சதாம் உசைனை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில் விடப்பட்டதையடுத்து தற்போது வரை 92 கோடியே 96 இலட்சம் ரூபா வரை எட்டியுள்ளதோடு மேலும் ஏலத்தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது.
அவரது கழுத்தை இறுக்கிக் கொன்ற தூக்குக் கயிற்றை ஏலத்தில் விட லண்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும் உலகின் பல நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க தொடங்கி விட்டனர்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு செல்வந்தரின் குடும்பம், குவைத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், ஈரானை சேர்ந்த ஒரு மத அமைப்பு ஆகியவை இந்த தூக்குக் கயிற்றை வாங்கிவிட முன்முரம் காட்டி வருகின்றன.
இதனையடுத்து, இந்த கயிற்றுக்கான ஏலத்தொகை தற்போது 70 இலட்சம் அமெரிக்க டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 92 கோடி 96 இலட்சம் ரூபாய்) எட்டியுள்ளது.
எனினும், ஏலம் முடிந்து விடவில்லை. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போகும் போக்கைப் பார்த்தால் இந்த கயிறு ஒரு கோடி டாலர் வரை விலை போகலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது.