கடத்தப்பட்ட வேனை  போலியான முறையில்  இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட விஷேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குலேந்திரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேக நபர் 56-5647 என்ற வேனைக் கடத்தி அதன் எஞ்ஜின் இலக்கம் மற்றும் வர்ணத்தையும் மாற்றி காத்தான்குடிக்கு எடுத்துவந்து வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
குறித்த வேன் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின்பேரில் விஷேட பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version