இலங்­கை­யின் ­கி­ழக்­குப் ­ப­கு­தி­யில் ­உ­ல­கப் ­பு­கழ்­பெற்­ற ­தி­ரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ­கோ­யில் ­உள்­ளது. கச்­சி­யப்­ப ­சி­வாச்­சா­ரி­யார் ­சி­வ­பெ­ரு­மா­னின் ­ஆ­தி ­இ­ருப்­பி­டங்­க­ளில் ­திபெத்­திலுள்­ள ­திருக்கை­யி­லா­ய­ம­லை­யி­னை யும்,  சிதம்­ப­ரம் ­கோயி­லையும்,  திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­தை­யும், ­கந்­த­பு­ரா­ணத்­தில் ­மி­க ­முக்­கி­ய­ ஆ­ல­யங்­க­ளா­க ­கு­றிப்­பிட்­டுள்ளார்.

கிட்­டத்­தட்ட 5,000 வரு­டங்­க­ளுக்­கு ­முற்­பட்­ட ­ப­ழை­மை ­வாய்ந்­த ­தி­ருக்­கோ­ணேஸ்­வ­ரத்­திற்­கு ­சுமார் 1,700 ஏக்­கர்­ ப­ரப்­ப­ள­வு ­நிலங்­கள் ­இ­ருந்­தன.

இங்­கு ­ம­கா­வ­லி ­கங்­கை ­அ­ரு­கி­லுள்­ள ­க­ட­லு­டன் ­க­லப்­ப­தால் ­இப்­ப­குதி ­மு­ழு­வ­தும்­ நீர்­வளம், நில­வ­ளம் ­பெற்­று ­செ­ழிப்­பா­க ­இ­ருந்­தது. மேலும் ­குறிஞ்­சியும், நெய்­தலும், முல்­லை­யும் ­ஒன்­று­சே­ரு­மி­டத்­தில் ­இத்­த­லம் ­அ­மைந்­தி­ருந்­தது.

சமுத்­தி­ரக்­க­ரை ­ஓ­ர­மா­க ­ம­லை ­அ­டி­வா­ரத்­தின் ­உச்­சி­யிலும், இடை­யிலும், அடி­வா­ரத்­தி­லு­மா­க ­மூன்­று ­பெ­ருங்­கோ­யில்­கள் ­இ­ருந்­த­தா­க ­வ­ர­லா­று ­கூ­று­கி­றது.

பின்­னர் கி.மு 306இல் ஏற்­பட்­ட ­க­டல்­சீற்­றத்­தி­னால் ­க­ட­லில்­மூழ்­கி ­விட்­ட­தா­க­வும் ­இன்­னும் ­ம­லை­யின் ­அ­டி­யில் ­க­ட­லுக்­கு ­மி­க ­அ­ரு­கில் ­ம­லைக்­கு­கை ­போன்­ற ­பண்­டை­ய ­கா­ல­கோ­யி­லை ­நினை­வு­ப­டுத்­தும் ­ப­கு­தி­கள் ­கா­ணப்­ப­டு­கின்­ற­ன ­என்­கி­றார்கள்.

இரா­வ­ணன் ­த­ன­து ­தா­யா­ரின் ­சி­வ­பூ­ஜைக்­கா­க ­தட்­சி­ண ­க­யி­லா­ய­மா­ன ­தி­ரு­கோ­ண­ம­லை­யைப் ­பெ­யர்த்­த­தா­க­வும் ­ஒ­ரு ­செய்­தி ­தட்­சி­ண ­க­யி­லா­ய­மா­ன ­தி­ரு­கோ­ண­ம­லை­யைப் ­பெ­யர்த்­த­தா­க­வும் ­ஒ­ரு ­செய்­தி ­தட்­சிண ­கயி­லா­ய­பு­ரா­ணத்­தில் ­உள்­ளது.

இதற்­குச் ­சான்­றாக ­ரா­வ­ணன் ­வெட்­டு ­என்­ற ­ம­லைப்­பி­ள­வு ­இன்­னும் ­இப்­ப­கு­தி­யில் ­கா­ணப்­ப­டு­கி­றது. கடல் ­சீற்­றத்­திற்­குப் ­பி­ற­கு ­கோ­யில் ­அ­ரு­கி­லுள்­ள ­சு­வா­மி­ம­லை ­எ­னப்­ப­டும் ­குன்­றின் ­உச்­சி­யில்­கோ­யில் ­மீண்­டும் ­அ­மைக்­கப்­பட்­டது.

