லிங்கா படத்தால் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று சங்கோ சங்கு ஊதிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் சில விநி­யோ­கஸ்­தர்கள். ஆனால் படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னமோ லாபமும் இல்லை.

ஆனால் நஷ்­டமும் இல்லை போட்ட பணத்தை எடுத்­தி­ருக்­கி­றார்கள். பல ஏரி­யாக்­களில் வேண்­டு­மென்றே சிலர் ரஜி­னிக்கு எதி­ராக சதி செய்­கி­றார்கள் என்­கி­றது.

லிங்­காவால் ஏற்­பட்ட டமேஜ் கார­ண­மாக உங்­க­ளு­டைய இமேஜ் சரிந்து கொண்­டி­ருக்­கி­றது. நீங்கள் வாய் திறக்கா விட்டால் பெரும் சிக்­க­லுக்குள் உங்­களை தள்ளி விடு­வார்கள் என்று ரஜி­னியைச் சிலர் உசுப்பி வரு­கி­றார்கள். அவர் விரைவில் மௌனம் கலைத்துப் பகி­ரங்க பேட்டி தருவார் என்ற பர­ப­ரப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அவர் மௌனம் கலைக்­கி­றாரா இல்­லையா என்­பது தெரி­யாது. ஆனால் அவ­ரது மனச்­சாட்­சிப்­படி கற்­ப­னையில் ஒரு பேட்டி வெளி­யானால் எப்­படி இருக்கும் இதோ….

கேள்வி நீங்கள் ஓடாத குதி­ரையா?

பதில் ஓடாத குதி­ரைக்­கிட்டே பேட்டி எடுப்­பீங்­களா?

கேள்வி – லிங்கா ஓடி­யதா…ஓட­வில்­லையா?

பதில்
ஓடி­யது ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது ஓடும்!

கேள்வி – அப்­புறம் நஷ்டம் என்ற குரலும் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றதே?

பதில் – பெரிய ஹீரோக்­களின் படங்­களை மினிமம் கியா­ரண்டி பிளான்­லதான் ரிலீஸ் செய்­யி­றாங்க. அந்தப் பிளான்ல வெளி­யான படம் தான் லிங்கா. இந்த அக்­ரி­மென்ட்­படி பணம் திருப்பித் தர வேண்­டி­ய­தில்ல!

கேள்வி சரி பாபா குசேலன் படங்­களும் மினிமம் கியா­ரண்டி பிளான்ல தானே ரிலீஸ் ஆச்சு? அப்­புறம் ஏன் பணத்தைத் திருப்பிக் கொடுத்­தீங்க?

பதில் – மனி­தா­பி­மானம் பார்த்தேன். அது இப்போ தப்­புன்னு பீல் பண்றேன்!

கேள்வி. நீங்க காட்­டிய தவ­றான பாதையால் ஜில்லா படமும் நஷ்டம் என்று சொல்லி விஜய்க்­கிட்­டயும் 5 கோடி வாங்­கிட்­டாங்­களே?

பதில்– இதுக்குப் புள் ஸ்டாப் வைக்­கணும். அதுக்கு ஒரு பிளான் இருக்கு. அதை உங்க கிட்ட சொல்ல முடி­யாது. இனி எந்த ஹீரோ­வுக்கும் கஷ்டம் வராது!

கேள்வி – உங்க படத்­துக்கு ஏகப்­பட்ட ரேட் சொல்லி வியா­பாரம் செஞ்­சது சரியா?

பதில்
– படத்தைத் தயா­ரிச்­ச­வங்க யாரையும் வற்­பு­றுத்தி வாங்கச் சொல்­ல­வில்­லையே?

கேள்வி- உங்க படம் வசூ­லாகும் என்று நினைச்சு வாங்­கின விநி­யோ­கஸ்­தர்­க­ளுக்கு லாபம் வர­ணுமா இல்­லையா?

பதில்- லாபம் வந்தால் தயா­ரிப்­பா­ளர்கள் கிட்ட போய் அண்ணே… பத்துக் கோடிக்கு வாங்­கினேன். 40 கோடி கிடைச்­சது. இந்­தாண்ணே பத்துக் கோடின்னு இது வரைக்கும் யாரா­வது திருப்பிக் கொடுத்­தி­ருக்­காங்­களா?

கேள்வி – அஞ்சு எந்­திரன் பத்துப் படை­யப்­பா­வுக்குச் சமம். லிங்கா என்று சொல்­லி­வித்­தது தப்பு தானே?

பதில் – அது படத்தை ஓட வைக்­கிற மார்க்­கெட்டிங் அது தப்பா?

கேள்வி- படம் ஓடி­யி­ருந்தால் இந்தப் பிரச்­சி­னையே இல்­லையே?

பதில். என்­னோட எல்லாப் படங்­களும் 100 நாள் ஓடிச்சா இல்­லையே? 100 ஆவது படம் ராக­வேந்­திரா கூடத்தான் கல்லா கட்­டலை. அதுக்குப் பின்­னாடி வந்த மாவீரன் என்­னாச்சு? அப்­புறம் கொடி­ப­றக்­குது ராஜா சின்ன ரோஜா அதி­ச­யப்­பி­றவி எல்லாம் என்­னாச்சு?

