபி என்பவர், கிம்மின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இவர்தான் அந்த இளவரசர் என்று கூறப்படுகிறது.

இந்த ஆஃபரை கிம் உடனடியாக ஏற்றுக் கொண்டு விட்டதாக மீடியாடேக்அவுட் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது குறித்து கிம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால் சவூதி அரேபியா முழுவதும் இதே பேச்சாக உள்ளது.


கடந்த 2012ம் ஆண்டு பஹ்ரைனுக்குப் போயிருந்தார் கிம். அப்போது பெரும் கூட்டம் கூடி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் அளவுக்கு நிலைமை போனது. சவூதி அரேபிய ராஜ குடும்பத்தினர் நடத்தும் பார்ட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக கிம் போன்ற அழகிகள் அழைக்கப்படுவது புதிதல்ல.

அதன் மூலம் அவர்களுக்கு நல்ல பணமும் கிடைப்பதால் உடனடியாக கிளம்பி வந்து விடுகிறார்கள். கடந்த 2013ம் ஆண்டு துர்க்மேனிஸ்தான் அதிபரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதற்காக 10 லட்சம் டாலர் பணம் கட்டணமாக பெற்று வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல லண்டனில் கடந்த ஆண்டு நடந்த புரூனே சுல்தானின் மகன் நடத்திய விழாவில் நடிகை மரியா கேரி 10 லட்சம் பவுண்டு பணம் பெற்றுக் கொண்டு வந்து சென்றிருந்தார். இப்போது கிம் பெயர் அடிபடுகிறது.

கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!!

“பேப்பரை” பற்ற வைத்த கிம்மின் கலக்கல் “கவர்” படம்!

Share.
Leave A Reply

Exit mobile version