பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
இந்த அசாதாரண வர்த்தமானி அறிவித்தல், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், சிறிலங்கா ஆயுதப்படைகளிலும் பணியாற்றும் அனைவருக்கும், சிறிலங்காவின் 25 மாவட்டங்களிலும், காவல்துறையினரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும், அதிகாரம் அளிக்கப்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது நாட்டில் சிவிலியன் நிர்வாகம் மீண்டும் ஏற்படும் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

army_gazzate_01

 

Share.
Leave A Reply

Exit mobile version