வாக்களித்த மக்களின் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக… அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாத தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் வாழ்க்கையை மட்டும் வசதியாக மாற்றிக்கொண்டு வனப்புடன் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன்திட்டம் மற்றும் புன்னைநீராவி பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களது காணிகளின் உறுதிப்பத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் ஆகியவற்றைப் பெற்றுத்தருமாறு கோரி புதன்கிழமை (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று மாவட்டச் செயலாளரிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட மேற்படி பகுதி மக்கள், தாங்கள் 25 தொடக்கம் 30 வருடகாலமாக அந்தக் காணிகளில் குடியிருப்பதாகவும் தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இதுவரையில் வழங்கப்படாமையால் வீட்டுத்திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கூறினர்.

மின்சாரம், வீதி ஆகிய அடிப்படை வசதிகளும் தங்கள் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவில்லை என கூறினர்.

இந்த மக்களின் கோரிக்கை தொடர்பில் கருத்து கூறிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், ‘கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிவபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில் மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் குடியேறிய 1050 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுடைய காணிகள் தனியார்களுக்குச் சொந்தமான காணிகள். அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அல்லது வெளியிடங்களில் உள்ளனர். காணி உரிமையாளர்கள் காணிகளை கேட்கும்போது காணிகளை வழங்க வேண்டும்.

இது தொடர்பான முடிவை மாகாண காணி ஆணையாளர் தான் தீர்மானிக்கவேண்டும். இந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் 3 மாத கால அவகாசம் தருமாறும், அதற்குள் சாதகமான பதிலை வழங்குவதாகவும்’ கூறினார்.

‘மக்களுக்காக சேவை செய்யும் நாங்கள், மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவோம். நீண்ட காலமாக அந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தகுந்த பதிலை வழங்குவோம்’ என்றார்.

பா.உறுப்பினர் சி.சிறீதரன் வனப்பை பாருங்கள். சி.சிறீதரனின் பாராளுமன்ற பதவியை பெற்றுக்கொள்ள முன்பு , போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் நிலமையில்தான் இருந்தார். இப்பொழுது அவர் அணிந்திருக்கும் ஆடையின் அழகையும், சரீரத்திலும், வதனத்தில் உருவெடுத்திருக்கும் வனப்பையும் பாருங்கள்.

(புதுக்குடியிருப்புப் பிரதேச பண்பாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் வடமாகாண தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.)

வாக்களித்த மக்களின் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக… அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாத தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் வாழ்க்கையை மட்டும் வசதியாக மாற்றிக்கொண்டு வனப்புடன் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்  என்பதைதானே  இப்படங்களின்  மூலம்  நாம்  பார்ககூடியதாக இருக்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version