கி.பி 7 ஆம் ­நூற்­றாண்­டில் ­சீ­ரும் ­சி­றப்­பு­மா­க ­வி­ளங்­கி­ய ­இக்­கோ­யி­லின் அ­ழ­கி­னைக் ­கேள்­விப்­பட்­ட ­தி­ரு­ஞா­ன ­சம்­பந்­தர் ­ரா­மேஸ்­வ­ரத்­தில் ­இ­ருந்­த­ப­டி­யே ­ஞா­னக்­கண் ­கொண்­டு ­குற்­ற­மில்­லா­தார் ­கு­றை­க­டல் ­சூழ்ந்த ­கோ­ண ­மா­லை­ய­மர்ந்தாரை… என ­தே­வா­ரப் ­ப­தி­கத்­தில் ­பா­டி­யுள்ளார்.

sivaperumanஅக்­கா­லத்­தில் ­தா­ம­ரைத்­தண்­டு  ­நூ­லி­னால் ­தி­ரி ­செய்­து­வி­ளக்­கேற்­றி   இக்­கோ­யி­லில் ­வ­ழி­பட்­டு ­வந்­தனர். இதன் ­கா­ர­ண­மா­க ­தி­ரி­தாய் ­என்­ற ­பெ­ய­ரும் ­உண்டு. இறை­வன் ­தி­ருக்­கோ­ணேஸ்­வரர், இறை­வி ­மா­து­மையாள், தல­வி­ருட்­சம்  ­கல்­லா­ல ­மரம், முத­லில் ­கல்­லால ­ம­ரத்­துக்­கு ­பூ­ஜை­செய்­து­விட்டு, பின்­ன­ரே ­மூல­வர் ­மற்­றும் ­கோ­யில் ­சன்­ன­தி­க­ளில் ­பூ­ஜை ­ந­டை­பெ­று­கி­றது.

இங்­குள்­ள ­மி­க ­முக்­கி­ய ­தீர்த்­தம் ­பா­வ­நா­சம் ­இ­தில் ­ தீர்த்­த­மா­டி­னால் ­பா­வங்­கள் ­தொலைந்­து­வி­டும் ­என்­ப­து ­நம்­பிக்கை. 1624இல் ஏற்­பட்­ட ­போர்த்­துக்­கீ­சி­ய ­ப­டை­யெ­டுப்­பில் ­இத்­தீர்த்­தக் ­கே­ணி­யை­யும் ­சு­னை­யை­யும்­ தூர்த்­து­ விட்­டனர்.

தற்­போ­துள்­ள ­கேணி­தீர்த்­தம் ­ஒ­ரு ­சி­று ­ப­கு­தி ­மட்­டு­முள்­ளது. அதுவும் படை­யி­னரின் ஆதிக்­கத்­தினுள் உள்­ளன.

இக்­கோ­யி­லை ­பல்­ல­வர்கள், சோழர்­கள் ­பாண்­டி­யர்­கள் ­மற்­றும் ­ப­ல ­அ­ர­சர்­கள் ­தி­ருப்­ப­ணி­கள் ­செய்­து ­மி­க ­நல்­ல­நி­லை­யில் ­வைத்­தி­ருந்­தனர். ஏரா­ள­மா­ன ­தங்­க ­ந­கை­க­ளும் ­ந­வ­ரத்­தி­னங்­க­ளும் ­இக்கோயிலுக்குச் ­சொந்­த­மா­க­ இ­ருந்­தன.

1624 வரு­டம் ­சித்­தி­ரை ­புத்­தாண்­டு ­தினத்­தில் ­சு­வா­மி ­மா­து­மை ­அம்­பாள் ­ச­மே­த ­திருக்­கோ­ணேச்­ச­ரப் ­பெ­ரு­மான் ­ந­கர்­வ­லம் ­வந்­த ­வே­ளை­யில் ­போர்த்­து­கீ­சி­யத் ­த­ள­ப­தி ­வீ­ரர்­க­ளு­டன் ­பக்­தர்­கள் ­போ­ல ­வேடமிட்டு ­  கோ­யி­லி­னுள் ­நு­ழைந்­து ­அங்கிருந்தவர்­களை ­வெட்­டிக் ­கொன்­று­விட்­டு ­கோ­யி­லி­லி­ருந்­த ­தங்­க ­ந­கைகள், நவ­ரத்­தி­னங்­கள் ­மற்­றும்­வெள்­ளிப் ­பொருட்களை ­கொள்­ளை ­அ­டித்­துச் ­சென்­றனர்.

