மரணம் சுகமானது ?

இந்த இடுகாடோ..

அல்ல அந்தச் சுடுகாடோ

என் வருகைக்காய்

காத்திருப்பதை உணர்கிறேன் …

 

 பத்துத் திங்கள்

கருவறை என் கூடிய பட்ச

நிம்மதியான நாட்கள்

 என்றே எண்ணத் தோன்றுகிறது …

 

கருவறை சுகமானது …

கல்லறைகளும் சுகமானதா ?

கருவறை விட்டு வெளி வந்து

 கல்லறை வரைக்காலங்கள் -நரகம் …

 

யாரும் யார் மீதும்

நிலைத்து அன்பு கொள்வதில்லை

எல்லாமே எதை நோக்கி ஓடுகிறார்கள் ?

 ஏன் என்னால் மட்டும் மாற முடியாதுள்ளேன் ? …

 

என்னுள்ளே எழுகின்ற

வினாக்களுக்கு முடிவு காணாது

விடை பெற்று விடுவேனோ ?

நான் பூமியில் பிறந்திருக்கவே கூடாது …

 

என்னை அன்பு செய்தவர்கள்

முடிவில்லாது அம்பு எய்கிறார்கள்

மனசு கனக்கிறது மாயைக்குள் விழுந்து விட …

நானும் தயாரில்லை

 இவைகளை விட மரணம் சுகமானது…

 

***ஸ்வேதா ***
-பிரான்ஸ்-

Share.
Leave A Reply

Exit mobile version