இங்கிலாந்தின் முக்கிய கால்பந்து அணிகளில் ஒன்றான செல்சீ அணியின் ரசிகர்கள் குழு ஒன்று ”நாம் இனவாதிகளாக இருப்போம்’‘ என்று கோஷமிட்டுக்கொண்டு, பிரான்ஸில் சுரங்க ரயிலில் இருந்து ஒரு கறுப்பு இன நபரை தள்ளிவிட்டது  ஐரோப்பா எங்கிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னை ரயிலில் இருந்து தள்ளியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார்.

தான் இது தொடர்பாக போலீஸில் முறைப்பாடு செய்யவிருப்பதாக சொவ்லேமான் என்னும் அந்த நபர் பிரஞ்சு பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.

பிரான்ஸில், செல்சீ அணி ஆடிய கால்பந்து ஆட்டம் ஒன்றை அடுத்து அங்கு சுரங்க ரயிலில், இனவாத கோஷம் எழுப்பியவாறு வந்த அந்த அணியின் ரசிகர்கள் சிலர், அந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு கறுப்பு இனத்தவரை தடுத்து, கீழே தள்ளியது.

இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் இங்கு இங்கிலாந்திலும் பெரும் கோபத்தை கிளறியுள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் இனவாத எதிர்ப்பு குழுக்கள், உலக கால்பந்து சம்மேளனம், செல்சீ மற்றும் ஏனைய கால்பந்து அணிகள் பல ஆகியனவும் இது குறித்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version