துக்கத்தை போலியாக கொண்டாடி, போன பின் துதிபாடி, பின் புறம்சொல்லி..  மரணத்தில்  கூட  பிழைப்பு  நடத்தும் மனிதர் கூட்டத்தினிடையே  இவ்வுயிரினங்கள் அதியசய பிறப்பே!

நியூ யார்க்: அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட் என்பவர் இரட்டைப்பிறவிகளான ’ரோட்வீய்லர்’ இன நாய்களை விலைக்கு வாங்கி செல்லமாக வளர்த்து வந்தார்.

கடந்த 20-ம் தேதி அந்த நாய்களில் ஒன்றான ஹேங்க்-கின் உயிர் பிரிந்தது. தனது உடன் பிறந்த சகோதரனின் பிரிவை தாங்க முடியாமல் அதன் பிணத்தின் மீது படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறியழுது.

மேலும், அந்த நாயை கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்ற உரிமையாளரின் காலை சுற்றிச்சுற்றி வந்து அவரை தடுத்தது.

அதனை கண்டு மனம் நெகிழ்ந்த உரிமையாளர் இறந்த அந்த நாயின் சடலத்தையும், கதறி அழும் அதன் சகோதரனின் சோகத்தையும் படம்பிடித்து யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version