டெம்­பிள்ஸ் ­அஃப்­த­வு­சண்ட் ­பில்லர்ஸ் ­என்­ற­ழைக்­கப்­பட்­ட ­இக்­கோ­யி­லின் ­தூண்­க­ளை­யும் ­கற்­க­ளை­யும் ­பெ­யர்த்­து ­எ­டுத்­த ­பின்பே, கோயி­லைத் ­தரை­மட்­ட­மாக்­கினான். அத்­தூண்­க­ளை­யும் ­கற்­க­ளை­யும் ­கொண்­டு ­பு­கழ்­பெற்­ற ­பி­ரட்­ரிக்­ தி­ரு­கோ­ண­ம­லை ­பி­ட­ரிக் ­கோட்­டை­யை ­பலப்­ப­டுத்­திக் ­கட்­டி­ய­தா­க­வும் ­வ­ர­லாறு.

ஆசி­யா­வி­லே­யே ­மி­கச் ­செ­ழிப்­பா­ன ­செல்­வ­வ­ளம் ­கொண்­ட ­இக்­கோ­யில் ­முற்­றி­லும் ­சூ­றை­யா­டப்­பட்­டது. பின்­னர் ­கேள்­வி­யுற்­ற ­பக்­தர்­களும், அர்ச்­ச­கர்­க­ளும் ­சி­ல ­முக்­கிய ­விக்­கி­ர­கங்­க­ளை ­உ­ட­ன­டி­யா­க ­அகற்றி, குளங்­க­ளி­லும் ­கி­ண­று­க­ளி­லும் ­மறைத்­து ­வைத்­தனர்.

சில ­விக்­கி­ர­கங்­க­ளை ­அ­ரு­கி­லுள்­ள ­தம்­ப­ல­கா­மம் ­என்­ற­ இ­டத்­தில் ­வைத்­து ­பி­ர­திஷ்­டை ­செய்­து ­ர­க­சி­ய­மா­க ­பூ­ஜை ­செய்­து ­வந்­தனர். என வரா­லா­று­களில் கூறப்­ப­டு­கின்­றது.

16-ஆம் நூற்­றாண்­டில் ­வந்­த ­கு­ளக்­கோட்­டன்­ என்­ற ­மன்­னன் ­இக்­கோ­யி­லை ­மீண்­டும் ­பு­துப்­பித்தான். குளக்­கோட்­ட­னின் ­தி­ருப்­ப­ணி­யால் ­அ­மைந்­த ­இவ்­வா­ல­யத்­தை ­போர்த்­து­கீ­சி­யர்­உ­டைப்­பார்கள். பின்­னர் ­அ­ர­சர்­கள் ­இ­த­னைப் ­பே­ண­மாட்­டார்­கள் ­என்­று ­கோ­யி­லின் ­எ­திர்­கா­லம் ­பற்­றி­ய ­கல்­வெட்­டுக்­க­ருத்­து ­நம்­மை ­வி­யக்­க ­வைக்­கி­றது.

போர்ச்­சுக்­கீ­சி­ய ­ப­டை­யி­னால் ­சி­தை­வ­டைந்­த ­இக்­கோ­யி­லின் ­ஒ­ரே ­ஒ­ரு ­தூண்­மட்­டும் ­பின்னர் 1870இல் சுவா­மி ­பா­றைக்­கு ­அ­ரு­கில் ­நி­னை­வுச்­சின்­ன­மா­க ­பக்­தர்­க­ளின் ­து­ணை­யால் ­நி­றுத்­தி­ வைக்­கப்­பட்டுள்ள­து ­ம­ன­தை ­ர­ண­மாக்­கு­கி­றது.

பிரிட்­டிஷ் ­ஆ­திக்­கத்­தின் ­போ­தும் ­எவ்­வி­த ­பூ­ஜை­க­ளும் ­இங்­கு­ந­டை­பெ­ற ­அ­னு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. 19 ஆம் ­நூற்­றாண்­டின் ­இறு­தி­யில் ­மா­லு­மிகள், பக்­தர்கள், சுவா­மி ­பா­தைக்­குச்­சென்­று பூ, பழம், தேங்­காய் ­உ­டைத்­து ­தங்­க­ள­து ­பி­ரார்த்­த­னை­க­ளை ­நி­றை­வேற்­றிக் ­கொண்­டனர்.

