நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார்.
பதவியேற்ற பின்னர் ஆஷ்டான் கார்டர் உரையாற்றினார். அப்போது, அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் நின்றனர்.
ஆஷ்டான் கார்டர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியின் தோள்பட்டையின் மீது கையை வைத்த ஜோ பிடேன், அவரது தலை முடியை மிகவும் நெருக்கமாக சென்று முகர்ந்து பார்த்தார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பிடேனின் நடவடிக்கையை பலரும் விமர்சித்துள்ளனர். “நீங்கள் மீண்டும் உங்களது நடவடிக்கையின் மூலம் முட்டாள் என்று நிரூபித்துவிட்டீர்கள்” என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக துணை அதிபர் ஜோ பிடேனின் அலுவலகம் தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஆஷ்டான் கார்டர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியவில்லை என்றாலும், பாதுகாப்புதுறையில் பல்வேறு அதிகாரிகள் பணியினை செய்து வந்துள்ளார்.
முதல் நாள் பணியில் சேர்ந்த போது உடன் வந்த மனைவி ஸ்டீபனி வழுக்கி விழுந்துவிட்டார். அதனை மனதில் கொண்டே, அவரிடம் நலம் விசாரித்து தேற்றும் விதமாகவே அவ்வாறு நடந்துகொண்டதாக பென்டகன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆறுதல் சொல்றதுனாலும் அக்கம் பக்கம் பார்த்து சொல்லுங்கப்பா!