காணாமற்போன தமது உறவினர்களை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகே காலை ஒன்பது மணியளவில் கூடிய மக்கள் அங்கிருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்றுள்ளனர்.
காணாமல் போயுள்ள தமது உறவுகளை தேடி தருமாறு வலியுறுத்தும் வகையில் இதன் போது அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கடந்த அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தபோதிலும் காணாமல்போன தமது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குறிப்பிட்டனர்.
யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் முற்பகல் 11 மணிவரை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தை அடுத்து மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
காணாற்போனவர்களின் உறவினர்கள் கையளித்த மகஜரை தமது அலுவலக உத்தியோகத்தர்கள் ஏற்றுக்கொண்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்
மேலும்… இன்றைய இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்..