படங்கள் ஓட­லையே ப்ளட் ஸ்டோன் என்று சொல்லி இங்­கிலீஷ் படம் நடிச்சேன். அது என்ன ஹோலி­வூட்ல போக்ஸ் ஆபிஸ் ஹிட்டா? லாபம் கிடைக்­கல என்று யாரா­வது கொடி பிடிச்­சாங்­களா?

அதுக்கு அப்­பு­றமா 60 படம் நடிச்­சி­ருக்­கேனே. ஒரு படம் ஓடினா கொண்­டா­டு­வாங்க. ஒரு படம் படுத்­துச்­சின்னா கல் எடுத்து வீசு­வாங்க. எல்­லாத்­தையும் பார்த்­துட்டேன். ஆனால் நானே யாரையும் போய் என்னை வைச்சுப் படம் எடுங்­கன்னு சொல்­றது இல்லை.

என் படத்தை வாங்­கிக்­குங்­கன்னு சொன்­னதும் இல்லை. பொய்க்­க­ணக்கு காட்டி அக்­ரி­மென்ட்டை மீறி பணத்தைக் கொடுன்னு சொன்னால் கொடுத்­துட முடி­யுமா?

அப்போ லிங்கா படத்தில் வசூல் இருந்­ததா சொல்­றீங்­களா?

பதில் – சென்­னையில் முதல் நாள் 150 ரூபா டிக்­கெட்டை 500 ரூபாய்க்கு வித்­தாங்க. ராத்­திரி ஒரு மணிக் காட்­சிக்கு ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு வித்த தியேட்­ட­ருங்­களும் எனக்குத் தெரியும். அதே சமயம் பிளாக்கில் 300 ரூபாய்க்கும் வித்­தாங்க. தியேட்­டர்ல நாலு நாள் வசூ­லான பார்க்கிங் கேன்டீன் வியா­பா­ரமும் எனக்குத் தெரியும். இங்கே யார் உண்­மையச் சொல்­றாங்க. ஆனால் உண்மை தெரிய கொஞ்சம் லேட்­டாகும்.

கேள்வி
– ஊர்ல இருக்­கிற எல்லாத் தியேட்­டர்­லயும் ஒரே படத்தை ரிலீஸ் செய்­யி­ற­தால்தான் இந்தப் பிரச்­சி­னையா?

பதில் – நோ கமென்ட்

கேள்வி- சரி படத்தை முத­லி­லேயே விநி­யோ­கஸ்­தர்­க­ளுக்குப் போட்டுக் காட்டி படத்­தோட விலையை நிர்­ணயம் செஞ்­சி­ருக்­க­லாமே!

பதில் – பாயாசம் கொடுத்தால் சாப்­பிட்டுப் பாக்­கணும் பாய­சத்­துல முந்­திரி இன்னும் போடணும் சர்க்­கரை கம்­மின்னு ஆளா­ளுக்குச் சொல்­லிக்­கிட்டுப் போனால் எப்­படி? அதனால் படத்தைக் அவங்­க­ளுக்குப் போட்டுக் காட்­டு­றதை நிப்­பாட்­டி­யாச்சு!

கேள்வி – பணத்தைக் கொடுத்துப் பொருளை வாங்­கி­ற­வங்­க­ளுக்குப் பொருளைக் காட்­டாமல் எப்­படி விக்­கி­றது?

பதில்- இங்கே அதுல இடி­யப்பச் சிக்கல் இருக்­கு­துன்னு சொல்றேன் விட்­டு­டுங்க!

கேள்வி- தமிழ்ப் படங்­க­ளோட பட்ஜேட் அதி­கப்­பட்சம் 50லிருந்து 60 கோடிதான். அதுக்கு மேல 100 கோடின்னு போய் எடுத்தால் சிக்கல் வருது ஒப்­புக்­கி­றீங்­களா?

பதில் -எதை வச்சி அளவு போட­றீங்க? இங்கே ஒரு டைரக்டர் 25 கோடி சம்­பளம் கேட்­கி­றது உங்­க­ளுக்குத் தெரி­யுமா?

கேள்வி – 100 கோடி பட்ஜெட் 1000 தியேட்­டர்­களில் ரிலீஸ்ன்னு வெளி­யிட்ட எந்­திரன் படத்­து­லயும் நஷ்டம் என்று சொல்லி கோர்ட்­டுக்குப் போனாங்க. திரும்பவும் அதே ஸ்டைல் தேவையா?

பதில்– உங்க ஆலோசனைக்கு நன்றி!

கேள்வி- அடுத்து உங்க படத்தை ஷங்கர் கூட்டணியில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் உங்கள் இரண்டாவது பேரன் யாத்ராவின் பெயரில் 200 கோடியில் எடுக்கப் போறதாச் சொல்றாங்களே?

பதில் – பேட்டியை முடிச்சிக்கலாம்!

இப்படி ஒரு பேட்டி வரும்ம்ம்ம்…ஆனால் அது எப்போ என்று தான் தெரியாது.

Share.
Leave A Reply

Exit mobile version