சிறுவன் ஒருவருக்கு குளிர்பாம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம்  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

 புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சி  பகுதியில் 10வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது அருகிலுள்ள தேனீர் கடையொன்றின் 67 வயதுடைய உரிமையாளர் குறித்த சிறுவனையும் அவரது சகோதரனையும் அழைத்துள்ளார்.

பின்னர் சிறுவனின் சகோதரனுக்கு டொபியொன்றை கொடுத்தனுப்பிவிட்டு குறித்த சிறுவனை கடைக்குள் வரவழைத்து கடையை மூடிவிட்டு சிறுவனுக்கு குளிர்பானம் வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சில நிமிடங்களில் தனது வீட்டுக்குச் சென்ற சிறுவன் நடந்த விடயத்தை தனது தாயாரிடம் கூறவே தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சிறுவனை அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைத் தேடிவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

குறித்த சிறுவன் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 4ம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரை இன்று கைது செய்யமுடியுமென குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version