பின்னர் 1944 ஆம் ­ஆண்­டில் ­தி­ரு­கோ­ண­ம­லை ­நீர்த்­தேக்­கம் ­அ­மைக்­க ­அ­க­ழாய்­வு ­செய்­த­போ­து ­சி­ல ­விக்­கி­ர­கங்­கள் ­கி­டைத்­தன. பின்னர் 1950ஆம் ஆண்­டில் ­க­டற்­க­ரை ­அ­ரு­கில் ­பொ­துக்­கி­ண­று ­தோண்­டி­ய­போ­து ­மே­லும் ­சில­விக்­கி­ர­கங்­கள் ­கி­டைத்­தன. இறை­ய­ரு­ளால் ­அ­னை­வ­ரும் ­வி­யக்­க ­மா­து­மை­யாள் ­ச­மே­த ­கோ­ணேஸ்­வரர், சந்­தி­ர­கேசர், பார்­வதி, பிள்­ளையார், அஸ்­தி­ர­தேவர், வீர­சக்தி, அன்­னப்­ப­ற­வை ­மு­த­லா­ன ­தெய்­வத் ­தி­ரு­வு­ரு­வங்­கள் ­வெ­ளிப்­பட்­டன.

அவை அனைத்தும் 1952 ல் மாசி 23இல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மீண்டும் இக் கோயில் புத்துயிர் பெற்றது.

இங்கு ஆறு­கால பூஜைகள் நடை­பெ­று­கின்­றன. ஐம்பொன் மூர்த்­தங்கள் மிக வடி­வுடன் தேவ மண்­ட­பத்தில் காட்­சி­த­ரு­கின்­றன. சிவ­ராத்­திரி விழாவும், ஆடி அமா­வாசை பெரு­வி­ழாவில் எம்­பெ­ருமான் கடலில் தீர்த்­த­மா­டு­வதும்.பங்­குனி தெப்பத் திரு­வி­ழாவும் மிகச் சிறப்­பா­னவை. பாண்­டி­யனின் கயல்­சின்னம் பொறிக்­கப்­பட்­டி­ருப்­பது. இக்­கோ­யிலின் தொன்­மையை உணர்த்­து­கி­றது.

பின்னர் இலங்­கையில் இடம்­பெற்ற இன ரீதி­யான யுத்­த­சூழல் பல்­வேறு நெருக்­க­டி­க­ளை­ ஏற்­ப­டுத்­தின. இருந்தும் புன­ருத்­தா­ர­ணங்கள் இடம்­பெற்று 1992இல் கும்­பா­பி ­ஷேகம் இடம்­பெற்­றன. இந்த காலத்­தில்­கோ­யில்முன் 33 அடி உய­ர­மா­ன­ சி­வ­பெ­ருமான் சிலை ஒன்று அமைக்­கப்­பட்­டது.

மீளவும் கடந்த ஆண்­டி­லி­ருந்து   மீள்­பு­ன­ருத்­தா­ரண நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இப்­ப­ணி­களில் தேர்­வீ­தி­ய­மைத்தல் பணி நிகழ்வு மேடைப்­பணி என்­பன திட்­ட­மிட்டு தடுக்­கப்­ப­டு­கின்­றன.

உள்­ளக பணி­க­ளுக்கு மட்டு மே ஆத­ரவு கிடைத்­த­நி­லையில் ஆலய உள்­ப­கு­தியில் பல்­வேறு மாற்­றங்கள் வர­லாற்று சிற்ப வடி­வங்கள் செய்­யப்­பட்டு புதி­தாக கண்­ணைக்­க­வரும் வண்­ணப்­பூச்சி வேலை­களும் செய்யப்­பட்­டன.

அண்­மையில் உள்ளக பணிகள் செய்யும் போது 3 அடி உய­ரத்­தி­லான பெரிய நந்­தி­தேவர் தோன்­றி­ய­மையும் அது­வீதி ஓரத்தில் பிர­திஸ்டை செய்­யப்­பட்­டுள்­தையும் காணலாம்.

இந்த நிலை­யி­லேயே மகா கும்­பா­பி­ஷேகம்  இன்று  11.2.20015 இல் இடம்­பெ­ற­வுள்­ளது. இத­னை­முன்­னிட்டு கிரியை கள் நேற்று சனிக்கிழமை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுடன் ஆரம்பமாகின எதிர் வரும் 10ஆம் திகதி வரை இது தொடர்ந்து இடம்பெறவுள்ளன.

-பொன்.சற்சிவானந்தம்

Share.
Leave A Reply

Exit mobile version