நாட்டின் முழு வரி வருமானத்தையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ என ஒரு குடும்பமே நிர்வகித்தது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த ஐந்து வருட காலத்தில் எந்த சட்ட திட்டங்களும் மதிக்கப்படாமல் ஊழல் மோசடிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தேசிய வருமானத்தில் பெருமளவு பகுதியை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்துள்ளது.
எமது ஏற்றுமதித்துறை பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் வரிச் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டன.
வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யே கூறப்பட்டு வந்துள்ளது. மத்திய வங்கி அறிக்கைகளும் திரிபுபடுத்தியே வெளி யிடப்பட்டுள்ளன.
கடன்பெற்ற பணமே வெளிநாட்டுக் கையிருப்பு என காட்டப் பட்டது. 100 ற்கு 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி எனக் காட்டுவதற்காக சரியான புள்ளி விபரங்கள் திரிபு படுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மஹிந்த பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள மைவெளிச்சம் பார்க்கவேண்டும் சபையில் பிரதமர் ரணில் பரிகாசம்
07-02-2014
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுமண தாஸவிடம் சாஸ்திரம் கேட்க வேண்டும். அத்தோடு மைவெளிச்சம் பார்க்க வேண்டிய
நிலையும் ஏற்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டின் விசேட உரையொன்றை ஆற்றினார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாகனங்கள் இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தினம் தினம் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக பெருந்தொகையான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் அருகிலுள்ள பாதையோரத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் வீடுகளில் பல்வேறு வாகனத் தரிப்பிடங்களிலும் முன்னாள் ஜனாதிபதி பாவித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
டிபென்டர் வாகனங்கள் உட்பட பெறுமதிமிக்க வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சில வாகனங்கள் பழுதடைந்துள்ளன. இவ் வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் சொந்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டவையல்ல.
மக்கள் மீது வரிகளை சுமத்தி அதன் மூலம் பெறப்பட்ட பணத்திலேயே இவ்வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
எனவே நாம் மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். எனவே ஜனாதிபதி பாவித்த வாகனங்களின் தொகை எவ்வளவு? அவ்வாகனங்கள் யார் யாருக்கு எதற்காக வழங்கப்பட்டது?
இவை தொடர்பாக பதிவுகள் உள்ளதா என்பது தொடர்பில் பிரதமரின் பதிலை எதிர்பார்க்கின்றேன் என்றும் அனுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குவதற்கு எம்மிடம் எதுவிதமான தரவுகளும் இல்லை. ஜனாதிபதி எத்தனை வாகனங்களை பாவித்தார் ? வாகனங்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டது? எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லை.
ஜனாதிபதியிடம் லம்போகினி கார்கள், ?????? கார்கள் எத்தனை இருந்தது என்பதும் தெரியவில்லை.
கம்பனிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களின் தொகை எவ்வளவு என்பதும் தெரியாது. 100, 1000, ஒரு இலட்சம் வாகனங்கள் பாவிக்கப்பட்டதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ் வாகனங்கள் தொடர்பாக எவ்விதமான பதிவேடுகளும் இல்லை. எனவே இவை தொடர்பாக எதிர்காலத்தில் விசாரணைகள் நடத்தப்படும். தேவையெனில் பாராளுமன்றத்தில் நாமனைவரும் இணைந்து இது தொடர்பாக ஆராய வேண்டும்.
இல்லாவிட்டால் சுமணதாஸவை அழைத்து சாஸ்திரம் கேட்க வேண்டும். அவராலும் முடியா விட்டால் மைவெளிச்சம் தான் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அரியநேத்திரன் எம்.பியிடம் ரூ.50 மில். நஷ்டஈடு கோரி கடிதம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரனிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சட்டத்தரணி யினூடாக கோரிக்கை கடிதம் அனுப்பி யுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. நேற்று பாராளும ன்றத்தில் தெரிவித்தார்.
சிறப்புரிமை மீறல் பிரச்சினை யொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், எமது அரசாங்கத்துடன் இணைந்தால் 50 கோடி ரூபா தருவதாக நான் கூறிய தாக, அரியநேத் திரன் எம்.பி. ஊடகங் களுக்கு தெரிவித்துள் ளார்.
இவருடன் நான் ஒருபோதும் பேசியது கிடையாது. ஆனால் பாராளுமன்றத்தில் நேரில் கண்ட போது சிரித்திருக்கிறேன். எனக் கெதிராக பொய்க் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. என்னை கைது செய்வதற்காகவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அண்மையில் திஸ்ஸ அத்தநாய க்கவையும் இவ்வாறு கைது செய்தனர்.
ஒரு வருடத்துக்கு முன்னர் தாம் கண்ட கனவைத் தான் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றார். இதனை சபாநாயகரின் கவனத்திற் கொண்டு வருவதாக குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார் தெரிவித்தார்.