சமூகத்தில் பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் பெண்ணிற்கு குடும்பத்திலும் கூட பாதுகாப்பு இல்லை என்பதை ஒரு பெண்ணின் வாக்குமூலம் அம்பலப்படுத்தியுள்ளது.

துருக்கியை சேர்ந்த 49 வயதான கோனுல், 67 வயதான தன் கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்துறையிடம் சரணடைந்த பின் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை படித்தால் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள்.

ஏகப்பட்ட கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த கோனுல், முதல் 20 நாட்கள் அவரது கணவரின் அன்பான நடவடிக்கையால் தன் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவே நினைத்தார். அதற்கு பின்னர் தான் கணவரின் வக்கிரபுத்தி கோனுலுக்கு தெரிய வந்தது.

விடிய விடிய ஜெர்மன் நீலப்படங்களை பார்க்கும் அந்த வக்கிர ஆசாமி, அதே போல் நடந்து கொள்ள வேண்டும் என்று கோனுலையும் கட்டாயப்படுத்துவார். முடியாது என்று மறுக்கும் கோனுலை வெறித்தனமாக அடித்து துன்புறுத்துவார்.

இனியும் இந்த வேதனையை பொறுத்துக்கொள்ள முடியாதென்று முடிவெடுத்த கோனுல் இத்தனை வருடங்களாக தன் கணவன் கொடுத்த வேதனைக்கு பதிலாக அவருக்கு சில நிமிட வேதனைகளை மட்டுமே கொடுத்தார்.

சமையலறைக்கு சென்றார். கத்தியை எடுத்து வந்தார். கணவனின் கழுத்தை கத்தியால் அறுத்து அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார். பின்னர் இஸ்பர்டா மாகாண காவல்துறையிடம் சரணடைந்தார்.

இது குறித்து பேசிய துருக்கிய அதிகாரிகள் “குடும்ப வன்முறை நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படுகின்றனர். மிக சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் தங்களை கொடுமைப்படுத்தும் கணவர்களை கொல்கின்றனர்” என்றார்.

தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள கோனுலிடம் காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version