நித்தி – ரஞ்சி படுக்கையறை விஷயம் பழைய கஞ்சியாகிவிட்டது என்று ஓய்ந்திருந்த வேளையில், மீண்டும் அதை சூடாகப் பொங்க வைத்திருக்கிறார்கள் – ஒரு டப்பிங் திரைப்படத்தின் மூலம் நித்தியானந்தா – ரஞ்சிதா லீலைகளை மையமாக வைத்து ‘யாரிவனு’ என்று ஒரு கன்னடப் படத்தைத் தயாரித்திருந்தார், கன்னடத் தயாரிப்பாளர் மதன் பட்டேல்.
நித்தி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் அவர்தான். ‘யாரிவனு’ பட ரிலீஸின்போதே, நித்தியின் ஆதாரவாளர்களிடம் இருந்து இதற்குப் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதையும் மீறி, பாக்ஸ் ஆபீஸை லேசாக உரசி வெற்றி பெற்றது ‘யாரிவனு!’
கன்னடம் மட்டுமில்லை; தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் இதைக் கூற வேண்டும் என்று முடிவெடுத்த மதன் பட்டேல், தமிழிலும் இதை ரிலீஸ் செய்யத் தயாராகி விட்டார்.
‘சொர்க்கம் என் கையில்’ என்ற பெயரில் ரிலீஸாகத் தயாராக இருக்கும் இந்தப் படத்திற்கு இசை, தயாரிப்பு, இயக்கம் எல்லாமே மதன் பட்டேல்தான்.
இந்தப் படத்தின் ஹைலைட்டே… நித்தி கதாபாத்திரத்துக்காகவே பிறந்தவர் போல் மதன் இருப்பதுதான். படத்தின் ஸ்டில்லைப் பார்த்தால், ஏதோ நித்தியே படத்தில் நடித்திருக்கிறார் என்று நினைத்துவிடுவீர்கள்.
இதைக் கேள்விப்பட்ட நித்தியானந்தாவின் தமிழ் சீடர்கள் வழக்கம்போல், ‘‘நீ நாசமாப் போயிடுவே; உன் அழிவு எங்கள் கையில்தான்!’’ என்று மதனை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இது வரை 200-க்கும் மேற்பட்ட மிரட்டல் போன்கள் வந்து குவிந்து விட்டனவாம்.