Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியின் பின்புறமாக மோதியது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவரும் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. Post Views: 57
உங்கள் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடற்றொழில் செய்வதானால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் – இலங்கை மீனவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடிJanuary 11, 2025