ஹட்டன் நகரிலுள்ள மதுபான நிலையமொன்றில், மது அருந்திகொண்டிருந்த நிலையில் யுவதி ஒருவர் உள்ளிட்ட இளைஞர்கள் ஐவரை நேற்று புதன்கிழமை மாலை (11) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாத மாலைக்கு செல்வதற்காக, மொரட்டுவை, அங்குலானையிலிருந்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுவதி ஒருவரை மதுபான நிலையத்துக்கு மறைவாக அழைத்துச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மேற்படி ஐவரையும் வைத்திய பரிசோதனையின் பின் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.